முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என்று திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக கட்சித் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செய்த எண்ணற்ற சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். கருணாநிதியின் நினைவினைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 7 அன்று சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் கடற்கரை நினைவிடம் வரை தனது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி நினைவிடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நடைபெறுகிற முதல் அமைதிப் பேரணி இது என்றும் தெரிவித்துள்ளார்.
: திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது – ஈபிஎஸ்
கடல் அலைகளின் தாலாட்டில் நம் நினைவலைகளாக நெஞ்சில் நிறைந்துள்ள உயிர்நிகர்த் தலைவரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகங்களில் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி நன்றியினைச் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.