தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இதை முன்னிட்டு இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் என்பது வந்து கொண்டிருக்கிறது. இதனை அமைச்சர்கள் சிலர் கூட மறைமுகமாக கூறுகிறார்கள். இதன் காரணமாக இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 11:00 மணிக்கு அமைச்சரவை கூட்டம் தொடங்கும் நிலையில் முதல்வரின் அமெரிக்கா பயணம் குறித்த ஆலோசனை முக்கியமான நிகழ்வாக இருக்கும்.
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறதே என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கோரிக்கை வலுத்துள்ளதே தவிர இன்னும் பழுக்கவில்லை என்றார். குறிப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் வருகிற 19ஆம் தேதிக்கு மேல் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும் இதனால் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தின் போது துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.