காங்கிரசின் சார்பில் சர்வோதயா சங்கம் என்ற அமைப்பு அரசியல் தொடர்புள்ள பல பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது.
இந்தப் பயிற்சி பட்டறையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டும் அல்லாது பொது மக்களின் மீது அக்கறை கொண்ட எவரும் கலந்து கொள்ளலாம்.அரசியல் அமைப்பின்பால் மிகுந்த நம்பிக்கையும், மக்களின் மீது அளவற்ற அன்பும் கொண்ட எந்த நபரும், சங்கம் நடத்தும் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ள தகுதி பெறுகிறார்கள்.பெரும்பாலும் சங்கத்தின் பயிற்சி பட்டறைகள் மகாராஷ்டிராவில், வர்தா, சேவாகிராமில் உள்ள காந்தி ஆசிரமத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு ஹிந்தி மொழி சிறிது கடினமாக இருப்பதன் காரணமாக சர்வோதயா சங்கம் அவ்வப்போது தமிழ்நாட்டிலும் இந்த பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது.போன வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு பயிற்சி பட்டறை தமிழகத்தில் நடந்தது.
தற்போது மீண்டும் “அஹிம்சையின் பாதையில்” என்ற நான்கு நாள் உள்ளரங்கு பயிற்சி பட்டறை திண்டுக்கல்லுக்கு அருகில் நடக்க உள்ளது.காந்திய கொள்கைகள் மீது மதிப்பு உள்ளவர்கள், அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், சிறந்த மாற்று அரசியலை, மக்களுக்கான நல்ல அரசியலை தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த பயிலரங்கத்திற்கு வரவேற்கிறோம்.
அகிம்சா கே ராஸ்தே அஹிம்சையின் பாதையில் சமூகம், அரசியல் மற்றும் குடிமக்களாக நமது பங்கு குறித்த சிந்தனைப் பகிர்தல்கள். அகிம்சா கே ராஸ்தே நமது சமூகம், அரசியல் மற்றும் அனைவருக்குமான ஒன்றிணைந்த எதிர்காலத்தை குறித்த நமது சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு பயிலரங்கம்.
பங்கேற்பாளர்கள் தமது சம காலத்தை உணர்வதற்கும், நமது நாட்டையும், நமது அரசியலையும் அரசியல் அமைப்பின் பாதையில், கருணையுடன் வைத்திருக்க நம்மால் என்ன செய்ய இயலும் என்பதை உணர்வதற்கும் உதவுவதே இந்த பயிலரங்கத்தின் நோக்கம்.
நான்கு நாட்கள் நடக்கும் உள்ளரங்கு பயிற்சியின் உள்ளடக்கம்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, அகிம்சையின் முக்கியத்துவம், மகாத்மா காந்தியின் சுயராஜ்யத்தை குறித்த சிந்தனை, அரசியல் அமைப்பு எவ்வாறு நமது தேசத்தை கட்டமைக்கிறது.
உண்மையான பன்முகத்தன்மை மற்றும் சமூகத்தில் அதன் தாக்கங்கள், அரசியல் சாசனத்தை அரசியல் ரீதியாக எப்படி நிலை நிறுத்துவது, அரசியல் செய்தல் என்பது என்ன மற்றும் ஒரு சிறந்த தொண்டராக இருப்பது எப்படி, இன்றைய அரசியல் அமைப்பின் நிலை மற்றும் தற்போதைய பிரச்சனைகள் குறித்த வெளிப்படையான விவாதம், தனிநபர், நிறுவனம் மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கான புதிய நடவடிக்கைகள்.
முகாம் நாட்கள்: 2024 செப்டம்பர் 9 முதல் 12 வரை
இடம் : லைஃப் சென்டர், நொச்சியோடைப் பட்டி, கூவந்து, திண்டுக்கல், தமிழ் நாடு.
உங்கள் பெயரை வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண் 91521 11152
சங்கம் குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல்: HELLO@SARVODAYASANGAM.COM
இணையதளம்:
https://sarvodayasangam.com
இது அருமையான மற்றும் அரிதான வாய்ப்பும் கூட. மூன்று இரவுகள் நான்கு நாட்கள் உணவு மற்றும் இருப்பிடத்திற்கான குறைந்தபட்ச பங்களிப்பு ₹2500.
காங்கிரஸ் கட்சியின் பயிற்சி பிரிவின் தலைவர் திரு சச்சின் ராவ் அவர்களின் பயிற்சி முகாம்.
அவசியம் கலந்து கொள்ளுங்கள். ஜெய் ஜெகத்…