தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு வேண்டாம்.
மாணவர்களே பெற்றோர்களே உங்கள் எதிர்ப்பை 50 பைசா செலவில் எழுதி அனுப்புங்கள்.
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஒரு குழுவை அமைத்து இருக்கிறார்.
அந்த குழுவின் தலைவராக நீதியரசர் A.k. ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு ஒன்று நியமித்திருக்கிறார்.
பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என தமிழகத்தில் உள்ள குடிமக்கள் யாராக இருந்தாலும் எதற்காக நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்ற காரணத்தை உடனடியாக பின்வரும் முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நானும் எனது எதிர்ப்பை இன்று மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்துள்ளேன்.
நீட் தேர்வை எதிர்க்கும் மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ 23-06-2021க்குள் பதிவு செய்து விடுங்கள்.
அனுப்புனர்:
வெண்மணி வரதராஜன்,
1/23 வடக்கு தெரு,
பெரிய வெண்மணி அஞ்சல்,
குன்னம் வட்டம்,
பெரம்பலூர் மாவட்டம்.
பின் – 621704.
Email – varadan.ram@gmail.com
பெறுநர்:
நீதியரசர் மாண்புமிகு A.K. ராஜன் குழு ,
மருத்துவ கல்வி இயக்குனரகம் ,
மூன்றாம் தளம் ,
கீழ்பாக்கம் ,
சென்னை 600010,
மின்னஞ்சல் – neetimpact2021@gmail.com
“இது மக்களால் உருவாக்கப்பட்ட மக்களாட்சி. இங்கே அனைத்துக் குடி மக்களுக்கும் ஒரே மாதிரியான சமமான நீதி கிடைக்க வேண்டும். இத்தனைக்காலங்கள் எங்களுக்கு கல்வியைத் தராமல் அதுவும் பணக்காரர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி என தரம் பிரித்து வழங்குகிறீர்கள். அனைவருக்கும் சமமான தரமான ஒரே கல்வியை வழங்காமல் எவ்வாறு எங்களுக்குத் தகுதித் தேர்வை நடத்துவீர்கள். முதலில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வியை எங்களுக்கு வழங்குங்கள். அதன்பின் தகுதிதேர்வை (NEET) நடத்துங்கள். அதுவரை நீட் தேர்வு நடத்துவது எங்களுக்கு இழைக்கும் அநீதி ஆகும்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
வெண்மணி வரதராஜன்,
பெரம்பலூர் மாவட்டம்.
19-06-2021.