Wednesday , December 17 2025
Breaking News
Home / உலக சாதனை / உலகில் முதல்முறையாக பனையோலையில் உருவாக்கப்பட்ட தேசியக்கொடி – உலக சாதனை
NKBB Technologies

உலகில் முதல்முறையாக பனையோலையில் உருவாக்கப்பட்ட தேசியக்கொடி – உலக சாதனை

பூந்தமல்லி அருகே சொரன்சசேரி என்ற பகுதியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகின் முதல் முயற்சியாக பனை ஓலையில் இந்திய தேசிய கொடியினை தமிழ் கொடி என்பவர் தயாரித்து உலக சாதனை படைத்து . லிங்கன் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். இந்த சாதனையை அமைப்பின் தலைவர் Dr.ஜோசப் இளந்தென்றல் அங்கீகரித்து சான்றிதழ் வாழங்கினார். இந்த நிகழ்வில் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் அடையாள அட்டை வழங்கி கவுரவித்தார். தலைமை நிர்வாக அதிகாரி Dr. செல்வம் உமா அவர்கள் உலக சாதனையை ஆய்வு செய்தார்.காலை 8:10 மணி அளவில் துவங்க பட்ட இந்த முயற்ச்சி சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது. இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த PFA அமைப்பிற்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கபட்டது.இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற காவல் துறை தலைமை அதிகாரி பாலசந்தர், சதேசி இயக்க தலைவர் குமரி நம்பி, வழக்கறிஞர் மோசஸ் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகிகள் ஸ்டீபன் சீனிவாசன் சாலமன் தினேஷ் ஹரிஹரன் இலக்கியா சஞ்சய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES