ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அவசர அவசரமாக நாட்டை விட்டு ஓடி விமானத்தில் பறந்து விட்டார். இந்த இக்கட்டான சூழலில் நாட்டின் அதிபர் மக்கள் உயிர் காக்க நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் தான் மட்டும் முண்டியடித்துக் கொண்டு தப்பி இருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் பயத்தின் காரணமாக அங்கிருந்து வெளியேறும் முயற்சியில் காபூல் விமான நிலையத்தில் இரவு பகலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் அதன் தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களை அங்கிருந்து அவரவர் தாயகம் அழைத்து வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் அனைத்து விமானங்களும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர் தலிபான்கள். இது குறித்து செய்தி தொடர்பாளர் போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தாங்கள் சர்வதேச நாடுகளுடன் அமைதியான முறையில் நல்ல பந்தத்தை தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று அறிவித்து விட்ட போதிலும் தலிபான்கள் ஆக்ரோஷமாக திரியும் அவர்களை கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்கின்றனர்.
மக்களை காப்பாற்ற வேண்டிய ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தாலிபன்கள் வருவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகின்றது. காப்பாற்ற வேண்டிய அரசு தங்களை கைவிட்டுவிட்ட நிலையில் நெருக்கடியான நிலையில் தாலிபான்களால் எந்த நேரமும் தங்களுக்கு எதுவும் நேரலாம் என்று பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே 100க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள், அரசு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர், யாரையும் கொல்ல மாட்டோம் மக்கள் தங்கள் உடமைகளை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று தலிபான் செய்தி தொடர்பாளர் சார்பில் நேற்று மாலை உத்தரவாதம் அளித்தார், இருப்பினும் தலைநகர் காபூல் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் பொது மக்கள் தாலிபான்களுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அதேபோல் ஆயிரக்கணக்கான மக்கள் வங்கிகளில் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அதிலிருந்து வெளியேற முனைப்பு காட்டி வருகின்றனர்.
ஆனால் தாலிபன்கள் பொதுமக்களிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் அமைதியான முறையிலேயே நகரங்களை கைப்பற்றி இருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் பலவும் தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கையில் முழுமையாகச் சென்று விட்ட நிலைமை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க அமெரிக்கா அரசு அவசர கூட்டத்தை கூட்டியது.கடந்த சில தினங்களில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்கா தனது படைகளை மீண்டும் அதிகப்படுத்தினால் இருதரப்பு மோதல் ஏற்படலாம் என்று தெரிகிறது.
யார் இந்த தலிபான்கள்?
தலிபான் எனப்படுவோர் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த சுணி இஸ்லாமிய தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் “தலிபான்” பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் கெரில்லா முறையில் போரிட்டு வருகிறது.
தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். தலிபானின் படைகளில் பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும் மேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பாஷ்டன் மக்கள் ஆவார். இவர்களைவிட சிறிய அளவில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த தீவிரவாதிகளும் இவ்வமைப்பில் உள்ளனர். தலிபான் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளையும் பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர்.
குறிப்பு : பெண்கள் கல்விக்கு எதிர்ப்பாளர்களான இவர்கள் பெண்கள் படிக்கும் கல்லூரி,மற்றும் பள்ளிகளில் அமைந்துல்ள நீர்தொட்டியில் விசத்தைக் கலந்தும், பள்ளியின் வகுப்பறையில் விச வாயுவை தெளித்தும் பெண்கள் கல்வியை அழிக்கப்பார்க்கிறார்கள்.