வனத்துறை அமைச்சர் திரு. ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் வள்ளிமலை, ஆர். கோம்பை வனப்பகுதிகளை காப்பு காடுகளாக (Reserve forest) அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த இரண்டு வனப் பகுதிகளையும் காப்பாற்ற மக்களை திரட்டி ஓராண்டு காலமாகப் போராடினோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக வனப்பகுதிகளை அழிக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட்டது.
இந்தப் பிரச்சனையை பொறுமையாக முழுக்கப் படித்து புரிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் மிக நிச்சயமாக காப்பு காடுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இத்துடன் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி வட்டாரத்தில் கண்ணூத்து, எண்டபுளி, முத்தாழ்வார்பட்டி, உசிலம்பட்டி, செவல்பட்டி, பிடாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் காட்டு மாடுகள் வயலுக்குள் புகுந்து வெள்ளாமையை அழித்து வருகின்றன. வனப்பகுதிக்குள் தண்ணீர் பற்றாக்குறையால் மாடுகள் வயல் வெளிக்குள் வருகின்றன. இதை தடுக்க வனப்பகுதிக்குள் குளங்கள் அமைக்கவும் வனப் பகுதியைச் சுற்றி சோலார் வேலி அமைக்கவும் கேட்டுக் கொண்டேன்.
மேலும் மருங்காபுரி வட்டாரத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் வனப்பகுதியில் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டேன்.
அனைத்தையும் விரைவில் பரிசீலிப்பதாக அமைச்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்.
அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் கூறி கொண்டதாக கரூர் ஜோதிமணி, MP அவர்கள் முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.