Monday , July 28 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 25)

Kanagaraj Madurai

மதுரையில் ஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளியில் பிரமாண்டமாக 100 அடி உயர கம்பத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை எஸ்.பி.சிவபிரசாத் ஏற்றி வைத்தார்.

மதுரை துவரிமான் அருகே உள்ள ஸ்ரீ அரவிந்தோ மீரா பிரபஞ்சப் பள்ளி, மதுரையில் ஒரு வரலாற்று நிகழ்வை பெருமையுடன் நிகழ்த்தியது. நகரத்தில் உள்ள பள்ளிகளிலேயே முதல் மற்றும் உயரமான 100 அடி தேசியக் கொடிக்கம்பத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் ஐ.பி.எஸ் அவர்கள் பிரமாண்டமான 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் …

Read More »

மதுரை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்த பொறியியல் பிரிவு பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்.!

மதுரை மாநகராட்சியில் வரி வசூலிக்கும் பணியை தனியார் மூலம் மேற்கொள்ள உள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. அரசுத்துறைகளை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில், மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்கம், தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் இணைந்து மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து முறையிட்டனர். அவர்கள் கூறியதை கவனமாக கேட்டறிந்த ஆணையாளர் இணையதளம் மூலமாக பணம் செலுத்தும் …

Read More »

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : விவசாயிகள் வெளிநடப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருமங்கலம், மேலூர் பாசன கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து திருமங்கலம் பகுதி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்:- 21/04/2010 அன்று அன்று திருமங்கலம் கால்வாய், கள்ளந்திரி கால்வாய், மேலூர் கால்வாய் மூன்றுக்கும் ஒன்றாக தண்ணீர் திறந்து விட …

Read More »

சாதனை படைத்த மாணவிக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள் வாழ்த்து.!

சீனாவின் ஹாங்காங் நகரில் நடைபெற்ற 19-வது ஏசியன் ரோலர் ஹாக்கி போட்டியில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ ஹர்ஷினி,3-வது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். சாதனை படைத்த அவருக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா தேசிய இயக்குனர் சர்க்கார் அவர்களின் ஆலோசனைப்படி, மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிச்சைவேல் தலைமையில் சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. …

Read More »

உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டி தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து உசிலை சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் மாநில கௌரவ தலைவர் எம்.பி.ராமன் உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் …

Read More »

தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அஜீத் திருமணத்தை சங்கத் தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவிலில், தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அஜீத் திருமணத்தை சங்கத் தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். இவ்விழாவில் சங்க பொதுச்செயலாளர் மாஸ்.மணி, பொருளாளர் சின்னமணி, இன்சூரன்ஸ் ராஜா, ஷேக் அப்துல்லா, செயற்குழு உறுப்பினர் டாக்டர் சின்னச்சாமி, இணைத்தலைவர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் கனரா சோனி, செயற்குழு உறுப்பினர் முருகேசன்,செல்வம், ஜெயந்தி, மங்கையர்திலகம், …

Read More »

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் நிர்வாகிகள் போஸ், சரவணராஜ், கந்தராஜ், பன்னீர்செல்வம், முருகேசன்,பாஸ்கர், ஆகியோர் உள்ளனர்.

Read More »

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக”கண் பரிசோதனை முகாம்.1000 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் “மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை” சார்பாக சர்க்கரை நோயாளிகளுக்கான “கண் பரிசோதனை முகாம்” நடைபெற்றது. இந்நிகழ்விற்கு டாக்டர் கிம் தலைமை தாங்கினார். டாக்டர் நரேஷ் பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் சிறப்பாக செய்திருந்தார். இதில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் டாக்டர் சிவதர்ஷன் மற்றும் கோமதி, கிருஷ்ணவேணி, …

Read More »

சாத்தையாறு அணையை தூர்வாரக்கோரி முத்துராமன்ஜி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

மதுரை மாவட்டம் சாத்தையாறு அணையை தூர் வாரி, ஷட்டரை பழுது பார்க்க வேண்டும் எனவும்,அணைக்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள்‌ மர்ம‌நபர்கள் அடைத்து வைப்பதை‌ தடுக்க‌ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர்‌‌ முத்துராமன் ஜி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார் அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது ‘மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சாத்தையாறு அணை மொத்தம் 29 அடி ஆழம் …

Read More »

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்ற மதுரை மேலமாசி வீதி – வடக்கு மாசி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் …

Read More »
NKBB TECHNOLOGIES