Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு
NKBB Technologies

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்ற மதுரை மேலமாசி வீதி – வடக்கு மாசி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் ஆலயத்தில் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலக கோப்பை போட்டோ இடம் பெற்ற பெரிய பதாகையை வைத்து அர்ச்சனை செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட அனைத்து வீரர்களின் பெயர்களை தனித்தனியாக சொல்லி சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ‘ஆல் த பெஸ்ட்’ இந்தியா என்ற கோஷம்‌ முழங்க 1008 தேங்காய் உடைத்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் மற்றும் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் நெல்லை பாலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்த‌பாண்டி, அத்வி மீடியா ஆதவன், விநாயகா இம்பெக்ஸ் மகேந்திரன், சுப்பிரமணியன், ஆர்.குமார், திருநகர் ரோட்டரி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நியூசிலாந்து அணியுடன் ஆடிய அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி, ஏற்கனவே மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES