மதுரை, நவம்பர்.17-
மதுரையில் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில் :-
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் பதிவேற்று தரும் அதிகாரிகளுக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிராமப்புற கூட்டுறவு வங்கிகளில் உள்ள இ.சேவை மையங்களுக்கு
விவசாயிகள் சிட்டா, பட்டா சம்பந்தமாக சென்றால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உரிய மரியாதை கொடுப்பதில்லை.
இதனால் விவசாயிகள் நகரங்களில் உள்ள இ.சேவை மையங்களை அணுகி வருகின்றனர். எனவே அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்
எனவே விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக கறவை மாடுகள் வாங்குவதற்கு அரசு கூட்டுறவு வங்கிகளின் மூலம் வட்டியில்லா கடன் வழங்குகிறது. இந்த வட்டியில்லா கடன் பெறுபவர்கள் பசு மாடு வாங்க வேண்டும் என கடன் பெற்று விட்டு பசு மாடுகளை வாங்காமல் வேறு பணிகளுக்கு அந்த தொகையை பயன்படுத்துகின்றனர். எனவே கடன் வழங்கும் அதிகாரிகள் கடன் வழங்குவதோடு நமது பணி முடிந்து விட்டது என நினைக்காமல் கடன் பெற்றவர்கள் பசு மாடு வாங்கியுள்ளனரா.? அதை முறையாக பராமரிக்கின்றார்களா என கண்காணிக்க வேண்டும்.
மேலும் கூட்டுறவு துறை விவசாயத்திற்காக வாங்கிய டிராக்டர்கள் மற்றும் கலப்பைகள் பழுதாகி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். தனியார் டிராக்டர்களுக்கு அதிக வாடகை கொடுத்து வருகின்றனர். டிராக்டர் பழுதை சரி செய்து தர வேண்டும். இல்லையென்றால் புதிதாக வாங்க வேண்டும்.என பேசினார்.