மதுரை மாநகராட்சியில் வரி வசூலிக்கும் பணியை தனியார் மூலம் மேற்கொள்ள உள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அரசுத்துறைகளை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில், மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்கம், தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் இணைந்து மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
அவர்கள் கூறியதை கவனமாக கேட்டறிந்த ஆணையாளர் இணையதளம் மூலமாக பணம் செலுத்தும் முறையை மட்டுமே தனியார் மூலம் கையாளுவதாகவும் வரி வசூல் செய்யும் பணியை தனியாருக்கு வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் பல்வேறு நிலுவைக் கோரிக்கைகளை குறித்தும் பேசப்பட்டது. இதுகுறித்து விரைவில்
நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.நீதிராஜா, மாவட்ட இணைச்செயலாளர் ஆ.பரமசிவன், மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ், ஜெ.சிவகுரும்பன் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க மாநில தலைவர் முருகானந்தம், மாநில துணைப் பொதுச்செயலாளர் சி.மகுடீஸ்வரன், மாநிலத்துணைத் தலைவர் எம்.பஞ்சவர்ணம், மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் கே.டி.துரைக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி நகர சுகாதார செவிலியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.