தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தீக்கதிர் அலுவலகம் எதிரே உள்ள திருவள்ளுவர் நகரில் இரத்த தானம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த பரிசோதனை முகாமில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். …
Read More »கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் எதிர்ப்பு..!
கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் செயலுக்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல்மூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து பேசினார் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி மற்றும்பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் மற்றும் வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்து விவசாயிகள் ஏராளமானோர் …
Read More »மதுரை மாவட்டம் ஆலாத்தூரில் நேயா டிரஸ்ட் அலுவலகம் திறப்பு விழா..!
மதுரை மாவட்டம் ஆலாத்தூரில் நேயா டிரஸ்ட் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மடீட்சியா செயலாளர் கோடீஸ்வரன் அலுவலகத்தை திறந்து வைத்தார். ஆலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நேயா டிரஸ்ட் நிறுவனர் அமுதா சதீஸ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். மடீட்சியா துணைத் தலைவர் அசோக் மரக்கன்றுகளை வழங்கினார்.தமிழ்நாடு மெர்க்ககன்டைல் வங்கியின் ஓய்வு பெற்ற மதுரை முதுநிலை மேலாளர் அய்யம்பெருமாள், ஓய்வு பெற்ற …
Read More »மதுரையில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!
ராகுல் காந்தி எம்.பி யின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை செல்லூர் அய்யனார் கோயில் அருகில் உள்ள வி.என்.ஆர் நீதிராஜாராம் கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை கோரிப்பாளையம் பள்ளிவாசலில் துவா செய்யப்பட்டு ஏழைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் மீர்பாஷா தலைமை வகித்தார். பின்னர் காந்தி மியூசியம் அருகே …
Read More »ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் முதலாம் ஆண்டு விழா..!
ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு பகுதியில் ஏழை முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் டாக்டர் முரளி பாஸ்கர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் தலைமை வகித்தார். டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். இதில் சக்திவேல், கே.ஆர்.கே ராதாகிருஷ்ணன், பாண்டி, சுரேஷ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Read More »ரஜினியின் தீவிர ரசிகரின் மகளின் கல்லூரி கல்வி கட்டணத்தை செலுத்திய ரஜினி ரசிகர் மன்ற மதுரை நிர்வாகிக்கு குவியும் பாராட்டு..!
மதுரையில் ரஜினியின் தீவிர ரசிகரின் மகளின் கல்லூரி கல்வி கட்டணத்தை செலுத்திய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு குவியும் பாராட்டு..! மதுரை,ஜூன்.17- மதுரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீவிர ரசிகரின் மகள் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் கல்வி பயில முடியாமல் இருந்ததை கேள்விப்பட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைச்செயலாளர் அழகர்சாமி தனது சொந்த செலவில் ஒரு லட்சம் ரூபாயை வழங்க முன் வந்தார். நிதி உதவி வழங்கிய அவருக்கு …
Read More »உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மதுரை மருத்துவக் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி..!
உலக இரத்த கொடையாளர் தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இரத்த கொடை பற்றிய விழிப்புணர்வு தகவல் கல்வி தொடர்பு பதாகைகளை திறந்து வைத்தபின் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். ஆட்சியரக வளாகத்தில் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகளின் இரத்த தான விழிப்புணர்வு நடைபேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.நடை பேரணி பனகல் சாலை வழியாக அரசு இராசாசி மருத்துவமனை கூட்ட அரங்கை …
Read More »மதுரை மாவட்ட நபார்டு வங்கி நிதி உதவி பெற்று சாஜர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு விழா..!
மதுரை மாவட்ட நபார்டு வங்கி நிதி உதவி பெற்று சாஜர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு விழா மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டு உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியின் நிறைவு நாள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகள் 50 நபர்கள் கலந்து …
Read More »தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்னாள், இந்நாள் மாணவர்கள்..!
தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆலமரம், அரசமரம், வில்வமரம், அத்தி மரம், நாவல் மரம் உள்ளிட்ட மரங்கள் நடும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தன்னார்வலர் த. ராம்குமார் மரம் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக நன்செய் தன்னார்வ அமைப்பு …
Read More »மதுரையில் அனைத்து தெலுங்கு அமைப்புக்கள் இணைந்து நடத்திய பேரரசி ராணி மங்கம்மாளின் பிறந்தநாள் விழா..!
மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் அனைத்து தெலுங்கு அமைப்புக்கள் இணைந்து நடத்திய பேரரசி ராணி மங்கம்மாளின் 375 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த நாயுடு நாயக்கர் அசோசியேசன் மாநிலத் தலைவர் பி.வி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஜயநகர பேரரசு வரலாற்று மீட்பு குழுவின் தலைவர் கே.பி.ஆர்.சென்ராஜ் நாயுடு மற்றும் அனைத்து மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர் மணப்பந்தல் எஸ்.கே.ஆர் பாஸ்கர், இந்து …
Read More »