மதுரை மாவட்ட நபார்டு வங்கி நிதி உதவி பெற்று சாஜர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு விழா
மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டு உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியின் நிறைவு நாள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகள் 50 நபர்கள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சிக்கு நபார்டு தேசிய வங்கியின் நிதி உதவி பெற்று சாஜர் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆனது பயிற்சியினை 30 தினங்களில் 32 வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் பேக்கரி பொருட்கள் தயாரிக்க சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தியது.
அதன் நிறைவு நாளில் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி தலைமையில், மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மற்றும் மதுரை நபார்டு வங்கியின் பொது மேலாளர் சக்திபாலன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் மற்றும் சாஜர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஜாஸ்மின் ராஜ்குமார் மற்றும் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்ற சிறைவாசிகளுக்கு சான்றிதழும் தொடர்ந்து தொழில் புரியும் விதமாக தொழில் கருவிகளும் வழங்கினார்கள்.
இப்பயிற்சியில் ஹெல்த் மிக்ஸ், கவுனி கஞ்சி மிக்ஸ், பல தானிய அடை மிக்ஸ், சப்பாத்தி மிக்ஸ், ராகி இட்லி மிக்ஸ், வரகரசி முறுக்கு, குதிரைவாலி ரிப்பன் பக்கோடா, கம்பு மிளகு சேவு, கம்பு ஓமப்பொடி, வரகரிசி பட்டர் சேவு, கம்பு லட்டு, கருப்பு கவுனி மிக்ஸ், வரகு களி மிக்ஸ், சோளபணியாரம், சோளபக்கோடா, சிவப்பரிசி இடியாப்ப மாவு மிக்ஸ், ராகி புட்டு மிக்ஸ், சாமை தட்டை ராகி அல்வா, ராகு சாக்கோ கேக் உள்ளிட்ட 32 வகையான இனிப்பு கார வகைகள் தயாரிக்கும் முறை கற்றுக் கொடுக்கப்பட்டது.
பயிற்சியின் இறுதியில் பேக்கிங் மிஷின், சீலிங் மெஷின், தராசுகள், பேக்கிங் ஸ்டிக்கர், பாட்டில் வகைகள், பேக்கிங் கவர் மெட்டீரியல்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இவர்கள் மூலம் தயார் செய்யப்படும் சிறுதானிய பொருட்கள் சிறை சந்தையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் முடிவில் சாஜர் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி நசீம்பானு நன்றி கூறினார்.