உலக இரத்த கொடையாளர் தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இரத்த கொடை பற்றிய விழிப்புணர்வு தகவல் கல்வி தொடர்பு பதாகைகளை திறந்து வைத்தபின் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
ஆட்சியரக வளாகத்தில் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகளின் இரத்த தான விழிப்புணர்வு நடைபேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.நடை பேரணி பனகல் சாலை வழியாக அரசு இராசாசி மருத்துவமனை கூட்ட அரங்கை அடைந்தது. அதன்பின் கருத்தரங்கம் நடைபெற்றது. இரத்த கொடையாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன், இணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர் செல்வராஜ், மாவட்ட இரத்த பரிமாற்று அலுவலர் டாக்டர் சிந்தா, மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி உட்பட டான்சாக்ஸ் பணியாளர்கள் இரத்த வங்கி அலுவலர்கள், செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், 153 முறை இரத்த தானம் செய்த ஜோஸ், 114 முறை இரத்த தானம் செய்த வரதராஜன் மற்றும் பாம்பே குரூப் போன்ற அரிய வகை இரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.