Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்னாள், இந்நாள் மாணவர்கள்..!
NKBB Technologies

தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்னாள், இந்நாள் மாணவர்கள்..!

தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆலமரம், அரசமரம், வில்வமரம், அத்தி மரம், நாவல் மரம் உள்ளிட்ட மரங்கள் நடும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தன்னார்வலர் த. ராம்குமார் மரம் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக நன்செய் தன்னார்வ அமைப்பு நிறுவனர் பசுமை செந்தில், அற நல்லுலகம் பொதுநல அறக்கட்டளை நிறுவனர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ் அழகர் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் முறுக்கு பாண்டி கார்த்தி மணியன், ஆட்டோ ரெங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை திம்மரசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சக்திவேல் ஒருங்கிணைத்தார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES