Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 60)

செய்திகள்

All News

திருச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக தேசிய பத்திரிகையாளர் தின விழா

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் திருச்சியில் தேசிய பத்திரிகையாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு மாநிலத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் சத்யநாராயணன் வரவேற்று பேசினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பங்கேற்று பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.

விழாவில் மாநிலத்தலைவர் சரவணனுக்கு மதுரை மாவட்ட தலைவர் கணேஷ் மற்றும் செயலாளர் ரவிச்சந்திரபாண்டியன், இணைச்செயலாளர் பாண்டியன், துணைத்தலைவர் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், கார்த்திக் உள்பட ஏராளமான நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இவ்விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்றனர். முடிவில் பொருளாளர் காமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

மதுரையில் பெருந்தலைவர்,நடிகர்திலகம் அறக்கட்டளை சார்பாக கார்த்தி சிதம்பரம் பிறந்த நாள் விழா.!

பெருந்தலைவர்,நடிகர்திலகம் அறக்கட்டளை சார்பாக கார்த்தி சிதம்பரம் பிறந்த நாள் விழா

மதுரை, நவம்பர்.16-

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு,மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர், நடிகர்திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் குருபிரசாத், லெனின், முத்துக்குமார்,கனகராஜ் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

முன்னதாக
அருள்மிகு காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சுரேஷ் பாபு, வாஞ்சிநாதன், ராஜீவ்காந்தி, பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், மீர்பாஷா, மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ், மூவேந்திரன்,போஸ்,நாகேந்திரன் சஞ்சய் கணபதி மற்றும் வார்டு நிர்வாகிகள் மொக்கச்சாமி, சுப்பு, பாலமுருகன், சிவாஜி மன்றம் மணிவேல் மற்றும் சரவணராஜ், பகுதி தலைவர்கள் பன்னீர்செல்வம், சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (நவ.14) காலை ஒருகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று நிலவக்கூடும்.

இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழகம், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் 27 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

முதல்வர் ஆய்வு: இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள மாநிலஅவசரகால செயல்பாட்டு மையத்தில்முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலைஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்துகடலூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர், கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரனையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனமழை குறித்து கேட்டார்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு, பொறுப்புஅமைச்சர்கள், சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் உடனடியாக சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், முதல்வரின் செயலர் எம்.முருகானந்தம், பேரிடர் மேலாண்மை இயக்குனர் சி.அ.ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சம்பா பயிர்கள் மூழ்கின: நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை இடைவிடாமல் கனமழை பெய்தது. வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, 25 நாட்களே ஆன இளம் சம்பா பயிர்களில் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள புங்கனூர், மருவத்தூர், எடக்குடி, வைத்தீஸ்வரன் கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களில் நீர் தேங்கியுள்ளது. இதனால், 8 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கின. மழைநீரை வடிய வைக்கும்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சேலத்தில் நிறைவடையும். பிரசார பேரணியில் 188 இருசக்கர வாகனங்கள் பங்கேற்றுள்ளனர்.

திராவிட மாடல் ‘திமுக’ அரசால் சிறப்பிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் சங்கரய்யா-முதல் தகைசால் தமிழர் விருது!

திராவிட மாடல் 'திமுக' அரசால் சிறப்பிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் சங்கரய்யா-முதல் தகைசால் தமிழர் விருது!

சென்னை: இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவரான இன்று மறைந்த சங்கரய்யாவுக்கு (வயது 102) தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் திமுக அரசு தமது முதலாவது தகைசால் தமிழர் விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

இந்தியாவின் விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்தவர் சங்கரய்யா. 95 வயது வரை தமது போராட்ட குணத்தை இடைவிடாது கடைபிடித்தவர். 95 வயதில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் நின்றவர் சங்கரயா. இன்று வயது முதுமையின் காரணமாக 102 வயதில் காலமானார். தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பெருந்தலைவர் ‘தோழர்’ சங்கரய்யாவின் மரணம் மிகப் பெரும் பேரிழப்பு.

இடதுசாரித் தலைவராக திகழ்ந்து ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சிறைவாசம் அனுபவித்தவர் சங்கரய்யா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நிறுவனத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சங்கரய்யா. தமிழ்நாட்டில் 2021-ல் திமுக அரசு மீண்டும் அமைந்த போது, தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை சிறப்பிக்க ‘தகைசால் தமிழர் விருது’ உருவாக்கப்பட்டது. இந்த தகைசால் தமிழர் விருது முதன் முதலாக முதுபெரும் இடதுசாரித் தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.

தகைசால் தமிழர் விருதை சங்கரய்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். அப்போது விருதுக்கான ரூ10 லட்சம் காசோலையும் சங்கரய்யாவிடம் வழங்கப்பட்டது. ஆனால் விருதாக தாம் பெற்ற ரூ10 லட்சம் காசோலையை தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி- கொரானா நிவாரண நிதிக்கே திரும்பி வழங்கி ‘தகைசால்’ தமிழர் என்ற விருதுக்கும் பெருமை சேர்த்தார் தியாகி சங்கரய்யா.

இவர்தான் “தகைசால் தமிழர்..” விருது பணம் 10 லட்சத்தை அப்படியே கொரோனா நிவாரணத்திற்கு அளித்த சங்கரய்யா

சங்கரய்யாவின் 102வது பிறந்த நாளின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் “பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ‘தகைசால் தமிழர்’ சங்கரய்யா அவர்களின் 102-ஆவது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு என வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆம் இன்றைய இளம் தலைமுறைக்கு பொதுவாழ்வு என்றால் என்ன என்பதற்கு மாபெரும் தீரமிக்க போராளி சங்கரய்யாவின் வாழ்வும் சரித்திரமும் என்றென்றும் பாடமாக இருக்கும் என்பது மிகையல்ல!

பெருந்தலைவர் ‘தோழர்’ சங்கரய்யாவுக்கு ‘செவ்வணக்கம்’!

காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு காரணமானவர் ஜவஹர்லால் நேரு: கே.எஸ்.அழகிரி பேட்டி

காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு காரணமானவர் ஜவஹர்லால் நேரு: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்த நாளையொட்டி, கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு அருகே அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடந்தது.

இதில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, நிர்வாகிகள் கோபண்ணா, விஜய் வசந்த் எம்பி, அசன் மவுலானா எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர். நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவை மறு உருவாக்கம் செய்தவர், இந்தியாவை உலகத்தில் வல்லரசாக மாற்றியவர் ஜவஹர்லால் நேரு. இன்று, காஷ்மீர் இந்தியாவில் இருக்கிறது என்றால் அதற்கு காரணமாக இருந்தவர் நேரு. ஓபிசி சமூகம் வளமாக வாழ்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் நேரு. அவரை போன்ற ஒரு சிற்பி இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. கோயில்களில் அனைவரும் தரிசிக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களை கோயிலில் அனுமதிக்காத கூட்டம் பாஜ கூட்டம். இவ்வாறு அவர் கூறினார்.

பாரதி நர்சரி & பிரைமரி பள்ளி சார்பில் குழந்தைகள் தினம் பள்ளப்பட்டியில்…

இமாம் அபு ஹனிபா டிரஸ்ட் நடத்தும் பாரதி நர்சரி & பிரைமரி பள்ளி சார்பில், இன்று குழந்தைகள் தினம் (பண்டிட் ஜவஹர்லால் நேரு) பிறந்த நாள் குழந்தைகள் தினம் முறையாக அனுசரிக்கப்பட்டது.

மாவட்ட அரசு தலைமை காஜி சிராஜுதீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்க, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகிக்க, நிகழ்ச்சி இனிமையாக துவங்கியது. அரவக்குறிச்சி ஆர்டிஓ தோழர் குண்டுமணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் ஐடி விங் மாவட்ட பொறுப்பாளர் தோழர் அரவக்குறிச்சி பாலமுருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். ரஹ்மானிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஆஷிக் இலாகி நூரானி ஹஸரத் அவர்கள் வாழ்த்துரை வழங்க, நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

மீண்டும் அல்ஹம்துலில்லாஹ் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இணைந்து பணியாற்றிய பள்ளப்பட்டி சுதந்திர தியாகி மணிமொழி மெளலானா அவர்களின் வம்சத்தில் நான்காவது தலைமுறையை சார்ந்த சஜாத் அஹமத் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர்கள் மிக உற்சாகமாக கலந்து கொண்டார்கள். மாணவர் செல்வங்கள் தங்கள் படைப்புகள் அனைத்தையும் திறம்பட காட்டியிருந்தார்கள்.

வந்தவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் அறிவியல் கண்காட்சி அமைந்திருந்தது. பெரும் பெரும் கல்லூரிகள் நடைபெறக்கூடிய அளவிற்கான தயாரிப்புகளை, பாரதி நர்சரி & பிரைமரி ஆரம்பப் பள்ளி மாணவர்கள் அறிவுப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும், படைப்புகள் அனைத்தும் அசத்தலாக இருந்ததை அனைவரும் சுட்டிக்காட்டி மகிழ்ந்தனர்.

இறுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் ஈருலக வெற்றிக்காகவும் சிராஜுதீன் ரஷாதி (அரசு தலைமை காஜி) அவர்கள் துவா செய்து நிகழ்ச்சி இனிதே நிறைவேற்றது. ஆலிம் அ ரிபாய்தின் ஹசனி டிரஸ்டி: இமாம் ஆபு ஹனிபா (ரஹ்) டிரஸ்ட் பள்ளப்பட்டி கரூர் மாவட்டம்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற மதுரை ஜல்லிக்கட்டு ஆஃப் ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு பிரார்த்தனை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி போட்டி மற்றும் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற மதுரையில் சிறப்பு பிரார்த்தனை

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ஆஃப் ரோட்டரி சங்கம் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெரியவா விக்ரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது. இதை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரை இறுதி போட்டியிலும், இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலக கோப்பை போட்டோ வைத்து அர்ச்சனை செய்து தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் தலைவர் நெல்லை பாலு, செயலாளர் எஸ்.எஸ்.சரவணன், பொருளாளர் கதிரவன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

தரமில்லாத விதைகளை வழங்கும் தோட்டக்கலைத்துறை: ஆபெல் மூர்த்தி கண்டனம்.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி பேசுகையில் :-

தோட்டக்கலைத்துறை சார்பாக தரும் விதைகள் தரமாக இல்லாததால் முளைப்பதில்லை. மேலும் சான்றிதழ் இல்லாமல் விவசாயிகளுக்கு விதைகளை வழங்கி வருகின்றனர். தரமில்லாத விதைகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே சான்றிதழ் பெறாத விதைகளை தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு வழங்க கூடாது. விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

சரியாக செயல்படாத தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன் என பேசினார்.

தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன : அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை : தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்களும் கடலோர மாவட்டங்களில் 121 நிரந்தர உதவி பல்நோக்கு மையங்களும் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 19 செமீ மழை பெய்துள்ளது என்றும் நாகை. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES