Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 42)

செய்திகள்

All News

பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் குவிந்து வரும் பாராட்டு..!

பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

ராஜபாளையம், மார்ச்.28

ராஜபாளையத்தில் கிரகாம்பெல் உலக சாதனை புத்தகம் நிறுவனம் மற்றும் வீரத்தமிழர் தற்காப்புக் கலை சங்கம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்படும்,அகத்தியர் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் அம்சவள்ளி,சமிக்சா,சுவாதிகா, மீனாட்சி,பிரதியுஷா,காவாயா,ஸ்ரீபாவனா,ஸ்ரீபார்கவி,விஜய்தர்ஷினி, லிங்கேஷ்,பவதாரிணி ஆகியோர் கலந்து கொண்டு இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

உலக சாதனை படைத்த மாணவிகளுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்க தலைமை ஆசான் மருதுபாண்டியன் பெற்றுக்கொண்டார்.

பெண்களால் மட்டுமே நடத்தப்படும் இந்த டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உலக சாதனை படைத்த திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டு..!

பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

ராஜபாளையம், மார்ச்.28

ராஜபாளையத்தில் கிரகாம்பெல் உலக சாதனை புத்தகம் நிறுவனம் மற்றும் வீரத்தமிழர் தற்காப்புக் கலை சங்கம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்படும்,அகத்தியர் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் அம்சவள்ளி,சமிக்சா,சுவாதிகா, மீனாட்சி,பிரதியுஷா,காவாயா,ஸ்ரீபாவனா,ஸ்ரீபார்கவி,விஜய்தர்ஷினி, லிங்கேஷ்,பவதாரிணி ஆகியோர் கலந்து கொண்டு இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

உலக சாதனை படைத்த மாணவிகளுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்க தலைமை ஆசான் மருதுபாண்டியன் பெற்றுக்கொண்டார்.

பெண்களால் மட்டுமே நடத்தப்படும் இந்த டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மதுரை கனகு பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மேலும் ஏழை எளிய ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் வள்ளலார் அன்னதான கூடத்தின் நிறுவனர் பாரதி சிவா, குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி மற்றும் மூத்த நடிகர் அப்பா பாலாஜி, ஸ்ரீமான் சரவணன், மீசை அழகப்பன், மீசை மனோகரன், குறும்பட இயக்குனர் ஜெ.விக்டர், தொடாதே திரைப்படத்தின் இயக்குனர் அலெக்ஸ், உதவி இயக்குனர் அலங்கை பிரபு, தயாரிப்பாளர் பத்திரகாளி மற்றும் நடிகர்,நடிகைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் முதன்முறையாக கீழக்குயில்குடி சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு

தமிழகத்தில் முதன்முறையாக புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு நடைபெற்றது.

மதுரை,மார்ச்.27-

சித்தர்கள் மகாசபை ஞானாலயம் 360 நடத்திய உலக சித்தர்கள் மற்றும் நல்லிணக்க மாநாடு
தமிழகத்தில் முதன் முறையாக மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியில் புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை மற்றும் சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் யாகவேள்வி நடைபெற்றது.

இம்மாநாட்டில் சுவாமி சற்குரு வியாசானந்தா, சிவயோகி ‌சிவக்குமார் கேரளா, கேரளா மாநில தலைவர் ஸ்ரீ சுகுமாரி சுகுமாரன், இலங்கை சுவாமிஜி சிவகுரு, மலேசியா குருஜி ராமாஜி, டாக்டர் கஜேந்திரன், எட்டையாபுரம் உலகநாதன், கலைமாமணி மதுரை கோவிந்தராஜ், இமாலயா யாத்திரை குழு திருவண்ணாமலை விஜயராஜ், மதுராந்தகம் சதீஸ்வரன், திருப்பூர் பாவலர் கனகசிவா, திருப்பூர் கவிஞரும், மூத்த பத்திரிகையாளருமான பா.சிவக்குமார் பிரபு, கவிமன்றம் நிறுவனர் கனகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து சித்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தலைவர் ஆர் எஸ் ரமணன் மற்றும் விழா குழுவினர் எஸ்.சித்ரா, எம்.அஷ்டலட்சுமி, அசோக், இ‌.கனிமொழி, எஸ்.சுந்தர், ஆகியோர் செய்திருந்தனர்.

2025 ஆம் வருடம் இதே இடத்தில் சித்தர்கள் மாநாடு நடைபெறும் எனவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ! 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்! தலைவர்கள் வாழ்த்து

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ! 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்! தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் தேர்வாக தமிழ்த் தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயாராக உள்ளன.

தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம் செய்வது, விடைத்தாள் மாற்றம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதிகபட்ச 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். இதனை ஊக்கப்படுத்த முயலும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 12 முதல் 22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். மே 10ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்” என முதலமைச்சர் வாழ்த்து கூறியுள்ளார்.

அதேபோல “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் செவ்வாய்க்கிழமை(26.03.2024) தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 9 .38 லட்சம் பேர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். 4,107 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வுகளில் பங்கேற்கும் அனைவரும் சாதனைகளை படைப்பதற்காக எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடிகர் விஜய் கூறியுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மதுரை புட்டுத்தோப்பு சொக்கநாதர் ஆலயத்தில் நடந்த திருவாசகம் நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் பங்கேற்பு

மதுரை புட்டுத்தோப்பு சொக்கநாதர் ஆலயத்தில் திருவாசகம் ஆன்மீக நிகழ்ச்சி

மதுரை, மார்ச்.25-

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், தமிழ்நாடு மாநில சேர்மனாக மருத்துவர் கஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக திருமதி கீதா முருகன் ஆகியோரை,அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி நியமனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவர்கள் இறைவனிடம் வாழ்த்து பெறும் விதமாக, மதுரை புட்டுத்தோப்பில் உள்ள சொக்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற திருவாசகம் ஆன்மீகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவன் அடியார்களுக்கு காலை மற்றும் மதியம் உணவுகளை வழங்கி தொண்டு செய்தனர்.

இந்நிகழ்வில் மகளிரணி மாநில துணைத்தலைவர் திருமதி குருலட்சுமி கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக உலக தண்ணீர் விழா..!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

திருமங்கலம் நகரில் ஏழை எளிய முதியவர்களுக்கு தினமும் வள்ளலார் வழியில் இலவசமாக வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு அன்னை வசந்தா டிரஸ்ட் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனிமுருகன் தலைமை வகித்தார்.செயலாளர் சித்ரா ரகுபதி முன்னிலை வகித்தார். பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் மாலை நேர பயற்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ருக்மணி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பேசினார்.
கணேசமூர்த்தி, ரோகுபாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக அன்னை வசந்தா டிரஸ்ட் உலக தண்ணீர் தினத்தை முன் னிட்டு 100க்கும் மேற்பட்ட வயதான ஏழை எளிய முதியோர்க்கு இலவச உணவும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் முடிவில் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியின் ஆசிரியை சிவஜோதிகா அனைவருக்கும் நன்றி கூறினார்.

5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு

5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன.

இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்.1-ம் தேதி முதல் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

அதன்படி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

இவற்றில், ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் 400 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் முதல் கட்டணம் உயர உள்ளதாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழனிசாமி கண்டனம்: சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்களின் போக்குவரத்துக்கு பெரும் சுமையாகவும், விலைவாசி உயர்வுக்கும் வித்திடும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறேன்.

வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மக்களவையில் குரல் கொடுப்பார்கள் என்ற உறுதியை தமிழக மக்களுக்கு நான் அளிக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மார்ச் 27-ம் தேதி வரை அதிக வெயில் இருக்கும்

தமிழகத்தில் மார்ச் 27-ம் தேதி வரை அதிக வெயில் இருக்கும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, இரணியல், திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7% இடஒதுக்கீடு கோரி வழக்கு

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7% இடஒதுக்கீடு கோரி வழக்கு

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரைச் சேர்ந்தமாற்றுத் திறனாளியான மணி வண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

7 கோடி மாற்றுத் திறனாளிகள்: நாடு முழுவதும் 7 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் இவர்களுக்கு முறையான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ள போதும், அது முறையாக அமல்படுத்தப்படவில்லை. இதேபோல், தேர்தலிலும் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த ஜனவரியில் மனு அளித்தேன்.

தேர்தல் ஆணையம் மறுப்பு: இவ்வாறு மாற்றுத் திறனாளி களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

எனவே, நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கும், தேர்தல் ஆணையத் துக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியுள் ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES