தமிழகத்தில் முதன்முறையாக புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு நடைபெற்றது.
மதுரை,மார்ச்.27-
சித்தர்கள் மகாசபை ஞானாலயம் 360 நடத்திய உலக சித்தர்கள் மற்றும் நல்லிணக்க மாநாடு
தமிழகத்தில் முதன் முறையாக மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியில் புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை மற்றும் சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் யாகவேள்வி நடைபெற்றது.
இம்மாநாட்டில் சுவாமி சற்குரு வியாசானந்தா, சிவயோகி சிவக்குமார் கேரளா, கேரளா மாநில தலைவர் ஸ்ரீ சுகுமாரி சுகுமாரன், இலங்கை சுவாமிஜி சிவகுரு, மலேசியா குருஜி ராமாஜி, டாக்டர் கஜேந்திரன், எட்டையாபுரம் உலகநாதன், கலைமாமணி மதுரை கோவிந்தராஜ், இமாலயா யாத்திரை குழு திருவண்ணாமலை விஜயராஜ், மதுராந்தகம் சதீஸ்வரன், திருப்பூர் பாவலர் கனகசிவா, திருப்பூர் கவிஞரும், மூத்த பத்திரிகையாளருமான பா.சிவக்குமார் பிரபு, கவிமன்றம் நிறுவனர் கனகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து சித்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தலைவர் ஆர் எஸ் ரமணன் மற்றும் விழா குழுவினர் எஸ்.சித்ரா, எம்.அஷ்டலட்சுமி, அசோக், இ.கனிமொழி, எஸ்.சுந்தர், ஆகியோர் செய்திருந்தனர்.
2025 ஆம் வருடம் இதே இடத்தில் சித்தர்கள் மாநாடு நடைபெறும் எனவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.