Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ! 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்! தலைவர்கள் வாழ்த்து
NKBB Technologies

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ! 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்! தலைவர்கள் வாழ்த்து

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ! 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்! தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் தேர்வாக தமிழ்த் தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயாராக உள்ளன.

தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம் செய்வது, விடைத்தாள் மாற்றம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதிகபட்ச 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். இதனை ஊக்கப்படுத்த முயலும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 12 முதல் 22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். மே 10ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்” என முதலமைச்சர் வாழ்த்து கூறியுள்ளார்.

அதேபோல “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் செவ்வாய்க்கிழமை(26.03.2024) தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 9 .38 லட்சம் பேர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். 4,107 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வுகளில் பங்கேற்கும் அனைவரும் சாதனைகளை படைப்பதற்காக எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடிகர் விஜய் கூறியுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Bala Trust

About Admin

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES