AO அளவிலான தாளில் ஒரு மணிநேரம் 49 நிமிடங்களில் டூடுல் ஆர்ட் வரைந்து சோழன் உலக சாதனை படைத்த 10 வயது மாணவன்.
மதுரையை சேர்ந்த வினோத்குமார் – தமிழரசி தம்பதியரின் மகன் 10 வயதான மகிலன், இவர்
மதுரை கேந்திர வித்யாலயா பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்றுள்ளார். இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள கலாம் பாரம்பரிய கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் AO அளவிலான தாளில் ஒரு மணிநேரம் மற்றும் 49 நிமிடங்களில் டூடுல் ஆர்ட் வரைந்து சோழன் உலக சாதனை படைத்தார்.
இந்த உலக சாதனை முயற்சியை நேரில் கண்காணித்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன், தென் மண்டலத் தலைவர் முனைவர் சுந்தர் மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் மருத்துவர் கஜேந்திரன், ஆசான் அழகு முருகன் போன்றோர் நேரில் கண்காணித்து உறுதி செய்தனர்.
பின்னர் சோழன் உலக சாதனை படைத்த மாணவனுக்கு சான்றிதழ் நினைவு கேடயம் பதக்கம் மற்றும் அடையாள அட்டை போன்றவைகளை சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் வழங்கி பாராட்டினார்.
உலக சாதனை படைத்த மாணவனை கலாம் பாரம்பரிய கலைக் கழகத்தின் மாணவர்கள் வாழ்த்தி பாராட்டினர்.