Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 58)

செய்திகள்

All News

திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு.!

கால்வாய் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க தாக்கலான வழக்கில் வைகை அணையில் நீர்இருப்பு, மழையால் நீர்வரத்தை பொறுத்து இருபோக பாசனத்திற்கு நீர் வழங்குவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வர் என தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேலப்பட்டி சேவியர் மற்றும் மதுரை விராட்டிபத்தை சேர்ந்த அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி அவர்களின் மனைவி திருமதி அருள் நவரத்தினம் தாக்கல் செய்த பொதுநல மனு :- பெரியாறு பிரதான கால்வாயின் ஒருபோக பாசனத்திற்கு 900 கன அடி, திருமங்கலம் கால்வாய் ஒருபோக பாசனத்திற்கு 230 கன அடி வீதம் தண்ணீர் இருப்பு, நீர்வரத்தை பொறுத்து குடிநீருக்காக வைகை அணையிலிருந்து நவ.,15 முதல் 10 நாட்களுக்கு திறந்து விட நவ., 14 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.

திருமங்கலம் பிரதான கால்வாயில் 230 கன அடி வீதம் ஆண்டு தோறும் செப்டம்பர் 15 முதல் மார்ச் 1 வரை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என 2010ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு முரணாக தற்போது வெளியிட்டது அறிவிப்பு சட்டவிரோதம். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். தற்போது வைகை அணையில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. விவசாயத்திற்கு 10 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்க தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். 2010 அரசாணைப்படி 2024 மார்ச் 1 வரை தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்.
என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பு : இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. இருபோக பாசனத்திற்கு அணையில் போதிய தண்ணீர் இல்லை. ஒருபோக பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் வினியோகிக்க இயலவில்லை. தற்போது அணையில் நீர் இருப்பு மற்றும் பருவமழையால் நீர்வரத்தை பொறுத்து இருபோக பாசனத்திற்கு நீர் வழங்குவது குறித்து தொழில்நுட்ப ரீதியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வர் இவ்வாறு தெரிவித்தது. பின்னர் நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரம் ஒத்தி வைத்தனர்.

உலக பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு மதுரை வாசன் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை முகாமை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

உலக பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு மதுரை வாசன் கண் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு கண் சிகிச்சை பரிசோதனை முகாமை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

உலக பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

வாசன் கண் மருத்துவமனையுடன் மதுரை செய்தியாளர்கள் சங்கம், பிரஸ் கிளப் ஆப் மதுரை, தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் & தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தினர் இணைந்து இந்த முகாமை நடத்தினர்.

வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

வரும் காலங்களில் பத்திரிகையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும், பத்திரிகையாளர் அடையாள அட்டை வைத்திருப்போரும் மருத்துவமனையை அணுகினால் 50 சதவீத சலுகை கட்டணத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் கையெழுத்தானது.முகாமில், பத்திரிகையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பதிவு செய்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

இம்முகாமிற்கு வாசன் மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குனர் மருத்துவர் கமல்பாபு முன்னிலை வகித்தார்.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெங்கடேசன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அரசு பிளீடர் பி.திலக்குமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்பு நிதி, மதுரை அரசு ராசாசி மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை பிரிவு துறைத் தலைவர் ஆர்.பிரபாகரன், மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் எஸ்.கதிரவன், எஸ்.ரமேஷ் பாண்டியன், கே.சுப்பிரமணியன், ஏ.பி.ஹரிகரன், எஸ்.ஆர்.குமரன், டி.சண்முகம், சி.எம்.ஆதவன், எஸ்.ஜெயபிரகாஷ், கொ.காளீஸ்வரன், எஸ்.ஜெகநாதன், கே.காசிலிங்கம், எம்.பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கண் மருத்துவர் கீதா நன்றி தெரிவித்து பேசினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவு தென்மண்டல மார்க்கெட்டிங் தலைவர் விஜயன், பி.ஆர்.ஓ பிச்சைக்கனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி

தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்கள் சிறைவாசிகளுக்கு விடுதலைக்கு பின் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக சான்றிதழ் உடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி வழங்குவதற்கு அனைத்து மத்திய சிறைகளிலும் தொழிற்பயிற்சி வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு கூறியுள்ளார்

அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் JK பென்னர் நிறுவனம் மற்றும் பியர்ஸ் ஹியூமன் சைல்டு சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்ட் இணைந்து சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மதுரை மத்திய சிறையில் உள்ள 30 தண்டனை சிறைவாசிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய வெல்டிங் பயிற்சி வழங்குவதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் .சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் JK பென்னர் மனித வள மேம்பாடு நிர்வாகி இக்னேசியஸ்
JK பென்னர் நிறுவன திறன் மேம்பாட்டு அலுவலர் வீராச்சாமி
பியர்ஸ் டிரஸ்ட் இயக்குனர் காட்டுச்சாமி ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், சின்ன கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்

30 நாட்கள் நடைபெறும் இந்த தொழிற் பயிற்சி நிறைவு நாளில் அவர்களுக்கு மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் சார்பில் செயல்படும் ஸ்கில் இந்தியா திட்டத்தில் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்
மேலும் 30 நாட்களுக்கு ஒரு நபருக்கு ரூபாய் 1000 வீதம் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது

மேலும் இப்பயிற்சி முடிவுற்றபின் தகுதியான சிறைவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கார்பெண்டர் மற்றும் மோட்டார் ரீவைண்டிங் டெய்லரிங் போன்ற தொழிற்பயிற்சிகளும் வழங்கப்படும் என சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் மேலூரில் பெரியாறு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பாஜக கிழக்கு மாவட்டம் சார்பாக விவசாய அணி மாவட்ட தலைவர் பூமிராஜன் தலைமையிலும், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மஹாலக்ஷ்மி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் பொதுச்செயலாளர்கள் வக்கீல் கண்ணன், கோசப்பெருமாள், துணைத்தலைவி மஞ்சுளா, மாவட்ட செயலாளர் ஹரிஹரன், ஆன்மிக பிரிவு தலைவர் தர்மலிங்கம், கல்வியாளர் பிரிவு தலைவர் ராஜூ, ஐ.டி விங் தலைவர் மகா மணிகண்டன், உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் தங்கவேல்சாமி, முன்னாள் ராணுவ பிரிவு மாநில செயலாளர் ஆனந்தஜெயம், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அமிர்தராஜ், விவசாய அணி தங்கையா,ஓ.பி.சி அணி தலைவர் பாஸ்கர், வழக்கறிஞர் பிரிவு தலைவர் பிரபாகரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் காசிநாதன், மேலூர் தொகுதி மண்டல் தலைவர்கள் ராஜாமணி, ஜெயசித்ரா, குமார், ராஜராஜன், திருப்பதி , மற்றும் மதுரை கிழக்கு மாவட்ட அணி, மண்டல், பிரிவு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மேலூர் நகர் மண்டல் தலைவர் சேவுகமூர்த்தி நன்றி கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

தமுமுக மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு.!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக 202 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள ஜின்னா திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக் வரவேற்று பேசினார்.

தமுமுக மாநில தலைவர் எம்.ஹெச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் ன துணை மேயர் நாகராஜன், முனைவர் மாநில பொதுச் செயலாளர் ஹாஜா கனி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் முஹம்மது கௌஸ், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட் கான், மூத்த வழக்கறிஞர் அழகர்சாமி, மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஃபி, மாநில துணைச் செயலாளர் நஜ்மா பேகம், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் சீனி அஹம்மது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…

மதுரையில் சோழன் உலக சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

மதுரை கே.கே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய நிகழ்வில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஹரிஷ்ராஜ் என்பவர் ஐந்து படிநிலைகளைக் கொண்ட 100 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை அபாகஸ் முறையை பயன்படுத்தி மூன்று நிமிடங்கள் மற்றும் 30 நொடிகளில் தீர்த்து சோழன் உலக சாதனை படைத்தார்.இதை கண்காணித்து உறுதி செய்தார் நடுவர் சிவசங்கரன் அவர்கள்.

மேலும்,ஒரே நாளில் 20,000 அஞ்சல் அட்டைகளில் பெறுநர் அனுப்புனர் என்று தமிழில் முகவரி எழுதி தமிழகத்தில் உள்ள 20,000 முகவரிகளுக்கு அனுப்பியதன் மூலம் படைக்கப்பட்ட சோழன் உலக சாதனை நிகழ்வில் பங்கு கொண்ட நூறு சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

சோழன் உலக சாதனை படைத்த அனைவருக்கும் சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்தின் இளைய மன்னர் மாண்புமிகு மகேஷ் துறை அவர்கள், வழக்கறிஞர் ராம் பிரபாகர் தொழிலதிபர் கரு புகழீஸ்வரன், மருந்தாளுனர் நீலமேகம் ராஜன், மருத்துவர் ஆர்த்தி, மருத்துவர் பாலாஜி, போன்றோர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்கள்.

இந்நிகழ்வில் இயன்முறை மருத்துவர் பெஞ்சமின், தென் மண்டல தலைவர் சுந்தர், மதுரை மாவட்டத் தலைவர் சண்முகவேல், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களான பால்பாண்டி மற்றும் ரகு டேவிட்சன், கோவை மாவட்டத் தலைவர் பாலமுரளி கிருஷ்ணன், சமூக ஊடகங்களின் பொறுப்பாளர் சிவசங்கரன்,வழக்கறிஞர் நவீன் சேதுபதி, நாகை மாவட்டத் தலைவர் முஜிபு ஷரிக், திருச்சி மாவட்டப் பொதுச் செயலாளர் பிரபாகரன் மற்றும் தலைமைச் செயற்குழுவின் பொதுச் செயலாளர் ஆத்திகா நிமலன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் ஒருங்கிணைத்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி
நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர்கள் மங்கள்ராம், திருமதி. காயத்ரி மங்கள்ராம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
எட்டாம் வகுப்பு மாணவன் ஜெப்ரி
அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் முதன்மை முதல்வர் டாக்டர் சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

தியாகராஜா பொறியியல் கல்லூரியில் முதல்வர் டாக்டர் திரு பழனிநாதராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார்.

மேலும் மதுரா மில் தலைவர் தாமோதரக்கண்ணன், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் செயலாளர் விஜயராகவன் மற்றும் மதுரை மாவட்டம் கைத்தறி தொழிற்சாலை செயலாளர் எஸ்.பி.சர்வேஸ்வரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

பின்னர் சிறப்பு
விருந்தினர்கள் அறிவியல் மற்றும் கலை நுட்பத்தின் முக்கியத்துவத்தை
குறித்து விவரித்தனர். இந்தக் கண்காட்சியில் இயற்பியல் வேதியியல்,
தாவரவியல் விலங்கியல் மற்றும் கலை சார்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ
மாணவியர்களின் படைப்புகள் இடம் பெற்று இருந்தன. கண்காட்சியில்
1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு கண்காட்சியை சிறப்பு செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை
பள்ளியின் முதல்வர் திருமதி.அனிதா தலைமையில் ஒருங்கிணைப்பாளர்
திருமதி.சிந்துஜா மக்கள் தொடர்பு மேலாளர் திரு.ரகுராம் செல்வகுமார்
விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் சிராஜுதீன், சுரேஷ் மற்றும்
ஆசிரிய ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

மதுரையில் இ.டி.ஐ.ஐ, அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் இணைந்து சுயதொழில் பயிற்சி துவக்க விழா

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி இணைந்து காய்கறி பழங்கள் பதப்படுத்துதல், சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்தல் போன்ற இலவச சுயதொழில் பயிற்சி துவக்க விழா மதுரை கோ.புதூர் வண்டிப்பாதை மெயின் ரோடு பகுதியில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.

இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசுகையில் :- பயிற்சி பெற்ற பின்பு நல்ல தொழில் முனைவோராக மாறுவதற்கான தகுதிகள் செயல்பாடுகள் சந்தைப்படுத்துதல் அதைத்தொடர்ந்து ஆன்லைன் வியாபாரம் வரை திறமையுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என பேசினார்.

மதுரை மாவட்ட தொழில் மைய அலுவலர் சாமுவேல் ராஜா பேசுகையில், மானியத்துடன் சுய தொழில் துவங்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் சிறந்த தொழில் முனைவோராக மாறுவதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பேசினார்.

சௌத் இந்தியன் வங்கி மேலாளர் மீனாட்சி சுந்தரி பேசுகையில், தொழில் துவங்க அதிக அளவில் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்க வங்கிகள் தயாராக இருப்பதாகவும் வாய்ப்பை பெண்கள் முறையாக பயன்படுத்தி தொழில் முனைவராக மாற வேண்டும் எனவும் முத்ரா லோன் வாங்குவதற்கான தகுதியை பெண்கள் பெற வேண்டும் என பேசினார்.

பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் பேசுகையில், பகுதியில் உள்ள அனைத்து பெண்களும் தங்களது தேவைக்கான பொருட்களை சொந்தமாக உற்பத்தி செய்து வாழ்க்கையில் உயர வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் திவ்யா மற்றும் கார்த்தியாயினி ஆகியோர் நன்றி கூறினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக செயல்படக்கூடிய ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக முன்னாள் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பேங்க் சுப்ரமணியன் அவர்கள் ஒரு மனதாக ஏற்கப்பட்டார்.

கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், கரூர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இணைந்தெழு குழுக்களின் ஆலோசகராக ஏற்கப்பட்டார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக தி. ரமேஷ் ஆசிரியர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆதித்தமிழர் பேரவை சா .சுப்பிரமணி மாவட்ட நிதி செயலாளர் ஆதித்தமிழர் பேரவை மற்றும் துணை அமைப்பாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர்.

கூட்டத்தில் இணைந்து எழு தமிழ்நாடு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் மேரி லில்லி ஆகியோர் சென்னையில் இருந்து வந்து கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அன்பர்கள் பங்கேற்றனர்.

மதுரையில் ஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளியில் பிரமாண்டமாக 100 அடி உயர கம்பத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை எஸ்.பி.சிவபிரசாத் ஏற்றி வைத்தார்.

மதுரை துவரிமான் அருகே உள்ள ஸ்ரீ அரவிந்தோ மீரா பிரபஞ்சப் பள்ளி, மதுரையில் ஒரு வரலாற்று நிகழ்வை பெருமையுடன் நிகழ்த்தியது.

நகரத்தில் உள்ள பள்ளிகளிலேயே முதல் மற்றும் உயரமான 100 அடி தேசியக் கொடிக்கம்பத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் ஐ.பி.எஸ் அவர்கள் பிரமாண்டமான 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் எம்.சந்திரன் மற்றும் இயக்குனர் எம்.சி. அபிலாஷ், பொருளாளர் திருமதி நிக்கி புளோரா, முதல்வர் திருமதி ஞானசுந்தரி ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளியின் இயக்குநர் எம்.சி.அபிலாஷ் வரவேற்புரையாற்றி பேசுகையில் :-மதுரையில் இவ்வளவு உயரமான கொடிக்கம்பத்தை நிறுவிய முதல் நிறுவனம் என்றும் அனைத்து பள்ளிகளுக்கும் முன்னோடி எங்கள் பள்ளி என்று பேசினார்.

இதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் ஆர்.சிவபிரசாத், ஐ.பி.எஸ் மாணவர்களிடையே பேசுகையில்:-

ஹைதராபாத் போலீஸ் பயிற்சியில் தான் பெற்ற அனுபவங்களிலிருந்து, இந்தியக் கொடியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூகங்கள் மற்றும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகளில் இந்தியக் கொடி வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளமாக நின்றது. மூவர்ணக் கொடியானது பல்வேறு கலாச்சாரங்கள், மரபுகள், மொழிகள், சமூகங்கள் மற்றும் மாநிலங்களை ஒன்றிணைக்கிறது என்றும், தேசியக் கொடியின் உணர்வால் பாகுபாடு மற்றும் வேறுபாட்டைத் களைந்திட முடியும். இந்த தொலைநோக்கு பார்வையை இளைய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டு தேசத்தின் முன்னேற்றத்திற்காக பெருமையுடன் உழைக்க வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் முதல்வர் திருமதி. ஞானசுந்தரி நன்றியுரை கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES