சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய இலச்சினையை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாட்டில் நீர்வளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், நீர்ப்பாசனம் பாதுகாப்பான குடிநீர் மற்றும் மாநில நீர் பாதுகாப்பு ஆகியவற்றை நிறைவேற்றி தமிழ்நாட்டை நீர்மிகை மாநிலமாக மாற்றும் குறிக்கோளை உள்ளடக்கிய நீர்வளத்துறையின் புதிய இலச்சினையை (லோகோ) அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச்செயலர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறையின் சிறப்பு செயலர் முருகன், முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்திய நிறுவனங்களுக்கு புதிய முதலீட்டு சந்தையாக மாறியிருக்கிறது இலங்கை, ஆட்டோமொபைல் முதல் உணவு பொருட்கள் வரையில் பல இந்திய தயாரிப்புகளை இலங்கையில் விற்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3 வருடத்தில் அந்நாட்டு உள்கட்டமைப்பு திட்டத்திலும் இந்திய நிறுவனங்கள் அசத்தி வருகிறது.உதாரணமாக அதானி குழுமம் துறைமுகத்தில் இருந்து மின்சாரம் வரையில் பல துறையில் இலங்கையில் முதலீடு செய்து வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஏற்கனவே இலங்கையில் செயல்பட்டு வந்த ஏர்டெல் மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தையில் முன்னிலை வகிக்கும் டைலாக் ஆக்சியாடா (Dialog Axiata) நிறுவனம், இந்தியாவின் பார்தி ஏர்டெல் நிறுவனம் 100% பங்குகளை வைத்திருந்த அதன் இலங்கை கிளை நிறுவனத்தை (Bharti Airtel Lanka) முழுவதுமாக வாங்கியுள்ளது.Dialog Axiata நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றியுள்ளதாக ஜூன் 26 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் அறிவித்தது. இதன் கைப்பற்றல் பணிகள் பணமாக இல்லாமல் பங்கு மாற்று ஒப்பந்தம் (Share Swap Deal) மூலம் முடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனம், டைலாக் ஆக்சியாடா பங்குகளை வாங்கியுள்ளது.டைலாக் நிறுவனம் ஏர்டெல் லங்காவின் 100% பங்குகளையும் பெற்றுள்ள நிலையில், இதன் மதிப்புக்கு இணையாக பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு டைலாக் நிறுவனத்தின் 10.355% பங்குகளை அளித்துள்ளது.ஏப்ரல் 2024 இல், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணையம் பாரதி ஏர்டெல் லங்காவை பங்கு மாற்று ஒப்பந்தம் மூலம் டைலாக் ஆக்சியாடா நிறுவனத்துடன் இணைப்பதற்கான அனுமதியை வழங்கியது. இதை தொடர்ந்து தற்போது பாரதி ஏர்டெல் லங்கா மொத்தமாக டைலாக் ஆக்சியாடா உடன் இணைக்கப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக இலங்கையில் உள்ள பாரதி ஏர்டெல் வாடிக்கையாளர்கள், டைலாக் ஆக்சியாடா வாயிலாக தடையற்ற வலையமைப்பில் சிறந்த தொலைத்தொடர்பு சேவைகளைப் பெற முடியும் என பாரதி ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் வித்தல் தெரிவித்திருந்தார்.இலங்கையில் 17 மில்லியனுக்கும் அதிகமான வாடிககையாளர்களை கொண்ட மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக டைலாக் ஆக்சியாடா விளங்குகிறது. ஏர்டெல் லங்கா சுமார் 5 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.பாரதி ஏர்டெல் மற்றும் டைலாக் ஆக்சியாடா நிறுவனங்கள், 2023 ஆம் ஆண்டு மே மாதமே இலங்கையில் தங்கள் வர்த்தகத்தை இணைப்பதற்கான ஒப்பந்தத்தை செய்துக் கொண்டது, ஆனால் இலங்கை டெலிகாம் ஆணையம் அனுமதி வழங்கவில்லை, இதனால் தாமதமானது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS), நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒரு பதட்டமான தருணத்தில் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் மற்றும் பிற திரும்பும் வாகனங்களில் அவசரகால தங்குமிடம் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .
புதன்கிழமை விண்வெளிக் குப்பைகள் சுற்றுவட்ட ஆய்வகத்தை அச்சுறுத்தியதால் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒரு நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மிஷன் கண்ட்ரோல் அனைத்து குழு உறுப்பினர்களையும் அந்தந்த விண்கலத்தில் தங்குமிடம் பெற அறிவுறுத்தியது. ஜூன் 5 முதல் ISS கப்பலில் இருந்த வில்லியம்ஸ் மற்றும் வில்மோர், ஸ்டார்லைனர் கேப்சூலில் தஞ்சம் புகுந்தனர்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம், விண்வெளி வீரர்கள் தங்களுடைய பாதுகாப்பு தங்குமிடங்களில் இருந்தபோது, மிஷன் கண்ட்ரோல் குப்பைகளின் பாதையை உன்னிப்பாகக் கண்காணித்தது. உடனடி அச்சுறுத்தல் கடந்துவிட்டதா என்பதைத் தீர்மானித்த பிறகு, குழுவினர் தங்கள் விண்கலத்திலிருந்து வெளியேறவும், நிலையத்தில் இயல்பான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும் அனைத்து தெளிவுகளையும் வழங்கினர்.
ஓசூரில் சர்வதேச விமான நிலையமும், திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டை நோக்கி உலக நிறுவனங்கள் வந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக இருக்கிறது தமிழகம்.
ஓசூர் கடந்த சில ஆண்டுகளாக அதிக முதலீட்டுகளை ஈர்த்து வருகிறது. அந்த நகரை தமிழகத்தின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க நவீன உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது தமிழக அரசு. கிருஷ்ணகிரி, தருமபுரி பொருளாதார வளர்ச்சி அடைய ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியமாக கருதப்படுகிறது. ஓசூரில் 2,000 ஏக்கரில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் விதமாக பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார்.
மேலும் திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கரூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஒண்றிய அரசின் கொடுஞ் சட்டத்திற்கு எதிராக 27.06.2024,28.06.2024, மற்றும் 01.07.2024 நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்றும் 02.07.2024 தேதி மீண்டும் பொதுக் குழு கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ,01.07.2024 திங்கள் கிழமை அன்று கருப்பு பட்டை அணிந்து கொண்டு பெருந்திரளாக கலந்து கொண்டுள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
வழக்கறிஞர் சங்க பொதுக்குழுவின் முடிவின்படி 27- 06 -2024 மற்றும் 01-07-2024 ஆகிய தினங்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது எனவும் 01-07-2024 அன்று நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் 28- 06- 2024 அன்று தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தீர்மானத்தின் படி நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 27- 06- 2024 , 28- 06 -2024 மற்றும் 01-07-2024 3 தினங்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல் – அரவக்குறிச்சி வழக்கறிஞர் க. முகமது அலி., பி.பி.ஏ.,எல்எல்.பி.,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, இந்திரா காந்தியினுடைய பெருமையை, விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதேன்று, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல அண்ணாமலையும் அறிந்திருக்க வாய்ப்பே கிடையாது. எனவே வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது என்று எச்சரித்துள்ளார்.
எதிர்க்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்கபடும் என்றால், லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பாண்மை கிடைக்காத நிலையில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 3-வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதேசமயம் காங்கிஸ் தலைமையில் வலுவான எதிர்கட்சி அமைந்துள்ளதால், தற்போது சபாநாயகர் தேர்தலில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவையில் இதுவரை சபாநாயகர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர் இடையே சபாநாயகர் பதவிக்கான போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் சிலவற்றை அரசாங்கம் அணுகியுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று (ஜூன் 24) மாலை காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கேவைத் தொடர்பு பேசியதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை அரசு வழங்கினால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக கார்கே ராஜநாத்சிங்கிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதேபோல், கடந்தமுறை மக்களவையில், சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை மீண்டும் என்.டி.ஏ., சபாநாயகர் நிறுத்தவுள்ளது தெரிந்துகொண்ட ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். ராஜ்நாத் சிங் கார்கேவிடம் பேசி ஆதரவு கோரினார். ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும், நாங்கள் அனைவரிடமும் பேசினோம், நாங்கள் (என்.டி.ஏ வேட்பாளரை) ஆதரிப்போம் என்று கூறியுள்ளோம், ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடிய ராகுல்காந்தி, மோடியின் செயல் அவரது வார்த்தைகளுக்கு ஒத்துவரவில்லை. ராஜ்நாத் சிங் நேற்று மாலை கார்கே ஜிக்கு அழைப்பைத் திருப்பித் தருவதாகக் கூறினார். அவர் இன்னும் அழைப்பைத் திரும்பப் பெறவில்லை. மோடி ஜி ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு பற்றி பேசுகிறார். பின்னர் அவர்கள் எங்கள் தலைவரை அவமதிக்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி ஏதோ சொல்கிறார், இன்னொன்றை செய்கிறார். அதுதான் அவருடைய ஃபார்முலா. அதுதான் அவருடைய உத்தி. அவர் அதை மாற்ற வேண்டும். பிரதமரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்பது முழு நாட்டிற்கும் தெரியும். அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாக இல்லை. நரேந்திர மோடி எந்த ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் விரும்பவில்லை. ஏனென்றால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கே போக வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். மறபை பின்பற்றினால், சபாநாயகர் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கூறியுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டமானது. கடந்த 1.3.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது, இந்த மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டமானது ஈராண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று, வேலைவாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தக் கூடுதலாக 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதியளித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அரசாணை வெளியிட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மாணவர் நலத்திட்டங்களைச் செயல்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப் பணிகள் துறை சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் ஜேசிஐ மதுரை சென்ட்ரல் சார்பில் 500 புத்தகங்கள் சிறைக்கைதிகளின் நலனுக்காக வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 புத்தகங்கள் வழங்குவோம் என்று ஜே.சி.ஐ அமைப்பினர் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக ஜே.சி.ஐ தேசிய இயக்குநர் G.S.வர்மா, மண்டல தலைவர் சுந்தரேஸ்வரன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக மண்டல இயக்குநர் திருமதி பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
மேலும் ஜே.சி.ஐ மதுரை சென்ட்ரல் அமைப்பு தலைவர் அர்ஜுன்பாலா , செயலாளர் கோபிநாத், மதுரை சென்ட்ரல் முன்னாள் தலைவர் மனோஜ் குமார் மற்றும் உறுப்பினர்கள் சர்வேஷ்வேல் ஷங்கர் தக்ஷ்ணாமூர்த்தி, கோகுல்நாத், கார்த்திக், ஷ்யாமேஷ் , அபிராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.