தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலுனுடன் UAE அமைச்சர் சந்திப்பு!
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், UAE வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி ஆலோசனை மேற்கொண்டார்.
ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்வற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று (ஜூலை 25) வருகை புரிந்த அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து அப்துல்லா பின் தௌக் அல்மரியிடம் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இச்சந்திப்பின்போது தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வளர்ச்சித் துறை ஆணையரும், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு, ஐக்கிய அமீரக தூதரகத்தின் உயர் அலுவலர்கள், பன்னாட்டு தொழில் குழுமத்தின் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக அப்துல்லா பின் தௌக் அல்மரி, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நேற்று (ஜூலை 24) காலை பெசன்ட் நகரில் உள்ள ஹேல்த் வாக் (8 கிமி) நடைபயிற்சி பாதையில் நடை மற்றும் ஓட்டப் பயிற்சியினை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு. மக்களுக்கு எச்சரிக்கை!
மழைக்காலம் வந்ததும் டெங்குவும் உடன் வந்துவிடும். எங்குப்பார்த்தாலும் டெங்கு காய்ச்சல் பரவ ஆரம்பிக்கும்.
அந்தவகையில் தமிழகத்தில் குறிப்பிட்ட இந்த நான்கு மாவட்டங்களில் அதிகளவு டெங்கு பரவிவருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொசுவால் ஏற்படும் இந்த டெங்கு காய்ச்சல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடம்புவலி, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாது என்றாலும், மக்களை மிகவும் பாதிக்கும்.
இந்த காலங்களில் அதிகமாக டெங்கு காய்ச்சல் பரவக்கூடும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டால், அவர்களுக்கு பெரியளவு சிரமம் ஏற்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில்தான் எப்போதும் அதிகளவு டெங்கு காய்ச்சல் ஏற்படும். ஆனால், தற்போது தமிழகம் முழுவதுமே அதிகளவு காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை சென்னையில் தொடங்கி வைத்த பிறகு பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், “இந்த ஆண்டு 6565 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,384 தற்காலிக பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் திருநெல்வேலி, திருப்பத்தூர், தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். எனவே மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று பேசினார்.
மேலும் தமிழகம் முழுவதும் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான வசதிகளும் மருத்துவமனைகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல் சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டுவிட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் தென்படுகின்றன. ஆகையால் மக்களும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு, நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரித்துக் கொள்ளுதல் அவசியம்.
‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் உதவித்தொகை பெற வழிகாட்டு நெறிமுறை.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: புதுமைப்பெண் திட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் அரசு, தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குகிறது.
இந்த 1000 ரூபாயை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரங்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் போல, உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த திட்டத்தின் பயன்களை எப்படி பெற வேண்டும்? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரனின் உத்தரவில் கூறியிருப்பதாவது: “அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தப்படுகிறது.
மத்திய ஆதார் சட்டப்படி சில அறிவுரைகளை பயனாளிகளுக்கு அரசு இதன் மூலம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனை பெற தகுதியுள்ள மாணவன் தனக்கென்று ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். அல்லது, ஆதார் எண்ணை பெறுவதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
ஆதார் எண் இல்லாத மாணவர்கள், அந்த எண்ணை பெறுவதற்காக, அதற்கான மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தல் வேண்டும். ஆதார் எண் இல்லாத நிலையிலும் இந்த உதவித்தொகையைப் பெற மேலும் சில அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.
அதன்படி, ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ள அடையாளச் சீட்டு; ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ளதற்கான மனுவின் நகல்; வங்கி அல்லது தபால் கணக்கு புத்தகம்; பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை; மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட அட்டை; கிசான் கணக்கு புத்தகம்; ஓட்டுனர் உரிமம்; தாசில்தார் அல்லது ‘கெசடட்’ அதிகாரி அளித்துள்ள அடையாளச் சான்றிதழ், இவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களும் இதில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேன்டும். இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை பெற அறிவுறுத்த வேண்டும். ஆதார் மையம் இல்லாத பகுதி என்றால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே ஆதார் நம்பரை பெறும் வசதிகளை ஏற்படுத்தி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவ வேண்டும்” இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விவசாய தலைவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீ Rahul Gandhi சந்தித்தார்.
இன்று, என்டிஏவின் ‘சேவ் நாற்காலி பட்ஜெட்’-க்கு எதிராக பாராளுமன்ற மாளிகை வளாகத்தில் இந்தியா ஜனபந்தன் எம்பிக்களுடன்
ஸ்ரீ Anbil Mahesh Poyyamozhi தலைமையிலான தமிழக அரசு பள்ளிக் கல்வி அமைச்சர், தமிழக அரசு, இந்தியா பிளாக்-ஐச் சேர்ந்த எம்பிக்களுடன், இன்று புதுதில்லியில் ஸ்ரீ Rahul Gandhi அவர்களை சந்திக்கிறார்கள்.
நீட் மட்டுமல்ல அனைத்து முக்கிய தேர்வுகளிலும் மோசடி.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
நீட் தேர்வுகளில் மட்டுமல்ல, அனைத்து முக்கிய போட்டித் தேர்வுகளிலும் மிகப்பெரிய மோசடி உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் நீட் தேர்வு முறைகேடு குறித்து எதிர்க்கட்சிகள், மத்திய அமைச்சர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. நீட் முறைகேடு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், “பணம் இருந்தால் போதும்; இந்திய தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி . நமது தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்சினை உள்ளது. நீட் மட்டுமல்ல, அனைத்து முக்கிய போட்டித் தேர்வுகளிலும், தேர்வு முறைகளில் சிக்கல் உள்ளது என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. மதிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டுகிறார். இந்த பிரச்சினையின் அடிப்படையை அவர் புரிந்து கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “மத்திய அரசு, தேர்வு வினாத்தாள் கசிவில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகிறார்கள், மறுபக்கம் விசாரணையில் பல உண்மைகள் வெளியாகி பலரும் கைதாகி வருகிறார்கள். தர்மேந்திர பிரதான் மந்திரியாக நீடித்தால் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது என்றும்” கூறினார்.
இதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி தேர்வு முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முறைகேட்டை நான் அரசியலாக்க விரும்பவில்லை, ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தபோது எத்தனை முறை வினாத்தாள் முறைகேடு நடந்திருக்கிறது என்பதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும். தற்போது நடந்த சிறு சிறு பிழைகள் கூட இனி நடக்காது என அரசு உறுதியளிக்கிறது.
5 கோடி மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நீட் தேர்வை எழுதி உள்ளனர். 4700 தேர்வு மையங்களில் பாட்னாவின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளது. நீட் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து முறையான விசாரணை நடந்து வருகிறது. மக்களவையில் நீங்கள் கத்துவதால், அது உண்மையாகிவிடாது, நாட்டின் தேர்வு முறையே ஒரு மோசடி என்று கூறியிருக்கிறீர்கள், மக்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த மிக மோசமான தகவலில் இதுதான் அதிகபட்சமாக இருக்கும், இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறினார்.
மேலும் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்; கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களது இன்னல்களை குறைக்கவும் 1989ல் நல வாரியம் உருவானது.
வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30ஆக திமுக அரசு உயர்த்தியது. 40944 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளனர். பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 88,219ஆக உயர்ந்துள்ளது. வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரித்துள்ளது. வணிகர் நல வாரியத்தின் மூலம் வணிகர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வணிகர்களுக்காக ரூ .3.29 கோடி நிதி வழங்கியுள்ளோம்.
நலிவுற்ற வணிகர்களுக்கு பெட்டிக்கடை அல்லது 3 சக்கர வாகனம் வழங்க ரூ.10000 வழங்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளின் குத்தகை காலம் உயர்த்தப்படும். நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளுக்கான குத்தகை காலம் 12 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளின் குத்தகை காலம் உயர்த்தப்படும். வணிகர் நலவாரிய உறுப்பினர்கள் மரணமடைந்தால் வழங்கப்படும் நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிகத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தீ விபத்து மற்றும் இதயநோய், புற்றுநோய் சிகிச்சைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. சேவை மனப்பான்மையோடு வணிகர்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆம்ஸ்ட்ராங் மனைவியின் ‘உருக்கமான’ வேண்டுகோள்.! காரணம் இதுதான்.
சென்னை: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடி, இனி தன்னை திருமதி.ஆம்ஸ்ட்ராங் என அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நிர்வாக ரீதியிலும் பெயரை மாற்றம் செய்துள்ளார்.
சென்னையை அடுத்த பெரம்பூரில், கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதற்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டு ரவுடி திருவேங்கடம் காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பிறகு அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஸ் என முன்னாள் அரசியல் பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு, காலியாக இருந்த பகுஜன் சமாஜ்வாடி தமிழக தலைவர் பதவிக்கு, இன்று வழக்கறிஞர் ஆனந்தனை புதிய மாநில தலைவராக நியமனம் செய்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதே போல, மாநில ஒருங்கிணைப்பாளராக உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடி ஆம்ஸ்ட்ராங்கை நியமித்து கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
இதனை அடுத்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடி, இனி தன்னை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் என யாரும் அழைக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ‘திருமதி.ஆம்ஸ்ட்ராங்’ என அழைக்குமாறு கேட்டுள்ளார். பொற்க்கொடி எனும் பெயரை அலுவல் ரீதியாக உபயோகப்படுத்தபோவதில்லை என்று அறிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தனது கணவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பின்னரும் அவரது பெயர் மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்று இந்த முடிவை திருமதி ஆம்ஸ்ட்ராங் எடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.