Wednesday , December 11 2024
Breaking News
Home / செய்திகள் (page 30)

செய்திகள்

All News

AO அளவிலான தாளில் ஒரு 1-நேரம் 49 நிமிடங்களில் டூடுல் ஆர்ட் வரைந்து சோழன் உலக சாதனை படைத்த 10 வயது மதுரை மாணவன்..!

AO அளவிலான தாளில் ஒரு மணிநேரம் 49 நிமிடங்களில் டூடுல் ஆர்ட் வரைந்து சோழன் உலக சாதனை படைத்த 10 வயது மாணவன்.

மதுரையை சேர்ந்த வினோத்குமார் – தமிழரசி தம்பதியரின் மகன் 10 வயதான மகிலன், இவர்
மதுரை கேந்திர வித்யாலயா பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்றுள்ளார். இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள கலாம் பாரம்பரிய கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் AO அளவிலான தாளில் ஒரு மணிநேரம் மற்றும் 49 நிமிடங்களில் டூடுல் ஆர்ட் வரைந்து சோழன் உலக சாதனை படைத்தார்.

இந்த உலக சாதனை முயற்சியை நேரில் கண்காணித்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன், தென் மண்டலத் தலைவர் முனைவர் சுந்தர் மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் மருத்துவர் கஜேந்திரன், ஆசான் அழகு முருகன் போன்றோர் நேரில் கண்காணித்து உறுதி செய்தனர்.

பின்னர் சோழன் உலக சாதனை படைத்த மாணவனுக்கு சான்றிதழ் நினைவு கேடயம் பதக்கம் மற்றும் அடையாள அட்டை போன்றவைகளை சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் வழங்கி பாராட்டினார்.

உலக சாதனை படைத்த மாணவனை கலாம் பாரம்பரிய கலைக் கழகத்தின் மாணவர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா..!

தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் மாநிலத் தலைவர் முனைவர் பிச்சைவேல் ஆலோசனைப்படி நடைபெற்றது.

அமைப்பின் மாநில துணைத்தலைவர் டாக்டர் மாணிக்கராஜ் தலைமையேற்று அடையாள அட்டைகளை வழங்கினார்.

பின்னர் புதிய உறுப்பினர்களுக்கு அமைப்பின் சட்டதிட்டங்கள் குறித்தும் புதிதாக அடையாள அட்டை பெற்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு சமூக சேவைகளை செய்ய வேண்டும் என ஆலோசனைகளை வழங்கி அவர் பேசினார்.

நிகழ்ச்சியை மாநில இளைஞரணி தலைவி எம்.ஜெ ஜீவனா ரோஸ் ஒருங்கிணைத்தார்.

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக 8-ஆம் ஆண்டு மற்றும் மே தின விழா..!

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக 8-ஆம் ஆண்டு விழா மற்றும் மே தின விழா ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள மடீட்சியா அரங்கத்தில் சங்கத்தலைவர் சி.எம்.மகுடீஸ்வரன் தலைமையிலும், செயலாளர் கே.கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்தவர்களை சங்க பொருளாளர் கே.டி.துரைக்கண்ணன் வரவேற்று பேசினார்.

மேலும் சங்கத்தின் சார்பாக நடந்த கபடி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்,சிறுமி மற்றும் பணியாளர்களுக்கு மண்டலம் -1
உதவி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆ.செல்வம், நகர் நல அலுவலர்
டாக்டர்.வினோத்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

இந்நிகழ்வில் சி.ஐ.டி.யு பொதுச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க மாநில பொருளாளர் இ.ரா.தமிழ், நகர சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர்
எம்.பஞ்சவர்ணம், மாநகராட்சி அனைத்து பணியாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குரு பார்த்தசாரதி, நிரந்தர ஓட்டுனர் சங்கத் தலைவர் எம்.சரவணன், வருவாய் உதவியாளர் சங்கத்தின் பொருளாளர் கே.ஆறுமுகம், துப்பரவு மேற்பார்வையாளர் சங்கத்தின் செயலாளர் கே.கிருஷ்ணன், பொறியியல் பிரிவு சங்கத்தின் முன்னாள் தலைவர் தனசேகரன், மற்றும் உதவி பொறியாளர்கள் ஆர்.சங்கிலி ராஜன், கே.எஸ்.பாஸ்கரபாண்டியன், இளநிலை பொறியாளர்கள்
எஸ்.பாபு, ஏ.முருகன்,என். ரெங்கநாதன்,
பி.காவேரி ரங்கன்,எம்.வீரப்பரணி தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் சங்கத் துணைத் தலைவர் எ.துரைராஜ், துணைச் செயலாளர் பி.முத்துக்குமார் ஆகியோர் நன்றி கூறினர்.

மதுரையில் தமிழ்நாடு சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம்..!

மதுரையில் தமிழ்நாடு சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம் மாநில தலைவர் இ.சுரேஷ் தலைமையிலும், மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநில செய்தி தொடர்பு செயலாளர் ஆ.ம.ஆசிரிய தேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தையல் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகள் பற்றி பேசினார்.

இந்நிகழ்வில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சீருடை தைக்கும் பணியினை எப்போதும் போல் சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களுக்கே வழங்கி தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களின் வாழாவாதாரம் காக்கப்பட வேண்டும்.

தையல் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்ட முடிவில் மாநில துணைச் செயலாளர் திருமதி நிர்மலா தேவி நன்றி கூறினார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு, பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை..!

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை சார்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர் சுரேஷ்பாபு தலைமையிலும்,
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், நாஞ்சில் பால்ஜோசப் பூக்கடை கண்ணன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், தொழிற்சங்க மதுரை மாவட்ட தலைவர் எஸ் என் பாலாஜி ஆகியோர் முன்னிலையிலும்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் போஸ், பகுதி தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் மணிவேல், இளைஞரணி குருபிரசாத், சரவணன், அய்யர் பாலாஜி, மகளிரணி பஞ்சவர்ணம், வார்டு தலைவர்கள் குமரகுரு, கோபால், மொக்கச்சாமி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை ஆழ்வார்புரத்தில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் பிறந்தநாள் விழா..!

காங்கிரஸ் கட்சி முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட தலைவரும், ஐ.என்.டி.யூ.சி தமிழக முன்னாள் தலைவருமான கே.எஸ். கோவிந்தராஜன் மற்றும் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க தேசிய பொதுச் செயலாளர் கே.எஸ்.ஜி குமார் ஆகியோர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள பெருந்தலைவர் நடிகர்திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சுரேஷ்பாபு, எஸ்.மீர்பாஷா, வீரவாஞ்சிநாதன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ்.என்.பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர் போஸ், மாவட்டத் துணைத் தலைவர் சுப்பையா ஐ.ஓ.பி, வார்டு தலைவர்கள் சரவணராஜ், பாலமுருகன், மொக்கச்சாமி, அப்துல்லா, நாகேந்திரன், இளைஞர் காங்கிரஸ் குருபிரசாத், ஷ்யாம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை அலங்காநல்லூர் ரோடு பாசிங்காபுரத்தில் லாவண்யா பேக்கரி திறப்பு விழா..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ரோடு சிக்கந்தர் சாவடி அருகே உள்ள பாசிங்காபுரத்தில் லாவண்யா பேக்கரி திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்தவர்களை கடையின் உரிமையாளர் லோகநாதன் – தமிழ்செல்வி மற்றும் அவர்களது மகன் பிரவின் மணி ஆகியோர் வரவேற்றனர்.

இங்கு குறைந்த விலையில் தரமான டீ,காபி,வடை,பிரட், கேக், பப்ஸ், பிஸ்கட் மற்றும் பிறந்தநாள் கேக் ஆகியவை கிடைக்கும் என உரிமையாளர் லோகநாதன் கூறினார்.

மதுரையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மலர் தூவி மரியாதை..!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பு, மதுரை மாநகர் காங்கிரஸ் கட்சி ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக அதன் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையிலும், தொழிற்சங்க மதுரை மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.என்.பாலாஜி மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் ப.தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும், ராஜீவ்காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு தின
உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், நாஞ்சில் பால்ஜோசப், பூக்கடை கண்ணன், கே.ஆர்.சுரேஷ்பாபு, வீரவாஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் போஸ் இளைஞரணி குருபிரசாத், பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், மூவேந்திரன், பகுதி தலைவர்கள் மீனாட்சிசுந்தரம், கோபிநாத், வார்டு தலைவர்கள் குமரகுரு, மொக்கச்சாமி, மணிவேல், பவர்.சிங்கம், ரவி, எஸ்.டி.கோபால், முருகேசன், பாலமுருகன், சரவணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் சிலம்பொலி கலை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : வளசை முத்துராமன் ஜி பங்கேற்பு

சேலத்தில் சிலம்பொலி கலை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிலம்பொலி அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ரத்தினகுமார் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில சிலம்பாட்ட கழக தலைவர் வளசை முத்துராமன் ஜி முன்னிலை வகித்தார். பின்னர் அவர் பேசுகையில், டிஜிட்டல் இந்தியாவின் படி தொடுவது கம்ப்யூட்டர் முறையில் பாயிண்ட் எடுக்கும் செயல்முறை எடுக்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து சிலம்ப போட்டியிலும் இந்த கம்ப்யூட்டர் முறை நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை சிலம்பொலி அறக்கட்டளை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் வரவேற்று பேசினார்.

இப்போட்டியில் 500 க்கும் மேற்பட்ட ஆண், பெண் வீரர்கள் கலந்து கொண்டனர்.

மதுரையில் ஜீவ அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்..!

மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை யா.புதுப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஜீவ அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு சமூக ஆர்வலர்
சசிகுமார் சர்க்கரை, ரவை, சேமியா, சம்பா கோதுமை, கோதுமைமாவு, ராகிமாவு,உருட்டு உளுந்து உள்ளிட்ட
மளிகை பொருட்களை வழங்கினார்.


இதில் முதியோர் இல்லம் டிரஸ்ட் நிறுவனர் ஜான் மில்டன், இல்ல மேலாளர் விஜயபாஸ்கர், பத்மா,
எம்மால் இயன்றது நிறுவனர் கண்ணன், திருவள்ளுவர் நூலகம் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES