Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 101)

செய்திகள்

All News

மதுரை சிந்தாமணியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா.!

மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாநில தலைவர் கதிர்வேலு தலைமை வகித்தார். ராமசுப்பிரமணியன், சக்திவேல், மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் கோட்டை பொறுப்பாளர் பாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் ஜெயகார்த்திக், துணைத்தலைவர் தங்கம் வெங்கடேஷ், செயலாளர் தங்கராமு, இணைச்செயலாளர் அற்புதராஜ், மாவட்ட பொறுப்பாளர் பெரியமருது, பங்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சங்கிலி முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் சதீஸ்கண்ணன், பிரபாகரன், ஆனந்தராஜ், பார்த்திபன்,முத்து கருப்பசாமி,சுந்தரபாண்டி, வீரபாண்டி,சதீஸ்,சபரிநாதன், சோனைமுத்து, செல்லப்பாண்டி, முத்துப்பாண்டி, நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு தேசத்தின் அடையாள விருது.!

சென்னை காஸ்மோ பாலிடீன் கிளப்பில் நீதியின் குரல் அமைப்பின் தலைவர் சி ஆர் பாஸ்கரன் தலைமையில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் எஸ் வி சேகர், முன்னாள் காவல்துறை இணை ஆணையாளர் கருணாநிதி மற்றும் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு வெளிநாட்டு சிறையில் சிக்கிய தவித்த அதிகமான இந்தியர்களை மீட்டு தாயகம் திரும்ப உதவி செய்தமைக்காக நீதியின் குரல் சார்பாக “தேசத்தின் அடையாள விருது” வழங்கி கௌரவித்தனர்.

மதுரை மாவட்டம் காமாட்சிபுரத்தில் பாஜக மாநகர் விவசாய அணி சார்பாக கிராம பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டம் குறித்து விளக்கம் 

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே நாகராஜன்  அவர்களின் அறிவுறுத்தலின்படி,மதுரை மாநகர் விவசாய அணி தலைவர்  முத்துப்பாண்டி அவர்களின்  தலைமையில், மாவட்ட  பொதுச்செயலாளர் துரைபாஸ்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலையில், மேலமாத்தூர் ஊராட்சி, காமாட்சிபுரம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று  பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டமான பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண் சந்தை திட்டம், பிரதமரின் விவசாயிகளுக்கான ரூபாய் 6000 நிதி உதவி வழங்கும் திட்டம், மண்வள அட்டை, வேம்பு கலந்த யூரியா திட்டம், கிசான் பயிர் காப்பீடு வழங்கும் திட்டம் போன்ற  நலத்திட்ட உதவிகள் குறித்து கிராம மக்களுக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் எடுத்து கூறி விளக்கி பேசினார்.

மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி  வழங்கினார். இந்நிகழ்வின் போது பாஜக கிளை தலைவர் பாலாஜி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

அழகர் கோவில் சாலையை பசுமையாக்கும் முயற்சியில் இளம் மக்கள் இயக்கத்தினர்.!

மதுரையில் இருந்து அழகர் கோவில் செல்லும் சாலை முன்னர் மரங்களால் பசுமையாக காட்சியளிக்கும். தற்போது சாலை விரிவாக்கத்திற்காக சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தி விட்டனர்.

தற்பொழுது மரங்களே இல்லாத அழகர்கோவில் சாலை வெறிச்சோடி காட்சியளிக்கிறது. யாராவது மரக்கன்றுகளை நட்டு வைத்து மீண்டும் இப்பகுதியை பசுமையாக மாட்டார்களா என அழகர் கோவில் செல்லும்போது மக்கள் அனைவருக்கும் மனதில் ஒரு கேள்வி எழும். அதை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இளம் மக்கள் இயக்க நிர்வாகிகள்.!

இளம் மக்கள் இயக்கம் மற்றும் பார்வை பவுண்டேஷன் இணைந்து மதுரை மாவட்டம் கடச்சனேந்தல், அழகர்கோவில் சாலையில் மரம் நடும் நிகழ்ச்சியை இளம் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் சோழன் அ.குபேந்திரன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், இளம் மக்கள் இயக்கமும், பார்வை பவுண்டேசனும் இணைந்து இயற்கையை பேணி பாதுகாக்கும் விதமாக இதுவரை 48 ஆயிரம் மரக்கன்றுகள் மதுரை மாநகரின் சாலைகளில் ஓரங்களில் நடப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நட்டு வைப்பதோடு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறோம். மரத்திற்குள் மதுரை, நம் பெயரில் ஒரு மரம் என்ற கொள்கையின்படி நமது இந்திய 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எங்களது இயக்கத்தின் சார்பாக 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வைத்து அதை பராமரிப்பதென முடிவெடுத்துள்ளோம். அந்த வகையில் கடச்சனேந்தல் முதல் அழகர் கோவில் வரை சாலையோரங்களில் மரங்களை நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். ஒரு மனிதன் 10 மரங்களாவது வளர்க்க வேண்டும் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயாவின் கொள்கையை பின்பற்றி, எங்கள் இயக்கத்தின் சார்பாக மரத்தை நட்டு வைத்து அதை முறைப்படி பராமரித்து வருகிறோம். இந்தப் பகுதிகளை பசுமையாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் எனக் கூறினார். இந்நிகழ்வில் செய்தி தொடர்பாளர் அன்பு மற்றும் மேற்கு ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவ,மாணவியர், லதா மாதவன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பட்டிமன்ற நிகழ்ச்சி.!

75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக, இன்றைய இளைஞர்கள் எங்கே போகிறார்கள் திட்டமிட்ட பாதையிலா? திசை தெரியாமலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்டமிட்ட பாதையிலே என்ற தலைப்பில் போத்திராஜன், திருமலை முருகன், மாரிக்கண்ணன் ஆகியோரும், திசை தெரியாமலே என்ற தலைப்பில், கீதா பாபு, சினேகா, கவிஞர் துர்கா தேவி ஆகியோர் பேசினர்.

இந்நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்ற டாக்டர் சண்முகம் திருக்குமரன், இளைஞர்கள் திட்டமிட்ட பாதையிலே தான் செல்கிறார்கள் என்ற தீர்ப்பை வழங்கினார்.

இந்நிகழ்வில் சபாராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியன்,தொழிலதிபர் பழனிவேல், திரைப்பட இயக்குனர் ரத்தினசாமி, முருகேசன், திருஞானசம்பந்தம்,போஸ் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் அறங்காவலர் சோலை எஸ்.பரமன் நன்றியுரை கூறினார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்களின் இல்ல விழா.!

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன், கழக பொருளாளர், அண்ணியார் அவர்களின் நல்லாசியுடன், கழக உயர்மட்டகுழு உறுப்பினர், ஜெ.பாலன் அவர்களின் ஆசியுடன் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்களின் மகள் மதுமிதா அவர்களின் இல்ல காதணிவிழா மதுரை- பாண்டிகோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

குழந்தை செல்வங்கள் பாலமுருகன் (எ) விஸ்வந்த், யஷ்வந்த் ஆகியோருக்கு கழக நிர்வாகிகள் பலர் வாழ்த்தினர்.

இவ்விழாவில் மாவட்ட அவைத் தலைவர் பாண்டியராஜ், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் பா.மானகிரியார், ராமு,செயற்குழு உறுப்பினர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னச்சாமி, மாரிமுத்து,பகுதி கழகச் செயலாளர்கள் கோவிந்தராஜ், மேலமடை அய்யப்பன், தெய்வேந்திரன், கோல்டு முருகன், இளங்கோ, மாணவரணி செயலாளர் காளீஸ்வரன், நெசவாளர் அணி செயலாளர் பிரகாஷ், தொண்டரணி செயலாளர் வீரா, வர்த்தக அணி செயலாளர் பாண்டி, மாவட்ட செயல் வீரர் ரமேஷ்பாபு, பகுதி அவை தலைவர் கவிஞர் மணிகண்டன், வட்டக்கழக செயலாளர்கள் சுப்பிரமணி, சௌந்தரராஜன், துணைச் செயலாளர் அய்யனார் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை ஐராவதநல்லூரில் 41 வது வார்டு பாஜக சார்பாக சுதந்திர தின விழா.!

மதுரை மாநகர் மாவட்டம் 41வது வார்டு ஐராவதநல்லூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் மோடி அவர்கள் ஆணைக்கிணங்க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் 75வது சுதந்திர தின விழா வார்டு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அனுப்பானடி மண்டல் பொதுச் செயலாளர் ராம்தாஸ் முன்னிலை வகித்தார்.. காவல்துறை ஓய்வு ஆய்வாளர் தங்கவேல், கிளைத்தலைவர் சுந்தரபாண்டி சாமி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்..

மாவட்ட கூட்டுறவு பிரிவு துணைத்தலைவர் மீசை முருகேசன் இனிப்பு வழங்கினார்..விழாவில் மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் கார்த்திக் ராஜா, மாவட்ட வர்த்த அணி செயலாளர் கோபாலா கிருஷ்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் அம்பிகா, அனுப்பானடி மண்டல் துணைத்தலைவர்கள் ராஜசேகரன், ராஜீவ் காந்தி, செயலாளர் முருகன், மண்டல் கூட்டுறவு தலைவர் மகேசுவரன், துணைத்தலைவர் ராமராஜ், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ராஜ மதன், கிளைத்தலைவர்கள் செந்தில்குமார், கார்த்திக், பன்னீர் செல்வம், வண்டு முருகன், மோகன் . திரவியம் , முருகன், சுந்தரபாண்டி, தங்கபாண்டி, மலைச்சாமி, கிளிராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்திய அளவில் சிலம்பம் விளையாட்டில் சாதனை படைத்த இளம் பயிற்சியாளர் ஹரிணிக்கு குவியும் பாராட்டு.!

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில், சிலம்பம் கலையினை மாற்றுத் திறனாளிக்கு பயிற்சியளித்து இந்திய அளவில் முதல் பெண் என்ற சாதனை புரிந்த SRWWO பள்ளி மாணவி ஹரிணிக்கு, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் விருது வழங்கி கௌரவித்தார்! அருகில் ஹரிணி தந்தை சரவணபாண்டி உள்ளார்.

ஹரிணி இதுவரை 40 விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!ஹரிணியை பொதுமக்கள் மற்றும் சமூக சேவகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.!

இந்திய நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து கிராம பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம பொதுமக்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி சிவலிங்கம், ஊராட்சி செயலர் கணேஷ்பிரபு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம்

இந்திய நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து கிராம பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம பொதுமக்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி சிவலிங்கம், ஊராட்சி செயலர் கணேஷ்பிரபு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES