Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 102)

செய்திகள்

All News

கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 75ஆம் நாள் வெற்றி விழாவை முன்னிட்டு, மதுரை சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

பத்மஸ்ரீ கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 75ஆம் நாள் வெற்றி விழாவை முன்னிட்டு, மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள ஷா தியேட்டரில் வடக்கு தொகுதி மக்கள் நீதி மையம் சார்பாக சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

மேலும் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்து புத்தாடைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்டல செயலாளர் எம்.அழகர், சீனிவாசன், குணாஅலி, வண்டியூர் முருகன், கமல் நாகேந்திரன், நாகராஜ், மாரிமுத்து, சேக்முகமது, கரிசல்குளம் முருகன், சுரேஷ், பூமிராஜா, கணேசன், சீனி, சமூக ஆர்வலர் மகேந்திரன் ஜி, எஸ்.பி ஆசைத்தம்பி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.!

75ம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர், தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஊராட்சியின் வரவு,செலவு கணக்குகளை கிராம பொதுமக்களிடம் ஊராட்சி செயலர் செல்லப்பா விவரித்து பேசினார்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் அவர்களின் சிறிய முயற்சியால், பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய டிராக்டர் மற்றும் ட்ரெய்லர் கிராமத்தின் தூய்மை பணிக்காக வாங்கப்பட்டு, கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

மேலும் அன்னை தெரசா கார்டன்,ஜெம் ரெசிடென்சி பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கழிவுநீர் வாய்க்கால் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. சுத்தம், சுகாதாரம், தெருவிளக்கு போன்றவைகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு ஊராட்சியில் உடனுக்குடன் குறைகள் சரி செய்யப்பட்டு வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

சர்வ சமய ஒற்றுமைக்கு பாடுபட்டவர் ஜெயேந்திரர்: எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் புகழாரம்.!

சர்வ சமய ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசினார்.

மதுரை அனுஷத் தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமி களின் 88 ஆவது ஜெயந்தி விழா மதுரை எஸ்.எஸ்.காலனி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் நடை பெற்றது. இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் ‘ குருவே சரணம் என்ற தலைப்பில் பேசினார் அவர் தனது உரையில் பேசியதாவது ஸ்ரீ மகா பெரியவர் என்ற நல்ல குருவின் சிஷ்யராக ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் விளங்கி னார்.குரு பக்திக்கு இலக்கண மாக திகழ்ந்தவர் ஸ்ரீ ஜெயந்திரர். நிறைய சத் காரியங்களை ஸ்ரீ ஜெயந்திரர் செய்திருக்கிறார். ஆன்மீக கல்வி சாலைகள் மருத்துவ மனைகள்”, கோவில்கள் சீரமைப்பு, வேத விற்பன்னர் களை கௌரவித்தல், போன்ற நிறைய காரியங் களை செய்திருக்கிறார். சர்வ சமய ஒற்றுமைக்கு இலக்கண மாக திகழ்ந்தவர். குருவின் கட்டளையை ஏற்று எதை செய்தாலும் அது சிறப்பு. யோக சக்தி இருந்தால் நாம் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று காஞ்சி பெரியவர் சொல்கிறார். ஹோமம், யாகத்தை செய்கிற போது அதில் பலன் கிடைக்கும். மந்திரங்க ளில் காயத்ரியும் விரதங்களில் ஏகாதசியும் சிறந்தது. எந்த காரியத் தையும் மனப் பூர்வமாக பக்தியோடு வழிபாடு செய்தால் அங்கு தேவர்கள் வருவார்கள். இன்று ஸ்ரீ மகா பெரியவர் போல ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமி களும் தோன்றாத் துணையாக நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.பக்தி மார்க்கத்தில் ஆதிசங்கரர் ராமானுஜர் மத்வாச்சாரியார் என்ற குருமார்கள் மூன்று அருள் கொள்கை களை நமக்கு தந்திருக்கிறார்கள். உலகத்தில் குரு வழிபாடு என்பது பாரத தேசத்தில் மட்டும்தான் உள்ளது. குருவின் அருள் இருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம். உலகம் என்பது வீடானால் பாரத தேசம் எனது பூஜை அறை என்கிறார் சுவாமி விவே கானந்தர். இந்தியா வின் யோக கலை உலக மெங்கும் விஸ்வரூபம் இன்று எடுத்து இருக்கிறது. இந்த மண்ணில் தோன்றிய குருமார்கள் குருநாதர்கள் உலகை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆதிசங்கரர் பரமேஸ்வரனின் அவதாரம் என்கிறார் ஸ்ரீ மகா பெரியவர். இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசினார். முன்னதாக ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமி களின் திரு உருவப்படத்திற்கு கல்யாண சாஸ்திரிகள் தலைமை யில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.நிகழ்ச்சி ஏற்பாட்டினை அனுஷத் தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந் தார்.

மதுரை மாவட்டம் கப்பலூரில் ரோட்டரி சங்கங்கள் மூலம் 46 ஆயிரம் மரங்களுடன் மியாவாக்கி குறுங்காடுகள்.!

ரூபாய் 30 லட்சம் செலவில் கப்பலூரில் மதுரை ரோட்டரி சங்கங்கள் மூலம் 46 ஆயிரம் மரங்களுடன் மியாவாக்கி குறுங் காடுகள் மதுரையில் உள்ள 8 ரோட்டரி சங்கங்கள் மூலம் ரூபாய் 30 லட்சம் செலவில் 46 ஆயிரம் மரங்களுடன் கூடிய மியாவாக்கி குறுங்காடுகள் கப்பலூரில் உருவாக்கப் பட்டு வளர்ந்துள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு மதுரை இன்னோ வேட்டர்ஸ் ரோட்டரி சங்கமும் மெட்ரோ ஹெரிடேஜ் ரோட்டரி சங்கமும் முன்னிலை வகித்து மற்ற 6 ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள திறந்த வெளி இட ஒதுக்கீடான சுமார் 4.25 ஏக்கரில் ஏறக்குறைய ரூ.30 லட்சம் செலவில் 46,000 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் குறுங்காடாக ஏப்ரல் 2021ல் நட்டு உருவாக்கினார்கள்.

அம்மரக்கன்றுகள் 16 மாதங்களில் 10 சதவிகித வளர்ச்சியை எட்டி ஒரு அடர்ந்த அழகிய வனமாக தோற்றமளிக்கிறதென இத்திட்டத்தின் தலைவர் சசி போம்ரா பெருமிதத்துடன் கூறினார்.
இந்த குறுங்காட்டினை ரோட்டரி 3000 மாவட்ட ஆளுநர் தேர்வு ஆனந்த ஜோதி தியாகராஜா மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் ரோட்டரி சங்க தலைவர்கள் பார்வையிட்டனர்.


இத்திட்டத்திற்கு மும்பையிலுள்ள சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தங்களுடைய சமூக நல நிதி யிலிருந்து ரூ.10 லட்சம் அளித்துள்ளனர். மேலும், விகாஸா பள்ளியின் 1984 மற்றும் 1985 ம் வருட மாணவர்கள் இணைந்து இத்திட்டத்திற்கு ரூ. 5 லட்சம் வரை உதவி புரிந்துள்ளனர்.

இம்மரங்களின் நீண்ட நெடிதுயர்ந்த வளர்ச்சிக்காக முதல் 18 மாதங்களுக்கு நீர் பாய்ச்சல், களையெடுத்தல் மற்றும் கத்தரித்தல் ஆகிய பணிகளை கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இது சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் ரோட்டரியுடன் இணைந்து கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கம் கையெழுத்திட்டுள்ளது என அச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. முகேஷ் அகர்வால் குறிப்பிட்டார். பதினாறே மாதங்களில் ஒரு அருமையான அடர்வனம் உருவாகியுள்ளது. அதிலும் சில மரங்கள் 12 அடியிலிருந்து 15 அடி வரை கம்பீரமாக வளர்ந்து உள்ளது

இத்திட்டத்தின் ஆக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் சக்திவேல் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா உயரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா உயரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா உயரும் என்று மதுரையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேசினார்.

மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா ஹோட்டல் ஜேசி ரெசிடென்சி அரங்கில் நடைபெற்றது. பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்

விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், ஆடிட்டர் சேது மாதவா, தொழிலதிபர்கள் வினோதன், சூரத் சுந்தரேசங்கர் உட்பட பலர் பேசினர்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சேவா ரத்னா விருது வை வழங்கி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்

அவர் பேசியதாவது:-
நாடு சுதந்திரம் பெற எண்ணற்ற தேசத் தலைவர்கள் செய்த தியாகங்களை, இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லும் வண்ணம் கடந்த மூன்று தினங்களாக தேசிய கொடியை நான் வழங்கி வருகிறேன்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எத்தனையோ சுதந்திர தின விழா நடைபெற்று உள்ளது.

ஆனால் அப்போதெல்லாம் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், தனியார் நிறுவனங்களில் தான் தேசிய கொடி ஏற்றுவார்கள்.

ஆனால் இந்த 75வது சுதந்திர தின விழாவில் நாட்டுக்காக உழைத்த தியாகிகளுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம், அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடியினை ஏற்றுமாறு பாரதப் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

அதனை தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
அரசின் சார்பிலேயே  சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன,

தற்போ இந்த சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகளில் சேவை செய்த சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் பாரதி யுகேந்திர சார்பில், விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் நீங்கள் பல்வேறு சாதனை புரிய இந்த விருது  வாய்ப்பாக அமையும்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கல்வி, பொருளாதாரம் உணவு உற்பத்தி ஆகியவற்றின் 15 சகவீதம் தான் இருந்தோம், ஆனால் இன்றைக்கு முன்னேறி மற்ற நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நிலையில் நமது இந்தியா உயர்ந்திருக்கிறது,
அது மட்டுமல்ல வருகின்ற 100 வது சுதந்திர தின விழாவில் கல்வியில், பொருளாதாரத்தில், உணவு உற்பத்தியில் 100% எட்டுவோம்.

மேலும் உலக வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டு வகையில் நமது இந்திய தேசம் உயரும் என்று பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை பாரதி யுகேந்திரா மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்

ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து அசத்தி வரும் அனைத்து வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளை நிர்வாகிகள்

ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து அனைத்து வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளை நிர்வாகிகள் அசத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமழம் வட்டம் தேனிபட்டி,
கே.புதுப்பட்டியை மையமாக கொண்டு (29/11/2020) அன்று அனைத்து வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளை சார்பாக 24 மணி நேர இலவச அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்டது.

இச்சேவையை நிறுவனத் தலைவர் பொன்.பாஸ்கரன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

இச்சேவை தொடங்கப்பட்ட 19 மாதங்களில் 418 க்கும் மேற்பட்ட இலவச அவசர ஊர்தி சேவையை வழங்கியுள்ளனர்.
சுற்று வட்டார 84 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு விபத்து மற்றும் அவசர காலங்களில் உயிர் காக்கும் சேவையும், 100 க்கும் மேற்பட்ட பிரசவ கால அவசர ஊர்தி சேவையை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ ராமன் அம்பலம், தலைவராக சிவா, பொதுச்செயலாளராக உறுதி நீலகண்டன், இணை பொது செயலாளராக சாந்தகுமார், செயலாளராக ராஜா, பொருளாளராக சிவராமன், துணைச் செயலாளராக கார்த்திக், இளைஞர் அணி தலைவராக பாண்டித்துரை, இளைஞர் அணி செயலாளராக சரத்குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை அவனியாபுரத்தில் டி.எஸ்.கே டிரஸ்ட் சார்பாக , ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனர் ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை.

75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரத பிரதமர் ஆணைக்கு இணங்க டி.எஸ்.கே டிரஸ்ட் சார்பாக அவனியாபுரம் கிளாட்வே குடியிருப்புப் பகுதியில் அமைந்திருக்கும் டிரஸ்ட் அலுவழகத்தில், ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனர் ஜெயக்குமார் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் டிரஸ்ட் சார்பாக கூத்தியார்குண்டு பகுதியில் மரக்கன்றுகள் நட்டும், ரயில்வே நிலையம் பகுதியில் சாலையோரமாக வசிக்கும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைவர் மணிகண்டன், நாகராஜ், செயலாளர், ரஜேஷ், பொருளார், ராஜேஷ், சரத்குமார், கார்த்திக், புவனேஷ், இன்பராஜ், கோபி, சரவணக்குமார், தர்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு நோட்புக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

75வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக அதன் நிர்வாக அறங்காவலர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயசூரியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

மேலும் 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சபா ராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன், மத்திய அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், கே.ஆர்.கே ராதாகிருஷ்ணன், இர்வின் பார்க்கர், சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டிரஸ்ட் அறங்காவலர் எஸ்.பி.பூமிராஜன் வரவேற்புரை ஆற்றினார்.

டிரஸ்ட் அறங்காவலர் சோலை எஸ்.பரமன் நன்றியுரை கூறினார்

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் மதர் ஹவுஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பாக 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.!

மை மதர் ஹவுஸ் வெல்ஃபேர் ட்ரஸ்ட்.
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் முப்பெரும் விழா மதுரை மாவட்டம் விராதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. புளியங்குளம் சிந்தாமணி விராதனூர் சாமநத்தம் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மூவர்ண கொடி வழங்கப்பட்டது.

விராதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், விளையாட்டில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது..

இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மணிகண்டன், விராதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெரேசா சகாயமேரி ஆகியோர் தலைமை வகித்தனர்.

M.O.LEO.Landmark food p..Ltd..,Madurai அருள்மலைச்சாமி முன்னிலை வகித்தார். டாக்டர் ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியை சதீஸ்வரன், அகிலாஸ்மணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மேலும் மதுரை சுற்றியுள்ள சாலையோர பொதுமக்கள் சுமார் ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கியும் மற்றும் விரகனூர் நெடுஞ்சாலையில் இயற்கை வளத்தை காக்கும் வகையில் 75 மரங்களை நடவு செய்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

ஆடி வெள்ளியை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவிலில் சுமங்கலி பூஜை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னணம்பட்டி பிரிவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சுமங்கலி பூஜை, கூழ் காய்ச்சி படைத்தல், உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.


இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த சுமங்கலி பெண்களுக்கு பாத பூஜை செய்து வரவேற்கப்பட்டது.

தொடர்ந்து குழந்தைகளை வைத்து அம்மனுக்கு 108 புஷ்பாஞ்சலி பால் பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்களும் நடைபெற்றது. காலை கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.

இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீபுரம் ஸ்ரீநிதிஅம்மா, மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்..

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES