Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 121)

செய்திகள்

All News

வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று
Today in History

 வரலாற்றில் இன்று

01-10-2019

நிகழ்வுகள்

இன்று

  1. ?கிமு 331– பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான்.
  2. ?366– முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  3. ?959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
  4. ?965 – பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  5. ?1553 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது.
  6. ?1730 – உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான்.
  7. ?1787 – அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன.
  8. ?1795 – ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இசுப்பிரிமொண்ட் சமரை அடுத்து, பிரான்சு தெற்கு நெதர்லாந்தை அதிகாரபூர்வமாகக் கைப்பற்றியது.
  9. ?1799 – கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார்.
  10. ?1800 – எசுப்பானியா லூசியானாவை பிரான்சிடம் தந்தது. முப்பது மாதங்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா அதனை பிரான்சிடம் இருந்து வாங்கியது.
  11. ?1814 – நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியன்னா மாநாடு கூடியது.
  12. ?1827 – உருசிய-பாரசீகப் போர்: உருசிய இராணுவம் யெரெவானைக் கைப்பற்றியது. ஆர்மீனியாவில் முசுலிம்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
  13. ?1833 – இலங்கையில் சட்டவாக்கப் பேரவை, மற்றும் நிறைவேற்றுப் பேரவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.[1]
  14. ?1843 – நியூசு ஆப் த வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
  15. ?1854 – இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
  16. ?1880 – இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  17. ?1887 – பிரித்தானியா பலூசிஸ்தானைக் கைப்பற்றியது.
  18. ?1892 – இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டு, வெள்ளி நாணயம் அறிமுகமானது.[2]
  19. ?1898 – உருசியாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.
  20. ?1910 – லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
  21. ?1918 – முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கசு நகரைக் கைப்பற்றினர்.
  22. ?1936 – பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் தேசிய அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
  23. ?1939 – இரண்டாம் உலகப் போர்: ஒரு மாத கால முற்றுகையின் பின்னர் செருமனியப் படைகள் வார்சாவா நகரைக் கைப்பற்றின.
  24. ?1942 – இரண்டாம் உலகப் போர்:: அமெரிக்காவின் குரூபர் கப்பல் ஆங்காங்கில் இருந்து பிரித்தானியப் போர்க் கைதிகளை ஏற்றி வந்த லிசுபன் மாரு என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
  25. ?1943 – நாபொலியின் நான்கு நாட்கள்: நேச நாடுகளின் படைகள் நாபொலி நகரைக் கைப்பற்றின.
  26. ?1946 – நாட்சித் தலைவர்களுக்கு நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டன.
  27. ?1949 – மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
  28. ?1953 – சென்னை மாநிலத்தில் இருந்து தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.
  29. ?1960 – நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  30. ?1961 – கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.
  31. ?1964 – சப்பானிய சின்கான்சென் அதி-வேகத் தொடருந்து சேவை டோக்கியோவில் இருந்து ஒசாக்கா வரை ஆரம்பிக்கப்பட்டது.
  32. ?1966 – அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
  33. ?1969 – கான்கோர்டு விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தைத் தாண்டிப் பறந்தது.
  34. ?1971 – வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் ஆரம்பமானது.
  35. ?1975 – சீசெல்சு சுயாட்சி பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட் தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு துவாலு என்ற பெயரைப் பெற்றது.
  36. ?1977 – பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பெலே இளைப்பாறினார்.
  37. ?1978 – துவாலு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  38. ?1979 – ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயை பனாமாவுக்கு மீள் அளித்தது.
  39. ?1982 – சோனி நிறுவனம் முதலாவது குறுந்தகடு ஒலிபரப்பியை (சிடிபி-101) வெளியிட்டது.
  40. ?1985 – மரக்கால் நடவடிக்கை: இசுரேல் தூனிசியாவில் உள்ள பாலத்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தைத் தாக்கியது.
  41. ?1989 – தற்பால்சேர்க்கைத் திருமணத்தை உலகில் முதன் முதலாக டென்மார்க் சட்டபூர்வமாக்கியது.
  42. ?1992 – விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
  43. ?1994 – பலாவு ஐநாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
  44. ?2001 – ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
  45. ?2005 – பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 4 ஆத்திரேலியர் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
  46. ?2006 – பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றப்பட்டது.
  47. ?2012 – ஆங்காங்கில் பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 38 பேர் உயிரிழந்தனர், 102 பேர் காயமடைந்தனர்.
  48. ?2015 – குவாத்தமாலாவில் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக 280 பேர் உயிரிழந்தனர்.
  49. ?2017 – காத்தலோனியாவில் இடம்பெற்ற விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என எசுப்பானிய நீதிமன்றம் அறிவித்தது.
  50. ?2017 – ஐக்கிய அமெரிக்காவின் லாஸ் வேகஸ் மாநிலத்தில் இசை விழா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்டு, 851 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

  1. ?1847 – அன்னி பெசண்ட், ஆங்கிலேய-இந்திய செயற்பாட்டாளர் (இ. 1933)
  2. ?1896 – லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1வது பிரதமர் (இ. 1951)
  3. ?1904 – ஏ. கே. கோபாலன், இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1977)
  4. ?1906 – எஸ். டி. பர்மன், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1975)
  5. ?1912 – கத்லீன் ஒல்லரென்ழ்சா, ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர், அரசியல்வாதி (இ. 2014)
  6. ?1918 – ஜி. வெங்கடசாமி, இந்தியத் தொழிலதிபர், கண் மருத்துவர் (இ. 2006)
  7. ?1924 – ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் 39வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
  8. ?1927 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2001)
  9. ?1928 – சூ சுங்ச்சி, சீனாவின் 5வது பிரதமர்
  10. ?1932 – அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (இ 2009)
  11. ?1936 – கே. எஸ். சிவகுமாரன், ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர்
  12. ?1941 – சி. க. சிற்றம்பலம், ஈழத்து வரலாற்றாய்வாளர், கல்வியாளர், எழுத்தாளர்
  13. ?1941 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2008)
  14. ?1956 – தெரசா மே, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
  15. ?1958 – ஆந்தரே கெய்ம், உருசிய-டச்சு இயற்பியலாளர்
  16. ?1998 – பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சிறுவன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கடைசி மகன் (இ. 2009)

இறப்புகள்

  1. ?1404 – ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) (பி. 1356)
  2. ?1973 – பாபநாசம் சிவன், கருநாடக, தமிழிசை அறிஞர் (பி. 1890)
  3. ?2008 – பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1921)
  4. ?2010 – அவுதவின் தோல்பசு, பிரான்சிய வானியலாளர் (பி. 1924)
  5. ?2012 – எரிக் ஹாப்ஸ்பாம், எகிப்திய-ஆங்கிலேய மார்க்சிய சிந்தனையாளர், வரலாற்றாளர் (பி. 1917)
  6. ?2013 – டாம் கிளான்சி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1947)
  7. ?2014 – ராபர்ட் செரா, வெனிசுவேலாவின் அரசியல்வாதி (பி. 1987)

சிறப்பு தினம்

  1. ?குழந்தைகள் தினம் (எல் சால்வடோர், குவாத்தமாலா, இலங்கை)
  2. ?சீன தேசிய தினம்
  3. ?விடுதலை தினம் (சைப்பிரசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960); (நைஜீரியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960); (பலாவு, ஐக்கிய நாடுகளிடம் இருந்து, 1994); (துவாலு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1978)
  4. ?அனைத்துலக முதியோர் தினம்
  5. ?உலக சைவ உணவு தினம்.

➖➖➖➖➖➖➖➖➖➖

சர்வதேச முதியோர் தினம்

சர்வதேச முதியோர் தினம்

அக்டோபர் 1 2019

முதியோரை பாதுகாப்போம்

குழந்தைகளுக்கு மட்டும்தான் எதிர்பார்ப்புகள் இருக்கும்என்றில்லை முதியவர்களுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகம், பாதுகாப்பு குறித்த அச்சம் இருக்கும்.

வயதான பெற்றோரை பிள்ளைகள் கைவிட்டால் அவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கிறது.

பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களது முதுமை காலத்தில் உடன்வைத்து காத்து பராமரிக்க வேண்டி கடமை பிள்ளைகளுக்கு உண்டு.
ஆனால் இந்த கடமையை இன்றைய தலைமுறை பிள்ளைகள் எளிதாக துறக்கின்றனர்.

இதனால் வயதான காலத்தில் பெற்றோர் அல்லாடுகிற நிலை உள்ளது. அவர்களை கவனிக்க யாருமற்ற சூழலும் உருவாகிறது. இது அவர்களை மன உளைச்சலில் தள்ளுகிறது. ஒரு கட்டத்தில் விபரீத முடிவு எடுக்கவும் வைக்கிறது.
இது பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. இதையடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சமூக நலம் மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்பேரில் அந்த அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. தற்போது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு, நலச்சட்டம்-2007-ன்படி, வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்காமல், பிள்ளைகள் கைவிட்டால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
இப்போது இந்த சட்டத்தை திருத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தண்டனை 3 மாதத்தில் இருந்து 6 மாதமாக அதிகரிக்கப்படுகிறது.
தண்டனையை அதிகரிப்பதுடன் வயதான பெற்றோரை, மூத்த குடிமக்களை பாதுகாக்கிற கடமை யாருக்கெல்லாம் உண்டு என்பதற்கான உறவு வரம்பினை விரிவுபடுத்தவும் வரைவு மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், குழந்தைகள் மட்டுமின்றி தத்து குழந்தைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் ஆகியோருக்கும் மூத்த குடிமக்களை காக்கிற கடமை உண்டு என்பது சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுகிறது.
தற்போது மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் மட்டுமே சட்ட வரம்புக்குள் வருகிறார்கள்.
தற்போது பராமரிப்பு தொகையாக பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் வரை தரலாம் என்றிருக்கிறது. இந்த வரம்பை நீக்கி விட்டு, இப்போது பிள்ளைகள் நல்ல சம்பளம் பெறுவதால் அதற்கு ஏற்ற வகையில் பெற்றோருக்கு கூடுதல் தொகையை பராமரிப்பு செலவாக தரவும் சட்ட திருத்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வயதானவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும் மரியாதைகளையும் கொடுக்கவேண்டும், அவர்களுக்கு உரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிக்கவேண்டும்.

மாற்றம் நம் வீட்டில் இருந்து தொடங்குகிறது

பயன வாரண்ட் கேட்ட நடத்துனரை தாக்கிய காவலர்

YouTube player

திண்டுக்கல்லில் அரசு பேருந்தில் பயணித்த காவலரிடம் பயணத்திற்கான வாரண்ட் கேட்ட பேருந்து நடத்துனரை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

இதை பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார், தற்சமயம் இந்த காணொளி வேகமாக பரவிவருகிறது.

https://www.youtube.com/watch?v=v5F3C0T4LVA&feature=share

பயனவாரண்ட்கேட்டநடத்துனர்தாக்குதல்நடத்தியகாவலர்

 

உலகின் மூத்த மொழி தமிழ் மொழி தோன்றிய இடம் – சிவகங்கை கீழடி

கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ?

1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும்.

2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர் காலத்திற்குப் பிறகே பெரும்பாலும் குடையப்பட்டன. அதன் பழைமையான குகையினைக் கிமு இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஏற்றுக்கொள்கின்றனர். கீழடிச் சான்றுகள் அவற்றுக்கும் முந்தியன.

3. கபாடபுரத்திற்கு நேர்ந்த கடல்கோளின் பின்னர் இன்றைய மதுரை நகரத்திற்குப் பாண்டியர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே தோற்றுவித்து வளர்க்கப்பட்டதே கடைச்சங்கம். கடைச்சங்கத்தின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கே பலர் பல்வேறு குறுக்கு வழக்குகளோடு வருவர். சான்றெங்கே, ஆதாரம் எங்கே என்று நிற்பர். இப்போது கிமு ஆறாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள் தெளிந்த சான்றுகளாகிவிட்டன.

5. ஆதன், சாத்தன் ஆகிய பெயர்கள் நம் இலக்கண உரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன. ஆதனின் தந்தை ஆந்தை எனப்படுவார். சாத்தனின் தந்தை சாத்தந்தை எனப்படுவார். பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆதனின் தந்தையே பிசிர் ஆந்தையார் எனப்பட்டார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் பிசிராந்தையார் பாடிய ஆறு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர் யாராயினும் ஆதன் என்ற பெயர் வைக்கும் பழக்கம் தொல் தமிழரிடையே பரந்திருந்தது என்பது வெள்ளிடைமலை. ஆதன் என்பதற்கு உயிர் என்று பொருள். உயிரன்.

6. ஒடிய மாநிலம் புவனேசுவரம் உதயகிரிக் குகைகளின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ள காரவேலனின் கல்வெட்டு பதின்மூன்று நூற்றாண்டுகளாய் நிலவிய சேர சோழ பாண்டியர்களின் கூட்டாட்சி வலிமையைக் கூறுகிறது. “தமிர தேக சங்காத்தம்” என்பது அக்கல்வெட்டினில் உள்ள தொடர். ஒடிய மன்னன் காரவேலன் அசோகருக்குப் பிறகு அப்பகுதியினை ஆண்டவன். கிமு இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். “அக்கல்வெட்டினில் இருப்பது பதின்மூன்று நூற்றாண்டுகள் இல்லை, வெறும் பதின்மூன்று ஆண்டுகளாகத்தான் இருக்கவேண்டும்” என்ற வழக்கும் ஓடியது. கீழடியில் பெருந்தமிழர் நாகரிகம் செழித்து வளர்ந்திருக்கும் நிலைமையைக் காண்கையில் காரவேலன் கல்வெட்டு கூறுவது பதின்மூன்று நூற்றாண்டுகளாகவே இருக்க வேண்டும்.

7. வைகை ஆறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பேராறாக நிறைந்து ஓடியிருக்க வேண்டும். அதன் கரைவெளி எங்கும் பாண்டியப் பேரரசில் பெருவாழ்வு வாழ்ந்த குடிகளின் தடயங்களைக் கண்டெடுத்திருக்கிறோம்.

8. எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேச்சுமுறை நிலவியிருக்க வேண்டும். மொழித்தோற்றத்தின் இளமைக் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும். அனைத்தையும் கொண்டு கூட்டிப் பார்க்கையில் தமிழ் மொழியின் தொன்மையைப் பகரும் சான்றுகள் பல பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியவை என்பது தெளிவாக நம் கண்ணுக்கே தெரிகிறது.

9. கீழடியில் தங்க அணிகள் கிடைத்திருக்கின்றன. தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட மணிகள் கிடைத்திருக்கின்றன. மண்ணைக் கொண்டு பாண்டங்கள் செய்தல் என்னும் தொழில்நுட்பம் சிறப்படைந்திருக்கிறது. இருப்புப் பொருள்களும் பல்வேறு மாழைப் பொருள்களும் (உலோகம்) பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. தனிப்பான்மையான குடிவாழ்வின் தன்னிகரற்ற வரலாற்று வளர்ச்சி நிலைகள் இவை.

10. இன்றைய நிலைப்பாட்டிலிருந்து வரலாற்றினைப் பார்ப்பது தவறு. மதங்கள், சாதிகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் என இன்று நாம் பற்றிப் பழகியிருக்கும் சிறுகண்களைக்கொண்டு பழைமையில் தேடுவது நன்றன்று. ஒற்றை நிலையில் ஒரு நிலத்தின் வரலாறும் அமையாது. காலப்போக்கில் அது பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். நம் வரலாறெங்கும் அவ்வாறே நிகழ்ந்தது. எது எப்படியாயினும் அன்றைக்கும் இன்றைக்கும் இக்குடிவாழ்வின் பற்றுதலாக இருப்பது ஒன்றேயொன்று. அதுதான் முன்னைப் பழையதும் பின்னைப் புதியதுமான தமிழ்மொழி !

– கவிஞர் மகுடேசுவரன்

ஆஸ்திரேலியாவில் இரண்டாம் மொழிப்பாடத்தில் ‘தமிழ்’

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு படமாக கற்றுத்தரப்படும் என  நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தமிழ் மொழிப்பாடம் உள்ளடங்கிய புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு வெளியிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப்பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மொழிகளையும் பாடத்திட்டத்தில் சேர்க்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை – வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்

ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்முழுவதும்

https://www.youtube.com/watch?v=fVz8ApefHSY

பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயது பொறியாளரான சுபஸ்ரீ, அலுவலகம் முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்துக்கு வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, அங்கே வந்த தண்ணீர் லாரியில் சிக்கி படுகாயமடைந்தார். காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சுபஸ்ரீ உயிரிழந்தார். இதனிடையே அவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,, சுபஸ்ரீ விபத்தில் சிக்கி அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சுபஸ்ரீ விபத்தில் சிக்கியுடன் தண்ணீர் கேட்டு கதறியுள்ளார். அப்போது அருகில் இருந்தார்கள் சுபஸ்ரீக்கு உதவியுள்ளார்கள். உடனே 108ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளார்கள். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆக, அங்கிருந்த லோடு ஆட்டோவில் சுபஸ்ரீயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

 பகுத்தறிவு பகலவனுக்கு அகவைதின வாழ்த்துக்கள்.

கடவுள் மறுப்பு கொள்கையோடு மட்டும் இவரை பார்ப்பது, ஒரு புத்தகத்தின் அட்டையை மட்டும் பார்த்தது போன்று தான்…

பகுத்தறிவு பகலவனுக்கு அகவைதின வாழ்த்துக்கள்.

வின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு



வின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு

பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த பிளென்ஹெய்ம் மாளிகையில் தங்க டாய்லெட் இரு தினங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. அதன்மதிப்பு ஒரு மில்லியன் பவுண்ட். இந்திய ரூபாய் மதிப்பில் 8.88 கோடி. இத்தாலிய கலைஞர் மௌரிஸோ கட்டெலன் இந்தத் தங்க டாய்லெட்டை வடிவமைத்திருந்தார்.இதற்கு முன்பாக நியூயார்க்கின் குக்கென்ஹெய்ம் அருங்காட்சியத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,பிளென்ஹெய்ம் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த தங்க டாய்லெட் திருட்டுப் போகியுள்ளது.டாய்லெட் திருட்டு தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குறைந்தபட்சம் இரண்டு வாகனங்களில் இந்த டாய்லெட்டை திருடர்கள் திருடிக் கொண்டு போய் இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்

*இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்.*

*ஆனால் டாக்டர் பீ ஆர் அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கச் வில்லை தெரியுமா.?*

*பிரிட்டிஷ் நாட்டில் அவர் படித்தச் யுனிவர்சிட்டியில் ஒரு சங்கம் உண்டு. (LAW படித்தவர்களுக்கு மட்டும் அந்த சங்கம், officer club) அந்த சங்கத்தில் உலக அளவில் உள்ள அறிவாளிகள் மட்டுமே உறுப்பினர் ஆக இருக்க முடியும் ஆனால் அவ்வளவு எளிதாக அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆக முடியாது. ஏன் என்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்தவர்கள் மட்டுமே அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆக இருக்க முடியும்.*

*officer club,அந்தச் சங்கத்தில் இந்தியாவில் இருந்து உறுப்பினர் ஆன நபர் ஒரேத் தலைவர் டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் மட்டுமே. டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் அந்த சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும். ஆனால்.அந்த சங்கத்தில் உள்ளவர்கள் தான் நாட்டில் மிகச்சிறந்த தெளிவான, ஆற்றல் பொருந்த்திய அறிவாளியாக இருக்க முடியும்.*

*அப்படி இருக்கும் போது அவர்கள் ஈடுபடும் போராட்டம் எப்படி தவறாகச் இருக்க முடியும். இது தெரியாத ஒரு ஆங்கிலேய அதிகாரி ஒருவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தை பல ஆயிரம் பேரைத் திரட்டி ஈடுபடும் போது டாக்டர் அம்பேத்காரை கைது செய்வேன் என்று பிரிட்டிஷ் அதிகாரி மிரட்டி உள்ளான்.*

*அந்த அதிகாரி. உடனே டாக்டர் அம்பேத்கரை கைது செய்ய முற்படும்போது டாக்டர் அம்பேத்கர் என்னை கைது செய்ய பிடிவாரண்டு இருக்கா என்று கேட்டு உள்ளார்.*

*உடனே அவனும் பிடி வாரண்டு தயார் செய்து கொடுத்துள்ளான். அந்த பிடிவாரண்டை டாக்டர் அம்பேத்கர் டைப் பண்ணி அதை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு
அனுப்பி வைத்தார் அதை பார்த்த பிரிட்டிஷ் அரசு அந்த அதிகாரியை உடனே சஸ்பெண்ட் செய்தது ஏன் என்றால் டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் பிரிட்டிஷ் நாட்டில் உள்ள உலக அறிவாளிகலுக்கான” officer club” சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும். ஆனால் டாக்டர் அம்பேத்காரை அவ்வளவு எளிமையாக கைது செய்ய முடியாது. அந்த அதிகாரி இது கூடத் தெரியாமல் இருந்திருக்கிரானே என்பதால் பிரிட்டிஷ் அரசு அவனை உடனே சஸ்பெண்ட் பன்னியது.*

உடனே டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷ் அரசிடம் ஒருத் கோரிக்கை வைக்கிறார் அந்த போலிஸ் அதிகாரியை சஸ்பெண்ட் பன்னுனா மட்டும் போதுமா என்று? அதற்கு உடனே பிரிட்டிஷ் அரசு அனைத்து பிரிட்டிஷ் அதிகாரிகளையும் வெளியேற்றப்பட்டு அந்த அதிகாரியை பிரிட்டிஷ் நாட்டிற்கே வரவழைத்துக் கொண்டது.

*இந்தியாவில் இருந்து இது வரை அந்த சங்கத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரை தவிர வேறுயாரும் இது வரை உறுப்பினர் ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.*

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES