திருவொற்றியூர் மெட்ரோ டெபோட்டில் பரபரப்பு
திருவொற்றியூரில் , வார்டு 6 , சக்தி கணபதி நகரில் பல வருண்டங்களாக குடி நீருக்காக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த விஷயம் சம்பந்தமாக பல முறை அதிகாரிகளை சந்தித்து மெட்ரோ குடிநீர் வழங்கக்கோரி மனுக்கள் கொடுத்து உள்ளனர். மெட்ரோ குடிநீர் துறையும், 1 மாதத்தில் முடிக்கிறோம், என்று சொல்லி சொல்லி 2 வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த நிலையில் மாதத்தின் 2 சனிக்கிழமை மக்கள் குறை கேட்கும்/ தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று சக்தி கணபதி நகர் பொது மக்கள் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வட சென்னை மாவட்ட துணை தலைவரும் இணைந்து அதிகாரிகளை சந்தித்து பேசி உள்ளனர். இதில் அதிகாரிகளின் பதில் வழக்கம் போல் இருந்த நிலையில் ஆத்திரம் அடைந்த மக்கள், அதிகாரிகளிடம் தங்கள் குறையை கோவமாக கொட்டி தீர்த்தனர், இதில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. பின்பு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட துணை தலைவர் திரு ஜேம்ஸ் மார்ட்டின் அவர்கள், அதிகாரிகளிடம் தங்கள் ஆறுதல் வார்த்தைகள் இதுவரை போதும் இனி வேண்டாம், அடுத்த குறை தீர்ப்பு கூட்டத்திற்குள் குடிநீர் குழாய்கள் ஏற்படுத்தி தர வேண்டும் , அதற்கு திருவொற்றியூர் மெட்ரோ நிர்வாகம் வேகமாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பின்னர், மெட்ரோ அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் நாங்கள் பணியை முடிப்போம் என்று உறுதி அளித்த பிறகு, மக்கள் களைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருவொற்றியூர் மெட்ரோ டெபோட் சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக தென்பட்டது.