தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமான மத்திய அரசின் அவலம் சாடுகிறார் தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநில துணைச் செயலாளர் க.முகமது அலி:
தற்போது வெளியாகியுள்ள செய்தியான எஸ்பிஐ வங்கி வாராக்கடன் தள்ளுபடி இந்திய தேசத்தை அச்சத்தில் ஆழ்த்தும் ஒரு செய்தியாக பார்க்கப்படுகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்பட்டு இச்செய்தி ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான நிர்வாகத்தின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. சிறுவர்கள் தான் பறிகொடுத்த பொருட்களை பக்கத்தில் இருப்பவரிடம் இருந்து திருடிக்கொண்டு அந்த பொருள் தன்னுடையது என்று பறைசாற்றுவது போல் மத்திய அரசுக்கு இணக்கமான தொழிலதிபர்களின் கடன்கள் சுமார் 76 ஆயிரத்து600 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்து இந்திய அரசின் ரிசர்வ் வங்கியிடமிருந்து எடுத்துக்கொண்ட மத்திய அரசு செயல்பாடு சிறுபிள்ளைத்தனமாக அறியப்படுகிறது. இப்பேர்பட்ட நிர்வாகம் தொடருமேயானால் இந்திய தேசத்தின் பொருளாதாரம் மட்டுமல்ல இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிநபரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் இதற்குப் பிறகும் தன்னை மாற்றிக் கொள்ளாத மத்திய அரசு செயல்பட்டால் இந்திய நாடு பொய்யுரைக்கும் நாடு என்று உலக நாடுகள் மத்தியில் உறுதி செய்யப்பட்டு விடும். இச்செயலை தமிழ்நாடு இளைஞர் கட்சி இன் மாநிலத் துணைச் செயலாளர் க.முகமது அலி அவர்கள் வருத்தங்களுடன் கூடிய கண்டனத்தை தெரிவித்தார்.