Saturday , February 22 2025
Breaking News
Home / செய்திகள் (page 113)

செய்திகள்

All News

Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது – தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்டம்…

Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அறிவித்து இருக்கும் காலக்கட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு உதவிமற்றும் நலத்திட்டங்கள் அறிவித்து செயல்பாட்டில் இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தினக்கூலி வேலை செய்வோர்கள், ஏழை,எளியோர் மற்றும் இலங்கை மக்கள் முகாம்கள் என பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சமூக அமைப்பு மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து பொதுமக்களிடம் நிவாரண பொருட்களை பெற்று பாதிப்பு அடைந்த மக்களுக்கு கொண்டு சேர்க்கும்
பணியில் இறங்கி உள்ளது.

நிவாரண பொருட்கள் (மளிகை,கிருமிநாசினி,முகக்கவசம் ) வழங்க உள்ளவர்கள்
கரூர் மாவட்ட தொடர்புக்கு:

வெ.லோகேஷ்
நகர தலைவர்
தமிழ்நாடு இளைஞர் கட்சி
கரூர் மாவட்டம்.
8056920705

இரா.இராஜ்குமார்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு இளைஞர் கட்சி
கரூர் மாவட்டம்.
9786689789

பொருளாதார உதவி:

TamilNadu Ilangyar Katchi
Acc No: 6737473954
IFSC: IDIB000P047
Porur Indian Bank

கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு…

#என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால

குடியேற போறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …

ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.!

என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க …

நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.!

அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க …

நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.!

சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் அப்டினு சொல்லி சிரிச்சாங்க …

நான் மீண்டும் மீண்டு வந்தேன்.!

என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க …

நான் கவர்னர் ஆனேன்.!

இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன் … அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க… தன்னம்பிக்கையாலும் என்னோட கடின உழைப்பாலையும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது.!

எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது.!

அது அவர்களின் வியாதி நம்மை பற்றியும் தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது.!

– கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு.

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

நியூயார்க் : ‘கொரோனா வைரசை தோற்கடிக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபைகூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது இந்தியா உட்பட 188 நாடுகள் இணைந்து ‘கொரோனா வைரசை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்’ என்ற தலைப்பிலான தீர்மானத்தைதாக்கல் செய்தன.இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.மனித குலத்துக்கு மிகப் பெரிய சவாலாகவும் பாதுகாப்புக்கு ஆபத்தாகவும் விளங்கும் இந்த வைரஸ் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.இதற்கு முன் இந்த உலகம் சந்தித்திராத வகையில் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது.எனவே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேசநாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; இந்த செயல்பாடு மிகவும்தீவிரமாக இருக்கவேண்டும்.

தகவல்கள் மருத்துவவசதிகளை பகிர்ந்து கொள்வது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டும் குறிப்புகளை பின்பற்றுவது போன்றவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்.இந்த நெருக்கடியான நேரத்தில் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இன ரீதியாகபாகுபாடு காட்டும் நடவடிக்கை கூடாது. இவ்வாறு அந்ததீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு ரூ.7,600 கோடி உலக வங்கி தாராளம்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக வங்கி சார்பில் இந்தியாவுக்கு 7,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல் பரிசோதனை செய்தல் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் ஆய்வகம் அமைத்தல் மருத்துவ கருவிகள் வாங்குதல் சிறப்பு வார்டுகள் அமைத்தல் ஆகியவற்றுக்காக இந்த நிதியை மத்திய அரசு பயன்படுத்த உள்ளது.இதுதவிர பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒட்டுமொத்தமாக 6,840 கோடி ரூபாயை உலக வங்கி வழங்கியுள்ளது.

உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்… கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி…

உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்… கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி.

வாஷிங்கடன்: உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தாலே போதும், கொரோனா வைரஸ் தாக்கத்தை நிச்சயம் அழித்துவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் முன்னணி வெளியுறவு விவகார ஆய்வாளர் பரீத் ஜக்கரியா.

அமெரிக்காவில் வசித்து வரும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் 14 நாட்கள் பொதுமக்கள் வீடுகளில் முடங்குவது என்பது சாத்தியமில்லை என்றாலும், அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் 14 நாட்களுக்கு சமூக விலகலை கடைபித்து ஒவ்வொருவரும் வீடுகளில் இருந்தோமானால் கோட்பாடு அளவில் அதற்கு பிறகு கொரோனா வைரஸ் பரவுதல் என்பது சாத்தியமாகாது எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த தென்கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா போன்ற நாடுகள் வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், கொரோனாவை அழிக்க வேண்டும், அதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நபரும் எண்ணினால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான யுத்தம் வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார் பரீத் ஜக்கரியா. மேலும், கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் கூட ஆரோக்கியமாக இருப்பது போன்று தான் தெரியும் என்றும், ஆனால் அதனை நோய்வாய்பட்ட ஆரோக்கியமற்றவர்களுக்கு எளிதாக உங்களால் பரப்ப முடியும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

சென்னையில், ஒரே நாளில் 2 மடங்கு கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு.. தமிழகத்திலேயே முதலிடம்
மேலும், தற்போதை சூழலில் அமெரிக்காவில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும், எப்போதும் பரபரப்பாக இயங்கும் சி.என்.என். தொலைக்காட்சி அலுவலகத்தின் ஸ்டூடியோக்கள் கூட ரோபோக்கள் மூலமே இயக்கப்படுவதாகவும் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பரீத். இந்நிலையில் அமெரிக்காவில் இரண்டரை லட்சத்திற்கும் நெருக்கமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய நோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார் பரீத் ஜக்கரியா.
பரீத் ஜக்கரியாவை பொறுத்தவரை வெளியுறவுத்துறை விவகாரங்களில் பழுத்த அனுபவமும், ஆய்வறிவும் உடையவர் என்பதோடு முன்னாள் பத்திரிகையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுயகட்டுப்பாட்டுடன் ஒரு கிராமம் கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை ஜல்லிபட்டி…

சுயகட்டுப்பாட்டுடன் ஒரு கிராமம் கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை ஜல்லிபட்டி…

நடுரோட்டில் சுண்ணாம்பு விளம்பரம் தனித்திரு தவிர்த்திடு வசனங்களுடன்…

மூலிகை தண்ணீரில் கை கால்கள் சுத்தம் செய்ய தண்ணீர் டேங்க்…

அன்னியர்களுக்கு ஊருக்குள் இடம் இல்லை என்ற வசனங்கள் அதுவும் நடுரோட்டில்…

ஊருக்குள் செல்லும் சிறு பாதைகளை கம்பங்களை கொண்டு கேட்…

சமூக இடைவெளியில் மக்கள் ரேஷன் கடையில்…

ஊரெங்கும் கிருமிநாசினி தெளித்தல்…

வியப்பளிக்கிறது இந்த கிராம மக்களின் விழிப்புணர்வு…

இதுபோல ஒட்டுமொத்த தமிழகத்திலும் உள்ள ஒவ்வொரு கிராமமும் விழிப்புணர்வுடன் இருந்தால் கண்டிப்பாக கொரொனா வைரஸ் மட்டுமல்ல எது வந்தாலும் தடுத்து நிறுத்திக்கொள்ளலாம் சுயகட்டுப்பாட்டுடன்…

இளைஞர் குரல் சார்பாக இவ்வூரின் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்…

பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே…

ஆளும் அரசு. பொதுமக்கள் மற்றும் வதந்தி பரப்பும் நபர்களுக்கு வேண்டுகோள்.

பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே.
அவர்களை மதரீதியில் இன ரீதியிலோ பிரித்துப் பார்ப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் தீங்காகும்.
எனவே பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் பார்த்து அவர்கள் மீண்டுவர ஊக்கமும் ஆக்கமும் அளிப்போம்.
வதந்தி பரப்புவோர் தங்களின் அறியாமையான இந்த செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வதந்தி பரப்புவது இந்த தேசத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரான செயலாக சென்றடையும்.வதந்திகலால் பாதிப்பு இல்லாத பல நபர்கள் தற்கொலை செய்துகொள்வதும் நாம் அவர்களை கொலை செய்வதற்கு சமம். என தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில துணைசெயலாளர்.
க.முகமது அலி.அவர்கள் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

நீங்கள் இந்த லிஸ்டில் வராதிருக்க தனித்திருங்கள்…

நீங்கள் இந்த லிஸ்டில் வராதிருக்க தனித்திருங்கள்…

கொடிய வைரஸான கொராணா கொள்ளை நோயில்
*A , B , C & D type* மக்கள் உண்டு.
இவர்களைப் பற்றி சற்று விரிவாகப்பார்ப்போம்.

*அப்போது தான் 21 நாள் தனிமை படுத்துதலின் காரணம் புரியும்.*

உதாரணத்திற்கு
கொள்ளை நோய் அதிகமாக பரவும் ஒரு நாட்டில் இருந்து ஒரு நபர்
விமானம் மூலம் வந்து இறங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்

அவருக்கு விமான நிலையத்தில் அல்லது ரயில் நிலையத்தில்
காய்ச்சல் இருக்கிறதா ? என்று சோதிக்கப்பட்டு
அவருக்கு காய்ச்சல் இல்லை என்பது உறுதியானதும்
அவருக்கு 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுரை கூறி அவரிடம் இருந்து சுயப் பிரமாணம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கிறோம்
அவர் வீட்டில் இருக்கிறார்.

இதற்கு நடுவில் அவரது வீட்டிற்கு சில உறவினர்கள் வந்து அவரை பார்த்து செல்கின்றனர்.
அவரும் தனக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று கருதி அருகில் உள்ள வீடுகளுக்கு செல்கிறார்.
இன்னும் ஒரு வாரம் சென்ற பிறகும் அவருக்கு காய்ச்சல் எதுவும் வராததால்
அவருக்கு பிரச்சனை இல்லை என்று முடிவு செய்து
அவரது குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கித்தர,
வீட்டுக்கு கறி எடுக்க,
மனைவியுடன் கோயிலுக்கு,
கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கும்
சென்று வந்திருப்பார்..

இப்போது இரண்டாவது வாரத்தின் இறுதியில் அவருக்கு காய்ச்சல் அடிக்கும்.
உடனே பயந்து அஞ்சி சுகாதாரத்துறைக்கு போன் செய்வார்.
அவரை உடனே தனிமைபடுத்தும் வார்டில் அட்மிட் செய்து
நோய் தொற்று அறியப்படும்.
*#இவரே_டைப்_A_ஆவார்.*

இவருடன் நேரடி தொடர்பில் இருந்த இவரது குடும்பத்தார் மற்றும் இவர் சென்று பார்த்த உறவினர் வீட்டு மக்கள் மற்றும் அவர் சென்று பார்த்த அவரது தாய் தந்தை , மற்றும் அந்த திருவிழாவில் அவர் கண்ட அவரால் அடையாளம் காண முடிந்த உறவினர்கள், அவர் சென்ற மிட்டாய் கடை வைத்திருப்பவர், கறி கடை வைத்திருப்பவர்
*#இவர்கள்_அனைவரும்_”Type C”*

மேற்சொன்னவர்கள் அனைவரைப் பற்றியும் நமக்கு தெரிந்திருப்பதால் நம்மால் அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும்.
எனவே இது நம் கையில் இருக்கும் விசயம்.

*இப்போது நம் கையில் இல்லாத டைப் B மற்றும் டைப் D மக்களுக்கு செல்வோம்.*

யாரெல்லாம் டைப் B?

அந்த நபர் மிட்டாய் வாங்க சென்ற போது
அவர் அருகில் நின்று வேறு பொருட்கள் வாங்க வந்த நபர்கள்…
அவர் கறி வாங்க சென்ற போது அவர் அருகில் நின்று கறி வாங்கிய நபர்கள்…
அந்த திருவிழாவில் அவருக்கு இதுவரை தொடர்பில் இல்லாமல் இவர் அருகில் வந்து சென்ற மக்கள்…
அவர் தாய் தந்தையை பார்க்க பேருந்தில் சென்றிருந்தால் அந்த பேருந்தில் முன் சீட் பின் சீட் பயணித்த அடையாளம் காண முடியாத மக்கள்…
*#இவர்கள்_அனைவரும்_டைப்_B*

இந்த டைப் B மக்களை அந்த பாதிக்கப்பட்ட டைப் A நபரால் கூட அடையாளம் கூற முடியாது.
மேலும் அந்த டைப் B நபர்களுக்கும் தாங்கள் நோயைப்பெற்றுள்ளோம் என்பது தெரியாது.
இவர்கள் சமூகத்தில் தங்களை அறியாமல் தொற்றைப்பரப்பிக் கொண்டிருப்பார்கள்…

*#இவர்கள்_மூலம்_தொற்றைப்_பெறுபவர்கள்_தான்_Type_D_மக்கள்.*

இந்த டைப் D மக்களிடம் இருந்து நோய் தொற்றை பெறுபவர்கள்
B1 , B2 என்று சாரை சாரையாக உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

சரி இந்த கொள்ளை நோய் சங்கிலித்தொடரை எப்படி முறிப்பது?

சமூகம் தனித்திருப்பதனால் மட்டுமே இதனை செய்ய முடியும்.

*காரணம் டைப் A மற்றும் டைப் Cஐ மட்டும் தனிமையில் வைத்திருந்து டைப் B மற்றும் டைப் D வெளியில் உலாவிக்கொண்டிருந்தால் கொள்ளை நோய் வீரியமாக காட்டுத்தீ போல் பரவும்.*
எனவே அனைவரையும் வீட்டில் இருக்கச்சொல்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த டைப் B மற்றும் டைப் D மக்கள் தங்களுக்கு அறிகுறிகள் ஆரம்பித்த உடன்
வெளியே மருத்துவமனைகளை நாடுவார்கள்…
உடனே அவர்களது வீட்டை முழுமையாக இன்னும் கடினத்தன்மையுடன் தனிமைப்படுத்திட வேண்டும்.

இப்படியாக நோயின் காத்திருப்பு காலமான 14முதல் 21 நாட்களை நாம் கடந்தால்

முழுமையாக டைப் B மற்றும் டைப் D மக்களை வெளியே கொண்டு வந்து கண்டறிந்து தனிமைப்படுத்திட முடியும்.

இதனால் கொள்ளை நோய் பரவுவது தடுக்கப்படும்

*இதுவே இந்த 21 நாள் ஊரடங்குக்கு பின்னால் உள்ள சூத்திரமாகும்.*

இதை உணர்வோம்,
தெளிவோம்,
*#தனித்திருப்போம்.*

அரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி உதவி மேசையின் களப்பணியாளர்கள் சமூக பாதுகாவலர்கள் பீட்ரூட் சூப் வழங்கினார்கள்…

அரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி உதவி மேசையின் களப்பணியாளர்கள் சமூக பாதுகாவலர்களுக்கு பீட்ரூட் சூப் வழங்கினார்கள். Aravakurichi Help Desk 24*7 உருவாவதற்கு காரணமாக இருந்த வக்கீல்  ஹக் அண்ணா அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களில் பலரும் பலவிதமான குறைபாடுகள்

#Covid
#Stayathome
#indialockdown
சமீபத்தில் வந்த தகவல்…

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களில் பலரும் பலவிதமான குறைபாடுகள் அதாவது இரத்தக் கொதிப்பு அதாவது பிளட் பிரஷர், சர்க்கரை நோய்,இதய நோய், சில நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்,இது போன்ற பலதரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்களில் பலரும் இந்த திடீர் ஊரடங்கு உத்தரவை எதிர்பார்க்கவில்லை.

அன்றாடம் சாப்பிடும் மாத்திரைகள் பலருக்கும் சென்றடையவில்லை வாங்கி வைத்துக் கொள்ளவும் இல்லை.

இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு மாத்திரைகள் வீட்டுக்கு சென்று அடைய ஏதாவது வழி வகை இந்த அரசாங்கம் செய்தால் நன்றாக இருக்கும்.

 

இரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே..! மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள்.

இரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே..! மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள்.

கொரோனா பரவலைத் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலன் கருதி, வாகனக் கடன் மற்றும் இதர கடன்களுக்கான தவணைத் தொகை வசூலிப்பதில் இருந்து, அடுத்த இரு மாதங்களுக்கு வங்கிகள் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் மாதம் 14 ந்தேதிவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.

இதனை வரவேற்று அனைத்து மக்களும் வீடுகளுக்குள் முடங்கி இருக்க தயாரானாலும், பலர் தங்கள் குடும்ப நிதி நிலை மற்றும் வாழ்வாதாரத்தை எப்படி எதிர் கொள்ள போகிறோம் ? என்று கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வேலை இல்லை என்பதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து, தங்களிடம் உள்ள சேமிப்பை சாப்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்வார்கள் என்று அரசு கருதலாம். மாதச் சம்பளத்தையும், தினக்கூலியையும் மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்தும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் இந்த நெருக்கடி நிலையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பதை பதைப்பில் உள்ளனர்.

மாதச் சம்பளக்காரர்களுக்கோ, வங்கியில் பெற்றுள்ள தனி நபர் கடன், இரு சக்கர வாகனக் கடன், கார் கடன் , வீட்டுக்கடன் போன்றவற்றின் தவணைத் தொகைகள் மாதம் பிறந்ததும் கதவை தட்ட தயாராகி விடுமே என்ற அச்சம், ஏழை எளிய மக்களுக்கோ, வேலை இல்லாமல் அடுத்த 21 நாட்களை கடன் வாங்கியே கடக்க வேண்டிய கடுமையான நிலை..!

தமிழகத்தில் அரிசி வாங்கும் ரேசன்கார்டு தாரர்களுக்கு தலா 1000 ரூபாயும், இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். அதே போல ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் 1,000 ரூபாய் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டு விட்டது.

அதே நேரத்தில் மாதச் சம்பளத்தின் பெரும் பகுதியை தாங்கள் பெற்ற வங்கிக் கடன்களின் தவணைக்கு கொடுத்து விட்டு, கையை பிசைந்து கொண்டு பட்ஜெட் வாழ்க்கை வாழும் தங்களுக்கு அரசு என்ன செய்ய போகின்றது ? என்ற எதிர்பார்ப்பில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் நடுத்தர வர்க்கத்தினர்..!

அரசு, மாதச் சம்பளம் முழுமையாக வழங்க சொல்லி விட்டாலும் எத்தனை தனியார் நிறுவனங்கள் அரசு உத்தரவை செயல்படுத்தப் போகின்றன என்பது கேள்வி குறிதான். காரணம் தங்களுக்கும் பொருளாதார இழப்பு என்று காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை முழுமையாக வழங்காமல் இழுத்தடிக்க வாய்ப்பு உண்டு…!

அதே நேரத்தில் வங்கிக் கடன்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்கு தவணைத் தொகை செலுத்த தேவையில்லை என்று அறிவித்தால் மட்டுமே, மாதச் சம்பளத்தில் தவணைத்தொகை செலுத்தியே வாழ்க்கையை இழுத்துப் பிடித்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். நெருக்கடி நிலை சீரடைந்த அடுத்தடுத்த மாதங்களில் அந்த இரு தவணைத் தொகையை பிரித்து செலுத்தும் வசதியை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதே முறையில் ஆட்டோ, சரக்கு வாகனம், வாடகை வேன், லாரி உள்ளிட்டவற்றை வங்கிக் கடனில் வாங்கி தொழில் செய்பவர்களுக்கும் வங்கிகள் செய்ய அவகாசம் அளிக்க முன்வந்தால் இந்த 21 நாட்கள் மட்டுமல்ல, கூடுதலாக 10 நாட்கள் கொடுத்தாலும் மன உறுதியுடன் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க லட்சக்கணக்கான மக்கள் தயார் என்கின்றனர்..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த இரு மாத தவணைத் தொகையை, நிலைமை சீரடைந்த பின்னர் பிரித்து வசூலிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுக்கணக்கில் தவணைத் தொகையை உரிய நேரத்தில் செலுத்துவோரிடம் இருந்து, இரு மாதங்களுக்கான தவணையை பின்னர் வசூலிப்பது வங்கிகளுக்கு சிரமமாக இருக்காது என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசின் அறிவிப்பிற்காக மாத சம்பளதாரர்கள் காத்திருக்கின்றனர்..!

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES