20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் பல்வேறு உலக சாதனைகள் ஒரே மேடையில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி சிறப்பு விஜய் டிவி புகழ் ராஜா வேலு மற்றும் விக்னேஷ் சிவா.
மேலும் இந்நிகழ்ச்சியில் முனைவர் க.பாலமுருகன், நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, என் கே பி பி டெக்னாலஜீஸ், இளைஞர் குரல், செல்வி ஐஸ்வர்யா, தொகுப்பாளினி, காந்தி கனகராஜ் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அப்துல் கலாம் அவர்களின் கனவு திட்டமான சேவ் மதர் எர்த், அதாவது 100 கோடி மரங்கள் நட்டு மற்றும் பராமரிக்க போவதாக பசுமை பூமியின் நிறுவன தலைவர் Tree Regan சொன்னது சிறப்பு அம்சம் கொண்டதாக இருந்தது.
தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் மாநில துணைச் செயலாளர் திரு முகமது அலி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு எதிர்கால இளைஞர்களை பற்றியும் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நோக்கம் என்பது பற்றியும் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியை முன் நின்று நடத்திய டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் மல்டிபிள் வேர்ல்ட் ரெக்கார்ட் அச்சீவர், நிறுவனர் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஃப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் டாக்டர் செல்வம் என்கிற உமா தலைமை செயல் அதிகாரி யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஃப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

