Friday , November 22 2024
Breaking News
Home / இந்தியா / கொடூர முகத்தை காட்டும் கொரோனா… கொத்து கொத்தாக செத்து மடியும் சீனர்கள்… நோய்க்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள்
MyHoster

கொடூர முகத்தை காட்டும் கொரோனா… கொத்து கொத்தாக செத்து மடியும் சீனர்கள்… நோய்க்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள்

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாம்பு அல்லது வாவ்வால் மூலமாக பரவியதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக எறும்பு தின்னி மூலமாக பரவியதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இநத் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 717 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் நோய் பாதிக்கப்பட்டு 34,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் 25 நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனெனில் இதுவரை வைரசுக்கு காரணமாக வவ்வால்கள் மற்றும் பாம்புகள் என கருதப்பட்ட நிலையில், தற்போது அலங்கு எனப்படும் எறும்பு தின்னிகளிடமிருந்து பரவிருக்க அதிக வாய்ப்பிருப்பதாக சீன விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில்;- சீனர்களின் உணவு பொருட்களில் ஒன்றான அலங்கு எறும்பின் செதில்கள் மருத்துவ குணம் கொண்டதாகவும், கலை பொருட்கள் செய்வதற்கும் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. எறும்பின் செதில்களை மூடநம்பிக்கையின் பேரில் அவர்கள் அதிகம் வாங்கிச் செல்வது வழக்கம். தற்போது, நடத்தப்பட்ட ஆய்வில் அலங்குவின் உடலில் உள்ள கிருமிகள் கொரோனா வைரசுடன் 99 சதவீதம் ஒத்து போவதாகவும் தென்சீன பகுதியில் உள்ள வேளாண்மை பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், எறும்பு தின்னி உடலில் இருக்கும் வைரஸ்களின் மரபணுவில் 99 சதவீதம் கொரோனா வைரசுடன் ஒத்துப்போவதாக கூறியுள்ளனர்.

 

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES