*டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு :முதல்வருக்கு காயல் அப்பாஸ் பாராட்டு !*
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
சேலம் மாவட்டம் , தலைவாசலில், தெற்காசியாவின் மிகப்பெரிய ஓருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் பேசியது தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது , விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி இல்லை எனவும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலமாக உருவாக்கபடும். இதற்க்கான தனி சட்டம் கொண்டு வரப்படும். விவசாகளின் வேதனைகளை புரிந்து கொண்டு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் பேசியது விவசாயிகளிடம் மகிழ்ச்சியையும் தமிழக மக்களிடம் அமோக வரவேற்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது .மேலும் முதல்வரின் இந்த அறிவிப்பை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது .
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன். மீத்தேன் எடுப்பதற்க்கான திட்டங்களை எதிர்த்து போராடிய அணைத்து மக்களுக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
எனவே : இந்த அறிவிப்பை சட்டபூர்வமாக மாற்ற உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கும்மாறு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.