Thursday , July 31 2025
Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார்…
NKBB Technologies

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார்…

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் (வயது 61) கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.
இந்நிலையில் இன்று 13-10-2021 புதன்கிழமை பிற்பகலில் சிகிச்சை பலனின்றி காலமானார் .அன்னாரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இதழியல் உலகில் நக்கீரன் , தமிழ் முரசு உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றிய வி.அன்பழகன் கடந்த ஏழு ஆண்டுகளாக மக்கள் செய்தி மையம் என்ற ஊடக நிறுவனத்தின் மூலம் கடந்த ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பல முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்தார்.அதன் விளைவாக 23 பொய்வழக்குகள் -குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது -119 நாட்கள் சிறைவாசம் என பலப்பல இன்னல்களை அனுபவித்தார். *இந்த 23 பொய் வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 05-07-2021 அன்று ரத்து செய்து தீர்ப்ப வழங்கியது. *

மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் நோயிலிருந்து மீண்டு வருவார் என்று பெரிதும் நம்பிக்கை கொண்டு இருந்த நேரத்தில் அவரது மறைவு பெரும் துயரத்தை தருகிறது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை ஊடக நண்பர்கள் அனைவருடனும் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

ஆழ்ந்த துயரங்களுடன்
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
13-10-2021

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES