இன்று 12.11.21 கரூர் வள்ளுவர் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் திரு க. செங்குட்டுவன் அவர்களை சந்தித்து இரத்ததான முகாம் நடத்துவது, இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது பற்றி கலந்துரையாடினார்கள்.
‘ஒன்றைக் கொடுத்தால் தான் ஒன்றைப் பெற முடியும்’ என்ற முதுமொழியை சுட்டிக்காட்டி இளைய தலைமுறையினர் இக்கோட்பாட்டை கடைப்பிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.
Help 2 Help அமைப்பின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டிய அவர், Help 2 Help அமைப்பின் முயற்சிகளுக்கு வள்ளுவர் கல்லூரி ஒத்துழைப்பை நல்கும் என்று மகிழ்வுடன் தெரிவித்தார்.
Help 2 Help அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி. திலகவதி, திரு. ரவிசங்கர் இருவருக்கும் Help 2 Help ID வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
திரு. செங்குட்டுவன் அவர்களுக்கு Help 2 Help அமைப்பினர் சார்பாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு. சிவராமன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.