அரசு கல்லூரிகளில் நீங்களும் போராசியர் ஆகலாம் – 2340 பணியிடங்கள்!!!
அரசு கல்லூரிகளில் போராசியர் ஆக ஒரு அருமையான தரும் இது. ஆசிரியர் பணி என்பது மிகவும் அர்ப்பணிப்பான பணி. அதிலும் கல்லூரி போராசியர் பணி என்பது சவாலானது! மாணவர்கள் தடம் மாறும் வயதில் தனது கல்வி கற்ப்பிற்க்கும் திறனால் கல்வியோடு சேர்த்து மாணவர் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் அமையும் சிறப்புமிக்க பணி.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பூர்த்தி செய்யபடாமல் உள்ள 2340 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு TRB தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
*கல்வி தகுதிகள்*
1) PG with NET/SLET/SLST/CSIR
2) Ph.D with Regular
1) ஒரு முதுகலை PG பாடத்தில் 50% அல்லது 55% சதவீதம் மதிபெண்களோடு
NET/ SLET / SLET / SLST / CSIR / JRF தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.
(அல்லது)
2) Ph.D. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
*குறிப்பு*
தொலைதூர Ph.D. தகுதியாக எடுத்து கொள்ள படமாட்டாது ரெகுலரில் படித்து இருக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
*கூடுதல் தகுதிகள்*
1) UG,PG, M.Phil., Ph.D. போன்ற பட்டங்ககளை கல்லூரிக்கு அல்லது பல்கலைக்கழகத்திற்கு ரெகுலரில் சென்று படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தொலைதூர கல்வி மூலம் அல்லது முறையான கல்வி பெறாமல் திறந்த நிலை பல்கலை மூலம் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க கூடாது.
2) கல்லூரிகளில் பட்டங்களும் 28.08.2019 க்கு முன்பாகவே பெற்றிருக்க வேண்டும்.
3) பொதுப்பிரிவை சார்ந்த விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பதாரர் தவிர மற்றவர்கள் முதுகலை பாடத்தில் 49.99 சதவீதம் பெற்றால் கூட தகுதி கிடையாது.
முழுமையாக 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று அதற்க்கு குறையாமல் இருக்க வேண்டும். பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் மட்டும் முழுமையாக 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
4)1-7-2019 அன்று 57 வயதை அடைந்து இருக்கக் கூடாது.
5)கல்வி முறை 10+2+3 என்ற முறையில் இளநிலை கல்லூரி முடித்து இருக்க வேண்டும்.
*தேர்வு நடைபெறும் முறை*
1) முழுமையாக 34 மதிபெண்களுக்கு வரிசை படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
2)கல்லூரி பேராசிரியர் பணி அனுபவத்திற்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் (ஒரு வருடத்திற்கு- 2 மதிப்பெண்கள் என)
3) கல்லூரி பணியில் இருக்கும் போது Ph.D. செய்து கொண்டு இருந்தால் அந்த ஆண்டு கணக்கில் கொள்ள படாது.
*தேர்வு கட்டணம்*
1) Rs. 600 for General / BC / MBC
2) Rs. 300 for SC / ST / PwD
தேர்வுகான கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.
*Net Banking, Debit Card & Credit Card மூலம் செலுத்தலாம்
*Demand Draft DD மூலம் செலுத்த கூடாது.
*மதிப்பெண் பட்டியல்*
கல்வி தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்கள்
*பகுதி 1 – Wrok Experience*
1) கல்லூரி பேராசிரியர் பணி அனுபவத்திற்கு ஆண்டுக்கு இரண்டு மதிப்பெண் வீதம் 15 மதிப்பெண் வரை தரப்படும்.
*பகுதி 2 – Education*
1) Ph.D. க்கு 9 மதிப்பெண்கள்
2)PG without M.Phil. and SET or NET க்கு 5 மதிப்பெண்கள்
3) PG with M.Phil & SLET / NET க்கு 6 மதிப்பெண்கள்.
*பகுதி 3 – Interview*
1) நேர்முக தேர்விற்கு 10 மதிப்பெண்கள்.
ஆக மொத்தம்
அதிகபட்சமாக
15 + 9 + 10 = 34 மதிப்பெண்கள்
மேற்கண்ட வகையில் 34 க்கு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
*மாத சம்பளம்*
₹ 57,700 முதல் ₹ 1,82,400 லெவல்10
*விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*
1 – 10வது மதிப்பெண் சான்றிதழ்
2 – 12வது மதிப்பெண் சான்றிதழ்
3 – இளங்கலை டிகிரி சான்றிதழ்
4 – முதுகலை டிகிரி சான்றிதழ்
5 – முதுகலை கன்சாலிடேட் மதிப்பெண் சான்றிதழ்
6 – NET/SLET etc., சான்றிதழ்
7 – M.Phil. டிகிரி சான்றிதழ் இருந்தால்
8 – Ph.D டிகிரி சான்றிதழ் இருந்தால்
9 – பணிஅனுபவ சான்றிதழ்
10 – ஜாதி சான்றிதழ்
11- அனைத்து பாடமும் தமிழ்வழியில் படித்த PSTM சான்றிதழ் இருந்தால்
*In English*
1. SSLC Marksheet
2. +2 Marksheet
3. UG Degree Certificate
4. PG Degree Certificate
5. PG Consolidated Marksheet
6. NET / SLET Certificate
7. M.Phill Certificate
8. Ph.D. Certificate
9. Experience Certificate
10. Community Certificate
11. Proof for claiming Tamil Medium Reservation – PSTM
*விண்ணப்பிக்கும் பொழுது -*
1) Photo (JPEG format, 20 to 60 kb)
2) Sign (JPEG format, 10 to 30 kb)
3) தனிப்பட்ட E-Mail ID
4) தனிப்பட்ட Mobile Number
இவை அனைத்தும் கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் பொழுது, அனைத்து சான்றிதழ்களும் JPEG வடிவில் – 60 to 120 kb அளவில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
*பணி அனுபவ சான்று அப்லோடு செய்யும் முறை*
அனுபவ சான்றிதழ்கள:
ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் தனித்தனியாக முறையான படிவம் 1 ல் பூர்த்தி செய்து அந்தந்த மண்டல JD அலுவலகம் மூலம் பெறப்பட்டிருக்க வேண்டும்.
*ஆன்லைனில் விண்ணப்பங்களை அப்ளை செய்யும் இணையதளம் *
*www.trb.tn.nic.in*
*மேலும் தகவலுக்கு நோடிசிபிகேஷன் பிடிஎப் டவுன்லோடு செய்ய கீழ்காணும் லின்க்கை பயன்படுத்தவும் -*
*http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf*
*விண்ணப்பங்களை எந்த முதல் எந்த தேதி வரை அப்ளை செய்யலாம் -*
04.09.2019 அன்று காலை முதல்
24.09.2019 அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
*முக்கிய குறிப்பு*
இட ஒதுக்கீடு பின்பற்ற படுவதால் இஸ்லாமிய சமுதாயத்திற்க்கு 3.5 சதவீதமும் மற்ற பின்தங்கிய சமுதாயத்திற்க்கு இட ஒதுக்கீடு வாய்ப்பு இருப்பதால் தவறவிடாதீர்கள்.
வாய்ப்பு என்பது திணம் திணம் உங்களை வந்து அடையாது கிடைக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி போராசிரிய பெருமக்கள் ஆகிய நீங்கள் அரசு பணியில் சேர்ந்து வளமான சமுதாயத்தை உருவாக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.
செய்தி : நா.யாசர் அரபாத்