கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
குளித்தலை அருகே திம்மாச்சிபுரத்தில் அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஸ்ரீ கனக தோணி அம்மன் மற்றும் ஸ்ரீ மலையாள சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இக்கோவிலில் பொன் செல்வம் வகையறா மற்றும் முத்துக்கருப்பன் வகையறா ஆகிய வகையறா இரு பிரிவினர் இடையே கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்துள்ளது. ஐந்து வருடங்கள் திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தைக்குப் பின் கடந்த புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இன்று சுவாமி தேர் ஊர்வலம் நடைபெற இருந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் திருவிழா நடைபெற கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கினை விசாரித்த நீதிபதிகள் திருவிழா நடைபெற இடைக்கால தடை விதித்ததைத் தொடர்ந்து இன்று நீதிபதிகள்நடைபெறவி ருந்த தேர்தல் விழா நிறுத்தப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் திருவிழா தொடர்ந்து நடைபெற கோரி கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜா, லாலாப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் ரமாதேவி ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அவர்கள் தொடர்ந்து திருவிழா நடைபெற வேண்டி கோஷமிட்டவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி: ஜாகிர் உசேன்
ஒளிப்பதிவு : சிவா