மக்களின் எண்ணங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும்: பிடிஐ தலைவர் சி.கே.பிரசாத் வேண்டுகோள்
மக்களின் மன எண்ணங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி.வைஷ்ணவ் மகளிர் கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில், “ஊடகங்களின் பொறுப்பு’’ என்ற தலைப்பில் இரு நாட்கள் நடைபெறும் கருத்தரங் கத்தின் தொடக்க விழா நேற்று நடை பெற்றது. இதில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:
இணையதள வசதி வந்த பிறகு, வரைமுறை இன்றி செய்திகள் வெளி யிடப்படுகின்றன. அதில் உண்மை இருப்பதில்லை. ஊடகங்களில் பொய் யான செய்திகள், பணத்தை பெற்றுக் கொண்டு வெளியிடப்படும் செய்திகள் வெளிவருகின்றன. இதுபோன்ற செய் திகளை இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாக நிரூபிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பது மிகவும் சிரமம். செய்தியாளருக்கு தெரிந்தே தவறாக கொடுக்கப்படும் செய்தி மட்டுமே பொய் செய்தியாக கருதப் படும். தமக்கு கிடைத்த தகவலை உண்மை எனக் கருதி எழுதப்படும் செய்தி, பொய்யாக இருந்தாலும் அதை பொய் செய்தி வரையறைக்குள் கொண்டுவர முடியாது.
பொய் செய்தியை கட்டுப்படுத்த, தன்னாட்சி அமைப்பை ஏற்படுத்தி, அதற்கான விதிமுறைகளை வகுக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்தியாளர்களுக்கு போது மான ஊதியம் மற்றும் சமூக பாது காப்பை உறுதி செய்ய குழு அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மக்களின் பிரச்சினைகளை வெளிப் படுத்தும் ஊடகங்கள் குறைந்துவிட் டன. ஊடகங்கள், ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது. மக்க ளின் பிரச்சினைகளை அரசின் கவனத் துக்கு கொண்டு சென்று, அப்பிரச் சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தரு வதாக ஊடகங்கள் இருக்க வேண்டும். பல ஊடகங்கள் பிரச்சினைகளை எழுதுகின்றன. ஆனால் அவற்றுக்கான தீர்வை எழுதுவதே இல்லை. வெறு மனே விவசாயிகளின் மரணம் குறித்து எழுதும் ஊடகங்கள், அது குறித்து ஆழமாக ஆராய்ந்து, விவசாயிகள் மரணத்துக்கான காரணங்கள், அதை தடுக்கும் வழிமுறைகள், தீர்வுகள் குறித்து எழுதுவதில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஊடகங்கள் எழுதியதற்கும் தேர்தல் முடிவுக்கும் மிகப்பெரிய வித்தி யாசம் இருந்தது. தற்போதுள்ள அரசு 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தொடரும் என, மக்களின் உண்மையான எண்ண ஓட்டத்தை அறிந்து, உறுதியாக கணித்து ஒரு ஊடகமும் எழுதவில்லை. ஊடகங் கள் மக்களின் எண்ணங்களை பிரதி பலிப்பதாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு ஊடக நிறுவனங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் பேசினர். இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி : சிவா