கடந்த ஆண்டு இதே நேரத்தில் மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்த அதே சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது இதுவரை 1800 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன மாநிலம் முழுவதும் கடந்தாண்டு 5000 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டனர் காய்ச்சலின் தீவிர தால் பலர் உயிர் இழந்தனர் இந்த நிலையில் கடலூர்மாவட்டத்தில் மட்டும் ஒன்பது பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இது தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தமிழகத்தில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 1800 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டதாக மத்திய-மாநில அரசுகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன இவை தொடராமல் கட்டுப்படுத்த தமிழக அரசு சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் நாம் மீண்டும் ஒரு சுற்றுப்புற சூழல் சீர்கேட்டை சந்திக்க நேரிடும்.
க.முகமது அலி.
மாநில துணை செயலாளர்.
தமிழ்நாடு இளைஞர் கட்சி.