திருச்சி டிசைன் ஓவியப் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசப்பற்றை வளர்க்கும் விதமாக பாரதியின் எண்ணத் தூரிகையின் வண்ணத் துளிகள் தலைப்பில் மாபெரும் ஓவியக் கண்காட்சியினை திருச்சியில் நடத்தியது.
மகாகவி பாரதியின் 98வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை மத்திய மண்டலம் திருச்சிராப்பள்ளி தலைமை தபால் அலுவலகம் டிசைன் ஓவியப் பள்ளி மாணவர்கள் அபிராமி, தியா, மாலவிகா, பிரீத்தி ஆராதானா, ரமனா, ஸ்ரீநிதி, வர்ஷினி, முத்துமீனா
உள்ளிட்ட மாணவர்கள் வரைந்த 8 ஓவியத்தினை தேர்வுசெய்து மகாகவி பாரதி நினைவைப் போற்றும் விதமாக பாரதி ஓவியத்தினை அஞ்சலட்டை தொகுப்பினை மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன் வெளியிட டிசைன் பள்ளி முதல்வர் நஸ்ரத் பேகம் பெற்று கொண்டார்
மத்திய அஞ்சல் துறை இயக்குனர் தாமஸ் லூர்து ராஜ், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், முதுநிலை அதிகாரி மைக்கேல் ராஜ், ஆர்.எம்.எஸ் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் ரவீந்திரன், டிசைன் பள்ளி தாளாளர் மதன், அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய அலுவலர் ராஜேஸ், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி, யோகாசிரியர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றார்கள்.