பாரத் சேவக் சமாஜ் என்கிற இந்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனம் இன்று தினமலர் நாளிதழில் வெளியிட்ட செய்தி என்னவெனில் ,
BSS இல் அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கும் , தொழில்முறை கல்வி படித்த மாணவர்கள் , வேலை வழங்கும் நிறுவனங்கள் பாரத் சேவக் சமாஜ் மூலம் சான்றிதல் பெற்று வேலை வேண்டுவோர் கொண்டுவரும் சான்றிதழ்கள் அவர்களது நேரடி இணையத்தில் சரிபார்க்குமாறு தெரிவித்துள்ளனர். ஏனெனில் தொழில்முறை கல்வி பயில்பவர்கள் பெரும்பாலும் BSS இல் உரிமம் பெற்ற கல்வி நிலையத்தில் தான் பயில்கின்றனர். ஆனால் சில கல்வி நிறுவனங்கள் உரிமம் பெறாமலும் , தங்களுக்கான உரிமத்தை புதுப்பிக்காமலும் படிக்கும் மாணவர்களுக்கு BSS இன் சான்றிதழ் வழங்கி வருகின்றனர். இன்னும் சிலர் தங்களது தேவைக்காக படிக்காமலே போலியான சான்றிதழ் BSS இல் பெற்றவாறு கல்வி நிலையங்களில் மேலதிக பணம் செலுத்தி பெற்றுக்கொள்கின்றனர். இது பெறுவாரியாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் துணை மருத்துவம் , எலக்ட்ரானிக் படிப்புகளுக்கு நடக்கின்றது.
இதை பற்றி நமது இளைஞர் குரல் பத்திரிக்கு , கரூரில் இயங்கிவரும் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு ஹெல்த் சயின்ஸ் கல்வி நிலையத்தின் சேர்மன் முனைவர். அபுல் ஹசேன் அவர்களிடம் கேட்டபோது ,
கரூரிலும் இது போல் சில தொழில் முறை கல்வி நிலையங்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பிற்க்கு இளங்களை பட்டப்படிப்பு தருவதாக பொய் வாக்குறுதி அளித்து மாணவர் சேர்க்கை செய்துள்ளதாகவும் , மேலும் முறையான உரிமம் பெறாமலும் இயங்கிவருவதாக வருத்தம் தெரிவித்தார். மாணவர்கள் தாங்கள் சேர்ந்துள்ள தொழில்முறை கல்வி நிலையங்களின் உரிமம் சரிபார்ப்பது மிக முக்கியமானது என்பதுடன் தாங்கள் பெற்றுள்ள சான்றிதழ்கள் உண்மை தன்மையை கண்டரிவது அவசியம் என்றும் கூறினார். மேலும் அவர் கூறியதாவது தொழில்முறை கல்வி பணிக்கு அமர்த்தும் ஆசிரிகளின் முழு தகுதிகள் மற்றும் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட வேண்டும். தற்போது BSS அறிவிப்பு மிக முக்கியமானது என்று கூறியுள்ளார்.
BSS இல் சான்றிதழ் பெற்றுள்ளோர் மற்றும் BSS இன் உரிமம் பெற்று நடத்தும் தொழில்முறை கல்வி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கள் சான்றிதழ் மற்றும் கல்வி நிலையத்தின் உண்மை தன்மையை அறிய கீழே உள்ள லின்க்கில் சென்று பார்க்கவும்.
கல்வி நிலையம் பற்றி அறிய : http://www.bssve.in/verifyappinstitutes.asp
சான்றிதழ் சரி பார்க்க : http://www.bssve.in/how-to-communicate.asp
இதைப்பற்றி கடந்த பதினைந்து தினங்களுக்கு முன்பு தினத்தந்தி நாளிதழில் செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.