திருச்சி செப் 13
தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரி சங்கத்தின் மாநில தலைவர் சம்பத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் 13 மற்றும் 14ம் தேதி ஆகிய 2நாட்கள் நடைபெற உள்ளது.
இச்சங்கம் 1954-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
தமிழகத்தில் 44 ஆயிரம் கோயில்களில் உள்ளது, இதனை 400 அதிகாரிகள் மூலம்
கண்காணித்து வருகின்றனர். மேலும் இச்சங்கம் 4மண்டலமாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில்
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் மற்றும் புதிய நிர்வாக பொறுப்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது. மேலும் தீர்மானங்கள் சங்க உறுப்பினர்கள் கொண்டு வரும் கருத்துக்களை குறித்து விவாதிக்க உள்ளது. மேலும் அவர் கூறுகையில் சுமார்
30 முதல்
40கோயில்களை ஒரு செயல் அலுவலர் காண்காணித்து வருகிறார் பெரும் பணி சுமையாகும், எனவே காலி பணியிடங்களில்
செயல் அலுவலர்களை உடனே நிரப்பப்பட வேண்டும்.
கோயில்களில் சிலை திருடப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்
கோவில்களில் சிலை திருட்டு என்பது தடுக்க முடியாமல் உள்ளது இதற்கு காரணம் போதிய பணியாளர்கள் இல்லாமையால் எனவே சுமார் ஆயிரம் பேரை கொண்டு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
சிலையின் தன்மைகளை அறிந்து கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பிரிவை சேர்ந்த பேராசிரியர்கள் மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது
என தெரிவித்தார்.
Trichy JK