தமிழக கொங்குநாடு வேட்டுவகவுண்டர் சங்கம் மற்றும் இளைஞர் அணி நடத்தும் சங்க பெயர் பலகை திறப்பு விழா, கொடியேற்று விழா மற்றும் வாகனப் பேரணி சிறப்பாக நடந்தது.
வீரமிகு கவுண்டர் அய்யா அவர்களின் தவப்புதல்வன் மருத்துவர் திரு பிரபு கவுண்டர் அவர்கள் கரூரில் உள்ள அருள்மிகு அலங்காரவல்லி , சௌந்தர நாயகி உடன்அமர் ஆனிலையப்பருக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
அருள்மிகு பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பேரணி துவங்கி பசுபதிபாளையத்தில் பெயர் பலகை மற்றும் கொடியேற்று விழாவை நடத்தி பின்பு ராயனூர், கொறவபட்டி, தம்மநாயக்கண்பட்டி, ஏரிமேடு, சின்னகுளத்துப்பட்டி, வெட்டுக்கட்டுப்புத்தூர், ஆவுத்திப்பாளையம், மஞ்சநாயக்கன்பட்டி, ரெங்கபாளையம், ஊத்துக்கரைப்பட்டி, நந்தனூர் சீலநாயக்கனூர், வெஞ்சமாங்கூடலூர் சென்றடைந்தது பேரணி .
பின்னர் மருத்துவர் திரு பிரபு கவுண்டர் சீர்மரபினர் நல வாரிய(DNT) விண்ணப்பத்தை வழங்கினார்.
வெஞ்சமாங்கூடலூ ரில் நடந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பொறுப்பாளர்கள், அறிவிப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய திரு மருத்துவர் பிரபு அவர்கள் கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் சங்கம் மற்றும் இளைஞரணி செயல்பாடுகள், வேட்டுவ கவுண்டர் இன மக்களுக்கு சீர்மரபினர் நல(DNT) வாரிய விண்ணப்பத்தை வழங்கினார், பின்னர் வரும் காலத்தில் மக்களுக்கான நலத்திட்டங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ முகாம் போன்றவற்றை நடத்த இருப்பதாகவும் அதற்கு மக்கள் ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொண்டார். தன் தந்தை 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த கொங்கு நாடு வேட்டுவகவுண்டர் சங்கம் மற்றும் இளைஞரணி சங்கத்தை தன் தந்தைக்குப் பிறகு நல்ல வழியில் எடுத்துச் செல்வதற்கு மட்டுமே தனது நோக்கம் என்றும் கூறினார்.
கொங்கு வேங்கை நாட்டின் வீரமிகு சேரமன்னர் வெஞ்சமன் நிர்மாணித்து வழிபாடு செய்துவந்த அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் கோவிலில் பண்ணேர் மொழியம்மை சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மாநில செய்தி தொடர்பாளர்கள்
இராஜ்குமார் & இராஜ்குமார்
தமிழக வேட்டுவ கவுண்டர்கள் சங்கம் மற்றும் இளைஞரணி.
9003401792 & 9786689789