Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் / அழகர் கோவில் சாலையை பசுமையாக்கும் முயற்சியில் இளம் மக்கள் இயக்கத்தினர்.!
MyHoster

அழகர் கோவில் சாலையை பசுமையாக்கும் முயற்சியில் இளம் மக்கள் இயக்கத்தினர்.!

மதுரையில் இருந்து அழகர் கோவில் செல்லும் சாலை முன்னர் மரங்களால் பசுமையாக காட்சியளிக்கும். தற்போது சாலை விரிவாக்கத்திற்காக சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தி விட்டனர்.

தற்பொழுது மரங்களே இல்லாத அழகர்கோவில் சாலை வெறிச்சோடி காட்சியளிக்கிறது. யாராவது மரக்கன்றுகளை நட்டு வைத்து மீண்டும் இப்பகுதியை பசுமையாக மாட்டார்களா என அழகர் கோவில் செல்லும்போது மக்கள் அனைவருக்கும் மனதில் ஒரு கேள்வி எழும். அதை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இளம் மக்கள் இயக்க நிர்வாகிகள்.!

இளம் மக்கள் இயக்கம் மற்றும் பார்வை பவுண்டேஷன் இணைந்து மதுரை மாவட்டம் கடச்சனேந்தல், அழகர்கோவில் சாலையில் மரம் நடும் நிகழ்ச்சியை இளம் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் சோழன் அ.குபேந்திரன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், இளம் மக்கள் இயக்கமும், பார்வை பவுண்டேசனும் இணைந்து இயற்கையை பேணி பாதுகாக்கும் விதமாக இதுவரை 48 ஆயிரம் மரக்கன்றுகள் மதுரை மாநகரின் சாலைகளில் ஓரங்களில் நடப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நட்டு வைப்பதோடு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறோம். மரத்திற்குள் மதுரை, நம் பெயரில் ஒரு மரம் என்ற கொள்கையின்படி நமது இந்திய 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எங்களது இயக்கத்தின் சார்பாக 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வைத்து அதை பராமரிப்பதென முடிவெடுத்துள்ளோம். அந்த வகையில் கடச்சனேந்தல் முதல் அழகர் கோவில் வரை சாலையோரங்களில் மரங்களை நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். ஒரு மனிதன் 10 மரங்களாவது வளர்க்க வேண்டும் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயாவின் கொள்கையை பின்பற்றி, எங்கள் இயக்கத்தின் சார்பாக மரத்தை நட்டு வைத்து அதை முறைப்படி பராமரித்து வருகிறோம். இந்தப் பகுதிகளை பசுமையாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் எனக் கூறினார். இந்நிகழ்வில் செய்தி தொடர்பாளர் அன்பு மற்றும் மேற்கு ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவ,மாணவியர், லதா மாதவன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES