பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே நாகராஜன் அவர்களின் அறிவுறுத்தலின்படி,மதுரை மாநகர் விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர் துரைபாஸ்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலையில், மேலமாத்தூர் ஊராட்சி, காமாட்சிபுரம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டமான பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண் சந்தை திட்டம், பிரதமரின் விவசாயிகளுக்கான ரூபாய் 6000 நிதி உதவி வழங்கும் திட்டம், மண்வள அட்டை, வேம்பு கலந்த யூரியா திட்டம், கிசான் பயிர் காப்பீடு வழங்கும் திட்டம் போன்ற நலத்திட்ட உதவிகள் குறித்து கிராம மக்களுக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் எடுத்து கூறி விளக்கி பேசினார்.
மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி வழங்கினார். இந்நிகழ்வின் போது பாஜக கிளை தலைவர் பாலாஜி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்