தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் நண்பர்கள் உதவியுடன் பள்ளி மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கும் படிக்கும் இளைஞர்களுக்கும் உதவும் வகையில் அம்பேத்கார் திரமென்ஹீர் படிப்பகம் ஒன்றை துவக்கி இருக்கிறார்கள்.
படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் தினசரி செய்தித்தாள்கள் மற்றும் பிற பொருட்கள் வாங்குவதற்கு பிரண்ட்லைன் இதழ் செய்தியாளர் மிஸ்டர் இளங்கோவன் அவர்களும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குறைஞர் மிஸ்டர் ராஜசேகரன் அவர்களும் நிதி உதவி செய்தார்கள்.
தற்போது பள்ளி மாணவர்கள் பள்ளி நாட்களில் தங்கள் பாடம் சம்பந்தமானவற்றையும், விடுமுறை நாட்களில் பொது அறிவு சம்பந்தமான புத்தகங்களை படித்து கொண்டுவருகிறார்கள்.
கிராமத்தில் பிஎட் படிக்கும் ஒரு இளைஞன் அவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். முடிந்தளவு வரும் மூன்று ஆண்டுகளுக்குள் கிராமத்தில் இருக்கும் சுமார் பதினைந்து முதல் இருபது இளைஞர்கள் அரசு பணிக்கு அல்லது பிற பண்ணிக்கோ அனுப்ப செயல் திட்டத்தோடு இந்த படிப்பகம் தயாராகிக்கொண்டிருக்கிறது.
இது ஒரு நல்ல துவக்கம் என்றேதான் கருதவேண்டும் ஏனெனில் கிராமம் முன்னேறினால் நாடு முன்னேறும் நாடு முன்னேறினால் உலகம் முன்னேறும்
நன்றி.