108 ஆம்புலன்ஸ் குஜிலியம்பாறை மருத்துவமனையில் இருந்து கரூர் மருத்துவமனைக்கு ஒரு நோயாளியை ஏற்றி வரும்போது தண்ணீர்ப்பந்தல் என்ற கிராமத்தில் அவசர வாகனம் கோளாறு ஆகி நின்றது.
இப்பொழுது அந்த நோயாளியின் நிலைமை என்னவாகும்?.
அவசர வாகனத்தை எடுக்கும் முன்னர் அனைத்து வசதிகளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பின்னர் வாகனத்தை இயக்குவது நன்றாக இருக்கும்.
மாற்று வாகனம் தண்ணீர் பந்தலுக்கு வருவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆகிவிட்டது இந்த அரை மணி நேரத்தில் நோயாளியின் நிலைமை குறித்து நாம் சிந்திக்க வேண்டும் இது போன்று மற்ற 108 அவசர வாகனங்கள் சரியாக பராமரிக்க படுகின்றனவா என்று மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுத்தால் இன்னும் இந்த 108 சேவை மக்களுக்கு நன்றாக பயன்படும்.