மின் கட்டண உயர்வைக்கண்டித்துதமிழகம் முழுவதும் அ.தி.மு.க.சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.தமிழ்நாட்டில் மாற்றிஅமைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு கடந்த 10ஆம் தேதி முதல் அமலுக்குவந்தது. கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சாரஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததைதொடர்ந்து,கட்டணஉயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.2026–27–ஆம் ஆண்டுவரை புதிய கட்டணஉயர்வு அமலில் இருக்கும்என தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மின் கட்டண உயர்வைகண்டித்து அ.தி.மு.க. சார்பாக தமிழகம் முழுவதும்ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.அதன்படி மின் கட்டணஉயர்வை உடனடியாகதிரும்பப்பெற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பாக அனைத்து மாவட்டங்களிலும்,கண்டனஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. மதுரை மாநகர் அதிமுக சார்பாக, ஜான்சிராணி பூங்கா பகுதியில் முன்னாள் அமைச்சரும்,அதிமுக அமைப்பு செயலாளருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், அவைத்தலைவர் அண்ணாத்துரை, மாவட்ட பொருளாளர் குமார், முன்னாள் மேயர் திரவியம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் கணேஷ்பிரபு, பகுதி செயலாளர்கள் எஸ்.டி.ஜெயபால்,பைகாரா கருப்பசாமி, எம்.எஸ்.கே.மல்லன், சக்தி விநாயகர் பாண்டியன், கறிக்கடை முத்துகிருஷ்ணன், மாணிக்கம், எம்.ஜி.ராமச்சந்திரன், ஞானசேகரன்,ஜோசப் தனுஷ்லாஸ், முக்கூரான்,சண்முகசுந்தரம், சித்தன், வட்டக்கழக செயலாளர்கள் சாய் (எ) உலகநாதன், முனிச்சாலை சரவணன், ஏ.கே.சுந்தர், ஜி.மணிகண்டன், மார்க்கெட் மார்நாடு, கே.கே.நகர் மணி,புதூர் அபுதாகீர்,சின்ன எம்ஜிஆர் ராஜா, வார்டு துணைச்செயலாளர் மேலமாசி வீதி முத்துப்பாண்டி, கார்த்தீஸ்வரிஅண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் அனுப்பானடி பாலகுமார், மகளிரணி நிர்வாகிகள் பாண்டிச்செல்வி ஞானசேகரன்,ராணி நல்லுசாமி, ஆர். மீனா, பாத்திமா, விஜயபிரபா உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்