இன்று 16ந் தேதி வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணை பராமரிப்பு பணி முடிவடைந்தை அடுத்து குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் அழைப்பினை ஏற்று வேடசந்துார் சட்ட மன்ற உறுப்பினர். திரு ச.காந்திராஜன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு நீதிபதி, உதவி பொறியாளர் திரு முருகன், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சவுடீஸ்வரிகோவிந்தன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் திருமதி கவிதாபார்த்திபன். கூம்பூர் உதவி காவல் ஆய்வாலர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர், வே.புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் திரு குப்புச்சாமி, குடகனாறு பாதுகாப்பு சங்கத்தலைவர் திரு ராமசாமி, செயலாளர் பொம்முசாமி, வெள்ளியணை தலைவர் N. சுப்பிரமணி, வெஞ்சமாங் கூடலூர் தலைவர் சிவாஜி, கல் வார்பட்டி தலைவர் “A. ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் கெளசல்யாமுத்துகிருஷ்ணன், வள்ளி பட்டி மாரியப்பன், குப்புச்சாமி, R.வேல்ச்சாமி, விருதலைபட்டி சண்முகம், தங்கதுரை, EX VAO ஆண்டவர், வேடசந்தூர் .கார்த்திகேயன், ரவிசங்கர், கவிதா முருகன். பெருமாள். ஆரோன். ஜெகன்.மணிமாறன். கௌதமன். பொன்ராம். மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு குடகனாறு அணையின் பாதுகாப்பு குறித்தும் அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குடகனாறு வல்லுநர் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யபட்டது. இதில் விவசாயிகள் பொதுமக்கள். கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.