Monday , February 2 2026
Breaking News
Home / செய்திகள் / இந்துக்கள் குறித்து தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவுக்கு பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி கடும் கண்டனம்!!
NKBB Technologies

இந்துக்கள் குறித்து தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவுக்கு பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி கடும் கண்டனம்!!

இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா கடந்த 6 ஆம் தேதி அன்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால்.. இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால் ..பெர்சியனாக இல்லாமல் இருந்தால்.. நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்று இந்துக்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்துகின்ற வகையில் பேசினார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி அவர்கள் ஆ.ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்:- இந்துக்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசிய ஆ.ராசா மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆ.ராசா உடனடியாக பதவி விலக வேண்டும். பதவி விலகாவிட்டால் மதுரை மாநகர் விவசாய அணி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை பாஜக விவசாய அணி சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES